என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கேசி பழனிசாமி"
- அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை பதவிக்கு எதிராக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார்.
- அ.தி.மு.க. பெயரில் இணைய தளம் நடத்தி வருவதுடன் தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்கு உரிமை கோரி வந்தார்.
சென்னை:
அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு காவிரி மேலாணமை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்போம் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதையடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து 2018-ல் நீக்கி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமை பதவிக்கு எதிராக கே.சி.பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். இவர் இரட்டை இலை சின்னம் தொடர்பாகவும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த நிலையில் கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்ட போதிலும், இணைய தளத்திலும் தான் பயன்படுத்தும் லெட்டர் பேடிலும் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்த புகாரை தொடர்ந்து கே.சி.பழனிசாமி கடந்த 2020-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் அ.தி.மு.க.வில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் அ.தி.மு.க.வில் சேர்க்கப்படவில்லை.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறார். அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது என கூறி அ.தி.மு.க. நிர்வாகி போலவே தற்போதும் கே.சி.பழனிசாமி மிகத் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
அது மட்டுமின்றி அ.தி.மு.க. பெயரில் இணைய தளம் நடத்தி வருவதுடன் தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்கு உரிமை கோரி வந்தார்.
அவர் அ.தி.மு.க.வின் கட்சி பெயரையும், சின்னத்தையும் 2021-ம் ஆண்டு முதல் தனது இணைய தளத்தில் பயன்படுத்தி வந்ததால் இதுகுறித்து இந்திய தேசிய இணைய பரிவர்த்தனை நடுவரிடம் அ.தி.மு.க. தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த நவம்பர் 29-ந்தேதி அளித்த தீர்ப்பில் கே.சி.பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள், முகவர்கள், வேலையாட்கள் போன்றோர் www.aiadmk.org இணைய தளம் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்ததோடு, அ.தி.மு.க. கட்சிக்கு ரூ.50 ஆயிரத்தை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
- சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
- அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
அ.தி.மு.க.வின் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்த கருத்துகள் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவின் விசாரணையின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில், அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே, கே.சி.பழனிசாமியை கட்சியிலிருந்து நீக்கியதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுகவில் இருந்து கே.சி.பழனிசாமியை நீக்கி பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இந்த மனுவானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
- அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, கடந்த 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். தனது நீக்கத்தை எதிர்த்து 2021-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
குறித்த காலத்துக்குள் தாக்கல் செய்யாமல், 3 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி சி.வி.கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து கே.சி.பழனிசாமி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில், கொரோனா தொற்று காலத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான கால வரம்பை தளர்த்தி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. எனவே, கால தாமதத்துடன் வழக்கை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும். குறித்த காலத்தில் வழக்கு தொடரவில்லை எனக்கூறி தனது மனுவை தள்ளுபடி செய்தது தவறு.
அடிப்படை தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னை கட்சியில் இருந்து நீக்க அதிகாரமில்லை எனவும், தன்னை நீக்கியது கட்சியின் ஆரம்பகால விதிகளுக்கு முரணானது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆஷா அமர்வு அப்போது பதவியில் இருந்த அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.
- கே.சி.பழனிசாமி தரப்பு வக்கீல், மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், அந்த நீக்கம் செல்லாது என கூறினார்.
- மனுதாரர் தரப்பு வக்கீல், அ.தி.மு.க. உட்கட்சி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கூறினார்.
சென்னை:
அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வக்கீல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் உட்கட்சி விவகாரம் குறித்து வழக்கு தொடர முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த கே.சி.பழனிசாமி தரப்பு வக்கீல், மனுதாரர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தமக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கவில்லை என்பதால், அந்த நீக்கம் செல்லாது என கூறினார்.
இந்த மனு எப்படி விசாரணைக்கு உகந்தது என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த விவகாரம் தொடர்பாக வேறு நீதிமன்றத்தில் மனு நிலுவையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வக்கீல், அ.தி.மு.க. உட்கட்சி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக கூறினார்.
இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு தகுதியில்லை என்பதால் அவரது மனுவை தள்ளுபடி செய்வதாக கூறினார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை அந்தந்த நீதிமன்றங்கள் விசாரித்து முடிவெடுக்கலாம் என நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்