search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்துகளை தவிர்க்க தடுப்பு"

    • சாலை தடுப்பு அமைத்தால் வாகனங்களின் வேகத்தை குறைக்க வழிவகை ஏற்படும்.
    • மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளாபானு உத்தரவின்பேரில் அந்த பகுதியில் உடனடியாக தடுப்பு வைக்கப்பட்டது.

    தருமபுரி, 

    தருமபுரியிலிருந்து கடத்தூர் செல்லும் சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கியமான சாலையாகும். இதனால் இந்த சாலையில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படும். மேலும் சிறு சிறு விபத்துகளும் ஏற்படும் சூழல் இருந்தது.

    இந்த சாலையில் மதிகோன்பாளையம் பகுதியில் உள்ள பனந்தோப்பு ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாகும். எனவே இந்த பகுதியில் சாலை தடுப்பு அமைத்தால் வாகனங்களின் வேகத்தை குறைக்க வழிவகை ஏற்படும். இதன்மூலம் விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தது.

    இதையடுத்து மதிகோன்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷர்மிளாபானு உத்தரவின்பேரில் அந்த பகுதியில் உடனடியாக தடுப்பு வைக்கப்பட்டது. அங்கு தினமும் ஷிப்டு முறையில் போலீசார் நின்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.

    போலீசாரின் இந்த திட்டம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

    ×