என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டி20 உலக்கோப்பை கிரிக்கெட்"
- டி காக் 38 பந்துகளில் 63 ரன்கள் அடித்தார்.
- டி20 கிரிக்கெட்டில் ரோசோவ் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா - வங்காள தேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரரான பவுமா 2 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து டி காக் - ரோசோவ் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். டி காக் 38 பந்துகளில் 63 ரன் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து அதிரடி காட்டிய ரோசோவ் தென் ஆப்பிரிக்காவுக்காக தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.
அவர் 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 8 சிக்சர் 7 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 205 ரன்கள் எடுத்தது.
206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்களாதேசம் அணி களமிறங்குகிறது.
- மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.
- ஆபாசமாக பேசியும் ஆரோன் பிஞ்ச் அபராதத்தில் இருந்து தப்பித்தார்.
டி20 உலகக்கோப்பை தொடங்குவதற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஸ்டம்ப் மைக்ரோஃபோன் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து இன்னிங்சின் ஒன்பதாவது ஓவரில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
அந்த ஓவரின் போது இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லருக்கு பேட்டில் பந்து ஊரசியது போல இருந்தது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் அவுட் கேட்டனர். அதற்கு நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இது தொடர்பாக நடுவரிடம் ஆரோன் பிஞ்ச் முறையிட்டார். அப்போது ஆபாச வார்த்தையில் பேசினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது.
நடுவரை ஆபாசமாக திட்டிய ஆரோன் பிஞ்ச்#AaronFinch #ICC #maalaimalar pic.twitter.com/N7kWCHLCcZ
— Maalai Malar தமிழ் (@maalaimalar) October 11, 2022
ஐசிசி நடத்தை விதி 2.3-ஐ பிஞ்ச் மீறியதாகக் கண்டறியப்பட்டது. இருப்பினும் அவர் அபராதத்தில் இருந்து தப்பித்தார். ஏனெனில் கடந்த 24 மாதங்களில் அவர் செய்த முதல் குற்றமாகும். ஆனால் ஐசிசி பிஞ்சின் ஒழுங்குமுறை மீறியதாக ஒரு குறைபாடு புள்ளியை சேர்த்துள்ளது.
மூன்றாவது நடுவர் மற்றும் நான்காவது நடுவர் ஆகியோருடன் ஆன்-பீல்ட் நடுவர்கள் இருவரும் சேர்ந்து குற்றச்சாட்டை சுமத்தியதாக ஐசிசி அறிக்கை கூறுகிறது.
- டி20 உலக்கோப்பைக்கான வில்லியம்சன் தலைமையில் நியூசிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
- பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார்கள்.
வெலிங்டன்:
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகள் உலகக்கோப்பைக்கான வீரர்களை ஏற்கனவே அறிவித்து இருந்தன.
'சூப்பர்12' சுற்றில் நேரடியாக விளையாடும் முன்னணி அணியான நியூசிலாந்து நேற்று வரை வீரர்களை அறிவிக்காமல் இருந்தது.
இந்த நிலையில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.
வேகப்பந்து வீரர் ஆடம் மிலின், பின்ஆலன், மிச்சேல் பிரேஸ்வெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பிரேஸ்வெல், ஆலன் ஆகியோர் முதல்முறையாக உலகக்கோப்பையில் ஆடுகிறார்கள். இந்த அணியில் 35 வய்தான மார்ட்டின் கப்திலும் இடம் பிடித்துள்ளார்.
இதன் மூலம் அதிக டி20 உலகக்கோப்பையில் விளையாடும் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை கப்தில் படைத்துள்ளார். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டியில் கப்தில் விளையாட உள்ளார். மெக்கல்லம் மற்றும் ராஸ் டெய்லர் ஆகியோர் 6 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-
கானே வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், பின் ஆலன், கான்வாய், கிளன் பிலிப்ஸ், மார்க் சேப்மேன், டேரியல் மிச்சேல், ஜிம்மி நீசம், பிரேஸ்வெல், சான்ட்னெர், சோதி, டிரென்ட் போல்ட் பெர்குசன், ஆடம் மிலின்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்