என் மலர்
நீங்கள் தேடியது "சிபிஎஸ்இ பள்ளி"
- சிபிஎஸ்இ அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம்.
- ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும்.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்கும் மாநில அரசின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்துள்ளது.
அதன்படி, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற, மாநில அரசின் தடையில்லா சான்றை முதலில் பெற தேவையில்லை என்பது புதிய நடைமுறை ஆகும்.
அங்கீகாரம் கோரி நேரடியாக மத்திய அரசிடம் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பிறகு, விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா ? என மாநில கல்வித்துறையிடம் மத்திய அரசு கருத்து கேட்கும்.
ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் விண்ணப்பிக்கும் பள்ளிக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- சி.பி.எஸ்.இ. பிரிவில் படிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடைக்கால தேர்வு நடந்தது.
- சமூக அறிவியல் பாட தேர்வில் மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாததாக பார்க்கப்பட்டது? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
மதுரை:
மதுரை அழகர்கோவில் ரோட்டில் அரும்பனூர் அருகில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவு வகுப்புகள் செயல்பட்டு வருகிறது. அண்மையில் சி.பி.எஸ்.இ. பிரிவில் படிக்கும் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடைக்கால தேர்வு நடந்தது.
இதில் சமூக அறிவியல் பாட தேர்வில் மும்பை மாகாணத்தில் எந்த சாதி தீண்டத்தகாததாக பார்க்கப்பட்டது? என கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் தேர்வில் கேட்கப்பட்ட இந்த கேள்வி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், சி.பி.எஸ்.இ. பள்ளி பாட திட்டத்தின்படியே கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற கேள்விகள் தேர்வுத்தாளில் வராமல் தவிர்ப்போம் என தெரிவித்துள்ளது.