என் மலர்
முகப்பு » slug 267581
நீங்கள் தேடியது "ஜெயங்கொண்டம் கிளை சிறை"
- அடிதடி வழக்கு தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் மணிகண்டனை கடந்த 16-ந்தேதி கைது செய்தனர்.
- பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செட்டித்திருக்கோணம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 24). அடிதடி வழக்கு தொடர்பாக உடையார்பாளையம் போலீசார் மணிகண்டனை கடந்த 16-ந்தேதி கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை உணவு அருந்த வந்தவர் திடீரென்று யாரும் எதிர்பாராத வகையில், கிளைச்சிறையில் மதில் சுவர் மீது ஏறிக்குதித்து தப்பிச் சென்றார். இதுபற்றிய தகவல் அறிந்த சிறை காவலர்கள் உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உஷாரான போலீசார் உடனடியாக மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் அனுப்பினர்.
சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
×
X