search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோபம்"

    • நாம் விரும்பும் ஒருவர் நம் அன்பை உணராமல் இருந்தாலோ, நமக்குக் கோபம் வருகிறது.
    • கோபம் என்பது ஒரு எதிர்மறையான நமக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சி ஆகும்.

    கோபம் என்பது அனைவரிடமும் உள்ள ஓர் இயற்கையான குணம். கோபப்படாமல் எப்படி இருக்க முடியும்? என்று ஒரு சிலர் நினைப்பதுண்டு. நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்காமல் போனாலோ, பிறர் நம்மை துன்புறுத்தினாலோ, நாம் விரும்பும் ஒருவர் நம் அன்பை உணராமல் இருந்தாலோ, நமக்குக் கோபம் வருகிறது. உண்மையில் கோபம் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்தோ மேயானால், உடல் அளவிலான பல சிக்கல்களை இது கொடுக்கிறது, அதுமட்டுமல்லாமல் நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சிகளில் இதுவும் ஒன்று என்று புரியும்.

    சிலர் கோபப்படுவார்கள் ஆனால், அடுத்த நொடியே தன்னை மாற்றிக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவார்கள். ஆனால் ஒரு சிலரோ கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், மற்றவர்களைத் திட்டுவது, கத்துவது, பொருட்களை உடைப்பது, தன்னைத்தானே சுவரில் இடித்துக் கொள்வது, தலையில் அல்லது மார்பில் அடித்துக் கொள்வது என்று தன் கட்டுப்பாட்டை இழந்து தவிப்பார்கள். இயல்பு நிலைக்கு வருவதற்கு மிகவும் துன்பப்படுவார்கள். கோபம் நம் உடலை எவ்வாறு பாதிக்கிறது? அதைக் கையாள்வது எப்படி? என்பது பற்றி இதில் பார்ப்போம்.

    கோபம் எங்கிருந்து உருவாகிறது?

    மூளையில் நம் உணர்வுகளுக்கான தனிப்பட்ட பகுதியான லிம்பிக் வளைவு என்ற ஒன்று உள்ளது. இந்தப் பகுதிக்கு நமது நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அமிங்டலா என்னும் மூளையின் பகுதி கோபத்துடனும், பழிவாங்கும் குணத்துடனும் தொடர்புடையது. இதன் செயற்பாட்டைப் பொறுத்துத்தான் கோபஉணர்வு அதிகமாக உள்ளதா? அல்லது கட்டுப்பாட்டில் உள்ளதா? என்பது உறுதியாகிறது.

    இந்தப் பகுதி சிலருக்கு அதிகமாகத் தூண்டப்படுவதால் எளியனவற்றுக்கும் கூட அதிகமாகக் கோபப்படுகிறார்கள். யாரையாவது கோபப்பட்டுத் திட்டினால் நம் உடலில் சில வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றன. அதனால் நம் உடலுக்குப் பலவிதமான இடர்கள் ஏற்படுகின்றன. அவைகளைப் பற்றி முதலில் பார்ப்போம்.

    கோபப்படும்போது நம் உடலுக்குள் நடப்பது என்ன?

    கோபம் என்பது ஒரு எதிர்மறையான நமக்குத் தீங்கு விளைவிக்கும் உணர்ச்சி ஆகும். கார்ட்டிசால் (Cortisol), நார்அட்ரினலின் (Noradrinaline) என்னும் உட்சுரப்பு நீர் (Hormone) இரத்த ஓட்டத்தில் அதிக அளவில் கலக்கிறது. இவை நம் இரத்த அழுத்தத்தையும் இதயத் துடிப்பையும் அதிகரிக்கச் செய்கின்றன. மூளையில் நினைவுத்திறனுக்கான பகுதியில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சிலருக்குக் கோபம் என்ற உணர்ச்சியின் உச்சத்தில் பக்கவாதம், மாரடைப்பு வருவதை நான் பார்த்திருக்கிறேன்.

    கோபப்படும்போது கீழ்காணும் நிகழ்வுகள் நம் உடலுக்குள் நடக்கின்றன.....

    வேகமான இதயத்துடிப்பு, வேகமான மூச்சு, இறுக்கமான தோள்கள், தாடை மற்றும் கைகளை இறுக்குவது, இரத்த அழுத்தம் அதிகரிப்பது, முகம் சிவத்தல், உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி, நடுக்கத்தை உணர்வது, வயிற்றைக் கலக்குவது போன்ற ஓர் உணர்வு, பதற்றமான அல்லது வெறித்தனமான உணர்வுகளை வெளிப்படுத்துவது, தேவையில்லாத சொற்களைப் பேசுவது.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    என்ன செய்கிறோம் என்ற கட்டுப்பாட்டை இழந்துவிடுவது, இப்படிச் செய்வதால் ஏற்படும் பின் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்கத் தவறிவிடுவது. நட்பு மற்றும் உறவுகளில் பிரிவுகள் ஏற்பட்டு மனஅளவிலான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுவது.

    இத்தனை மாற்றங்களுக்கும் காரணம், கோபப்படும்போது நம் உடலில் கார்டிசால் என்னும் நொதி அதிகமாகச் சுரப்பதுதான். இந்த நொதி மூளையில் உள்ள நினைவுத் திறனுக்கான ஹிப்போகேம்பஸ் எனப்படும் பகுதியில் உள்ள செல்களை அழிக்கிறது, என்று அண்மை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    அதனால்தான் நம் முன்னோர்கள் "ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு" என்ற பழமொழியைக் கூறினார்களோ? ஆம்! அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு நினைவாற்றல் குறைந்து விடக்கூடும். கோபத்தின்போது சுரக்கும் கார்டிசால் மூளையில் உள்ள நினைவுத்திறனுக்கான பகுதியில் உள்ள நியூரான்களை அழிக்கிறது.

    இதனால் மறதி நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே கோபம் நம் உடலுக்குத் தீங்கு செய்யும் ஓர் உணர்வு என்பதைக் கோபப்படாமல் உணர வேண்டும்.

    கோபப்படுவதற்கான காரணங்கள்:-

    *சரியாகத் திட்டமிடாமல் வேலைகளைச் செய்வது.

    *நேரத்தைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளாதது.

    *பிறரிடம் உள்ள எதிர்பார்ப்புகள் நடக்காமல் போவது.

    *பிறரால் ஏற்படும் ஏமாற்றங்கள்.

    *எதிர்மறையான சிந்தனைகள்.

    *பிறரைத் தவறானக் கண்ணோட்டத்திலேயே பார்ப்பது.

    *சரியானத் தூக்கம் இல்லாமல் இருப்பது.

    *மன அழுத்தங்கள்.

    *பிறரின் பிரிவுகள்.

    *நிதி நெருக்கடிகள்.

    *குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள்.

    *அலுவலக வேலை, குடும்பநேரம், வீட்டுவேலைகள் இவற்றைக் கையாள்வதில் ஏற்படும் சிக்கல்கள்.

    *குழந்தைகளை வளர்ப்பது, வீட்டு வேலைகள் பற்றிய முடிவுகளில் குடும்பத்தினரிடம் கருத்து வேறுபாடு இருக்கும்போது, சில வேளைகளில் கோபமான சூழல் ஏற்படலாம். இந்த வகையான கருத்து வேறுபாடுகள் மோதலுக்கு வழிவகுக்கும்.

    *சில சமயங்களில் குழந்தையின் கோபம் அல்லது பற்றின்மை பெற்றோர்களைக் கோபப்படவைக்கும். எடுத்துக்காட்டுக்கு, குழந்தைகள் கோபத்துடன் முரட்டுத்தனமாகப் பேசினால் அல்லது சொல்வதைச் செய்யவில்லை என்றால், அத்தருணத்தில் நீங்களும் கோபப்படலாம்.

    *இயலாமை, வேலையில் மனஅழுத்தம், நோய் மற்றும் உங்களுக்கான போதுமான நேரமின்மை போன்ற பிறகாரணிகளும் உங்களைக் கோபப்பட வைக்கும்.

    நீங்கள் இந்தச் சூழ்நிலையில் இருக்கும்போது, பொறுமையை இழப்பதும், திட்டமிட்டபடி நடக்காத போது கோபப்படுவதும் எளிது. இதில் எது உங்களைப் பாதிக்கிறது? என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் கோபத்தை எளிதாகக் கையாளமுடியும்.

    கோபத்தைக் கையாள்வது எப்படி?

    கோபம் என்பது மனிதனுடைய இயல்பு, கோபப்படாமல் யாரும் இருக்க முடியாது என்ற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். நான் கோபப்படக் கூடாது, கோபப்படக் கூடாது என்று நினைத்துக் கொண்டு அதைக் குறைப்பதற்கான முயிற்சியில் ஈடுபடவில்லை என்றால் அதை நம்மிடம் இருந்து விரட்ட முடியாமல் போய்விடுகிறது. அன்புதான் அனைத்திற்குமான ஆதாரம் என்பதை மனத்தில் பதியவைத்தால் மட்டுமே, கோபத்தை வெல்ல முடியும். கோபத்தைக் கையாள்வதற்குச் சில வழிமுறைகளை இப்போது பார்ப்போம். கோபமான ஒரு சூழ்நிலையைக் கடந்த பிறகு பொறுமையாக அமர்ந்து கீழ்க்காண்பவற்றைச் சிந்தித்துப் பாருங்கள்,

    *எதற்காகக் கோபப்பட்டேன்?

    *கோபத்தின்போது என் உடலிலும், மனத்திலும் ஏற்பட்ட மாற்றங்கள் யாவை?

    *கோபத்திற்கான காரணம் என்ன? இந்தச் சூழலை வேறுவிதமாக எப்படி எதிர்கொண்டிருக்கலாம்? கோபத்தைத் தவிர வேறு ஏதேனும் உணர்வுகளால் (எ.கா: அமைதி) வெளிபடுத்தியிருக்கலாமா? இல்லை கோபம் மட்டுமேதான் தீர்வா?

    *இந்த எதிர்மறையான எண்ணங்களைக் கட்டுப்படுத்த எவ்வாறு முயல வேண்டும்?

    *கோபமான சூழ்நிலையைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் அந்த நேரம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய முடிகிறதா? இல்லை கோபத்தின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கிறோமா? என்று சிந்திக்க வேண்டும்.

    நம் மூளை நமக்குத் தேவையான அனைத்தையும் சொல்லிக் கொடுக்கக் கூடியது. இவ்வாறு நாம் சிந்திக்கத் தொடங்கும்போதுதான் நம் மனத்தில் சில மாறுதல்கள் வரத்தொடங்கும்.

    எளிய கோப மேலாண்மைக்கான கருத்துரைகள்:

    கோபமான நேரங்களில் மூச்சை மெதுவாக்க முயன்றிட வேண்டும். இதற்கு இரண்டு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து நான்கு வினாடிகள் மூச்சைச் சீராக வெளியே விடவும். இப்படிச் செய்யும்போது இதயத் துடிப்பு மெல்ல மெல்லக் குறையத் தொடங்கும்.

    கோபம் குறையச் செய்ய வேண்டியவை:-

    *கோபப்பட வேண்டாம் என்று நினைப்பதை விட்டுவிட்டு அனைவரிடமும் அன்பாக இருப்பேன் என்று மனத்துக்குள் அடிக்கடி கூறிக்கொள்ள வேண்டும்.

    *அதிகக் கோபம் உள்ள நேரங்களில் பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. வார்த்தைகளைக் கடுமையாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும். அந்த நேரத்தில் தண்ணீர் 2 குவளைகள் பருகலாம்.

    *கோபம் என்பது, நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் நஞ்சு என்பதை உணர வேண்டும்.

    *அன்புதான் இந்த உலகத்தின் மொழி என்றும், அன்பு கொண்டு அனைவரையும் வெல்ல வேண்டும் என்றும், பொறுத்தார் பூமி ஆள்வார் என்றும், மனத்திற்கு அடிக்கடி கூறிக்கொள்வது மிகநன்று.

    நாம் அன்பாகவும், அமைதியாகவும் இருக்கும்போதுதான் நம் வாழ்க்கை ஆனந்தமாகவும், நலமாகவும் இருக்கும் என்பதை உணர்ந்து, இப்படிபட்ட கோபம் நமக்குத் தேவையில்லை என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

    இது போன்று செய்வதால் கோப உணர்வால் நம் உடலுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிர்த்திடலாம். உடலுக்கு ஊறு செய்யும் இக்கோபம் நமக்குத் தேவைதானா? சிந்தியுங்களேன்.

    செல்: 75980-01010, 80564-01010.

    • 15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
    • தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அதிக வலி இருக்கலாம். சில சமயங்களில் குறைவான வலியை உணரலாம். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் பாடல் கேட்க பிடிக்கும், சிலருக்கு பேச பிடிக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவாக உள்ள குணாதிசயம் கோபப்படுவது.

    மற்ற நாட்களை விட, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அதிக கோபம் வருவதாக பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தேசிய மருத்துவ நூலகத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், இதுக் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது, 15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

    தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்டுள்ள கட்டுரையில், மாதவிடாய் நோய்க்குறி(PMS) உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக கோபப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள் மனநிலை மாற்றங்கள், அதிகப்படியான பசி, சோர்வு மற்றும் எரிச்சல் ஆகும்.


    இதனுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களின் மனநிலை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால், பெண்கள் அதிகம் எரிச்சலடைவார்கள். அன்றாட வாழ்க்கையில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பெண்கள் கூட மாதவிடாய் நாட்களில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிடுகிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

    ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் மட்டுமே பெண்கள் கோபப்படுகிறார்கள் என்பது கிடையாது. ஒவ்வொரு பெண்ணின் குணாதிசயமும் மாறுப்படுகிறது, அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    எனவே மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஏன் அதிகம் கோபப்படுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். 

    • இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    • அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

    பெங்களூரில் உள்ள காய்கறி கடை ஒன்றில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நிகாரிகா என்ற பயனர் எக்ஸ் தளத்தில் இதுதொடர்பாக 3 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், காய்கறி கடையில் கோபம் அடைந்த பெண்ணின் புகைப்படம் உள்ளது. அதன் அருகில் ஒரு மரத்திலும் அந்த கோபக்கார பெண்ணின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    இந்த புகைப்படங்கள் எதற்காக அங்கு இடம்பெற்றுள்ளது என்ற விபரங்கள் வெளியாகவில்லை. அதே நேரம் வைரலான இந்த புகைப்படத்தால் பயனர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படத்தின் பின்னால் ஏதேனும் கதை உள்ளதா? என ஒரு பயனரும், இந்த படம் போட்டோஷாப் செய்யப்பட்டதா? என மற்றொரு பயனரும் கேள்வி எழுப்பி உள்ளனர். சில பயனர்கள் கேலியான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

    • மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
    • கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    வேலையில் ஏற்படும் சிரமங்கள், குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில மனக்கசப்புகள், படிப்பிலும் மற்ற நண்பர்களிடம் ஏற்படும் சிறு - சிறு சண்டைகள், தற்போதைய வாழ்க்கை முறை, உணவு பழக்கங்கள் என கூறி கொண்டே போகலாம். இந்த மாதிரியான காரணங்களால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கோபம் என்பது சாதாரணமாக வந்து விடுகிறது.

    சில நேரங்களில் கோபம் வந்தால், என்ன செய்கிறோம் என்பதை மறந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு மாரடைப்பு வருகிறது. அதில், சிலர் மரணமும் அடைகின்றனர்.

    இதுபோன்ற உச்சக்கட்ட கோபத்தின் வெளிப்பாட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.


    கொலம்பியா பல்கலைக்கழகம், யேல் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மற்றும் நியூயார்க்கில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூட்டுக் குழு, சில நிறுவனங்களுடன் இணைந்து தீவிரமான, உணர்ச்சிகரமான அனுபவங்கள், இருதய ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை என்பது குறித்து ஆய்வுகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கின.

    இந்த ஆய்வில் கோபத்தின் காரணமாக பதட்டமான நிலை, சோகமான உணர்வுகளால் இதய நோய் அதிகமாக உருவாகும் அபாயம் உள்ளது தெரியவந்துள்ளது.


    அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் கோபத்தின் சிறிய வெடிப்புகள் கூட இருதய ஆரோக்கியத்தை பாதிக்கும் மற்றும் இதய நோய்கள், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தூண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, 8 நிமிட கோபம் மாரடைப்புக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பது தான். எனவே, கோபம் வரும் வேளையில், நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது அமைதி காத்திடு என்பதுதான்.

    • குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.
    • கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும்.

    அன்றாட வாழ்க்கை முறையில் பலரும் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்துக்கு உள்ளாகிறர்கள். குறிப்பாக பெண்களுக்கு வீட்டு வேலைகள், அலுவலகப்பணிகள், குழந்தைகள் பராமரிப்பு, குடும்பத்தின் முக்கிய பொறுப்புகள் ஆகியவற்றை தினசரி கையாள்வதன் காரணமாக எதிர்மறையான மனநிலை மாற்றங்கள் எளிதாக ஏற்படுகின்றன. இதன் விளைவாக பெண்களுக்கு அதிக கோபம், எரிச்சல், சலிப்பு, விரக்தி போன்ற பாதிப்புகள் உண்டாகும். அந்த உணர்வுகளை சத்தமாக திட்டுவது. கத்துவது போன்ற செயல்பாடுகளின் மூலம் அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.

    குறும்பு செய்யும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில், அதிகமாக சத்தம் போட்டு திட்டுவதும். கத்துவதும் பெண்களின் தினசரி நடவடிக்கையாகவே மாறிவிடும். இதன் காரணமாக குழந்தைகளுக்கும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும்.

    குரல் நாண் மற்றும் தொண்டையில் அழுத்தம் ஏற்படும். தொண்டையில் இருக்கும் குரல்வளையில் ஏற்படும் அதிர்வு காரணமாகத்தான் நம்மால் பேச முடிகிறது. சத்தமாக பேசும்போது குரல்வளையில் அதிக அழுத்தத்தோடு அதிர்வு ஏற்படுவதாலும், அடுக்குகளுக்கு இடையில் காற்றோட்டம் குறைவதாலும் உராய்வு ஏற்படுகிறது. இதனால் குரல்வளையில் இருக்கும் மெல்லிய தசைகள் சேதமடையும்.

    மேலும் நாளடைவில் பேசுவதற்கே சிரமம் ஏற்படலாம். அதிகமாக கோபப்பட்டு கத்துபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி 6 மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.

    ஒவ்வொரு முறையும் நீங்கள் கோபத்தில் உங்கள் குரலை உயர்த்தி பேசும்போது, உங்களுடைய இதயத் துடிப்பு அதிகரிப்பதை கவனிக்க முடியும். கோபம் அதிகரிக்கும்போது, உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். அதன் மூலம் இதயம் சீரற்று வேகமாக துடிக்க ஆரம்பிக்கும். சுவாசிக்கும் வேகம் அதிகமாகும். தசைகளில் அதிக அழுத்தம் உண்டாகும். இதன் காரணமாக தசைகள் தளர்ந்துபோக நேரிடும்.

    கோபப்பட்டு கத்துவதால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதன்மூலம் வளர்சிதை மாற்றம் குறையும். தலைவலி, பதற்றம், தூக்கமின்மை, செரிமானக் கோளாறுகள் மற்றும் சரும பிரச்சினைகள் ஏற்படும். எப்போதும் கோபப்பட்டு கத்திக்கொண்டே இருப்பவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    அடிக்கடி கத்திக்கொண்டே இருப்பதால் உறவுகளுக்குள் பிளவு ஏற்படவும். பிள்ளைகள் மற்றும் பெற்றோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநிலையில் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கும்.

    சிறுவயதில்தான் முளை மற்றும் உடல் உறுப்புகளின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். ஆனால் பெற்றோர் அதிக சத்தம் போட்டு கண்டிப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். தொடர்ந்து இத்தகைய கடுமையான சூழ்நிலையில் வளரும் குழந்தைகளுக்கு ஆர்த்ரைட்டிஸ், தலைவலி, முதுகு மற்றும் கழுத்துவலி ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன

    • உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.
    • மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது.

    நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய். உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய் என்பது சுவாமி விவேகானந்தரின் பொன்மொழி ஆகும்.

    எனவே மனதை சரியான திசையில் செலுத்தினால் மனஅழுத்தம் இன்றி நிம்மதியாக இருக்கலாம். உடல் ரீதியாக ஒருவர் எவ்வளவு வலிமையாக இருந்தாலும் மனரீதியில் பலவீனமாக இருந்தால் எளிதாக வீழ்த்தி விட முடியும். எனவே உலக அளவில் இருக்கிற நோய்களில் முதலிடத்தில் இருப்பது மன அழுத்தம் தான்.

    மனஅழுத்தம் ஏற்படுகிற போது ஒருவரின் செயலும், குணமும் மாறுபடுகிறது. இது அவர்களின் முன்னேற்றம் தடைபடுகிறது. தோல்வி அடைகிற போது எழும் கவலை மன அழுத்தமாக மாறுகிறது. நினைத்தது நடக்காத போது வரும் ஏமாற்றம், விரக்தி ஆகிறது. விரும்பியதை அடைய முடியாத போது ஏற்படும் கோபம் ஆத்திரமாக மாறுகிறது.

    குடும்பம், தொழில், வாழ்வியல் சூழல்களில் சிக்கல் ஏற்படும் போது மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. அதை சரியாக கையாள கற்றுக் கொள்ளவேண்டும். இல்லை என்றால் மனிதர்க ளிடம் உளவியல் சிக்கல்கள் அதிகரித்து தவறுகளும், குற்றங்களும் அதிகரிக்க தொடங்கி விடும். எனவே மனதை சமநிலையில் நிறுத்தி நிதானமாக செயல்பட முயற்சிக்க வேண்டும்.

    • நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும்.
    • உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும்.

    உடல் ஆரோக்கியத்தை போல மன நலனையும் பேண வேண்டும். சிலர் எப்போதும் சிடுசிடுவென இருப்பார்கள். சிலரோ பரபரப்பாக சுழன்று கொண்டிருப்பார்கள். மனதை நிதானமாக வைத்திருக்காமல் ஒருவித பதற்றத்துடனே காணப்படுவார்கள். அப்படி இயல்பற்ற நிலையில் இருப்பது ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும். இதயத்திலிருந்து ரத்தம் சீரான அழுத்தத்தோடு வெளிப்படும்போது அது உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும், திசுக்களுக்கும் பரவலாக சென்றடையும்.

    அப்படி சீரான அழுத்தத்தோடு தொடர்ச்சியாக ரத்தம் சென்றால் தான் திசுக்களால் சீராக இயங்க முடியும். அதற்கு இடம் கொடுக்காமல் உடலில் மாற்றங்கள் ஏற்படும்போது ரத்த அழுத்த அளவுகளும் மாறுபடக் கூடும். மிகவும் குறைந்த அளவு ரத்த அழுத்தம் இருந்தாலோ, உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்பட்டாலோ அது பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும். ரத்தமானது, ரத்த நாளங்களின் வழியே பாய்ந்து செல்லும்போது ரத்தநாளச்சுவர்களில் ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தமாகும்.

    120 அளவுக்கு மேலுள்ள அழுத்தம், 'சிஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். 80 அளவுக்கு கீழுள்ள தளர் அழுத்தம் 'டயஸ்டோலிக்' அழுத்தம் எனப்படும். ஒரு மனிதருக்கு பொதுவாக 'சிஸ்டோலிக்' அழுத்தம், 100-ல் இருந்து 120 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும். அதுபோல் 'டயஸ்டோலிக்' அழுத்தம், 70-ல் இருந்து 80 மி.மீ பாதரச அளவில் இருக்க வேண்டும்.

    ஒருவருக்கு ரத்த அழுத்தமானது தொடர்ச்சியாக 120/80 மி.மீ. பாதரச அளவிற்கு மேல் இருந்தால், அது உயர் ரத்த அழுத்தம் எனப்படும். அந்த உயர் அழுத்தங்களினால் உடலில் விரும்பத்தகாத பாதிப்புகள் உண்டாகும். ஒருவருடைய உடல், மன நல செயல் பாடுகளில் ஏற்படும் மாற்றம் ரத்த அழுத்த அளவுகளில் வெளிப்படும். மன உளைச்சல், பதற்றம், பீதி, அச்சம், கோபம், கடுமையான உடற்பயிற்சி, கடும் உடல் உழைப்பு, கடும் குளிர் போன்ற சமயங்களின் போது வழக்கத்தை விட ரத்த அழுத்தம் உயர்ந்தே காணப்படும்.

    நிலைமை சீரடையும்போது ரத்த அழுத்தம் குறைய தொடங்கும். இப்படி உயர்ந்தும், தாழ்ந்தும் காணப்படும் ரத்த அழுத்தம், நாளடைவில் நிலையானதாகி உயர் ரத்த அழுத்த அளவுகளிலேயே நிலைத்து விடும். சிலருக்கு ஏன் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்ற காரணத்தை உடனே கண்டறிய முடியாது. அப்படி காரணத்தை கண்டறிய முடியாமல் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகுபவர்களின் பெற்றோர் மற்றும் முன்னோர்கள் பெரும்பாலும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பார்கள்.

    அவர்களில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு வித்திடும் வகையிலான உடல் செயல்பாடுகளை கொண்டிருப்பார்கள். மன நலனினும் அதன் தாக்கத்தை உணர முடியும். குறிப்பாக மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இவர்களால் அமைதியான முறையில் வாழ்க்கை நடத்த முடியாது. சாப்பிடும் உணவில் உப்பை அதிகம் சேர்ப்பது ரத்த நாளங்களை முறுக்கேறச் செய்து ரத்த அழுத்தத்திற்கு வித்திட்டுவிடும் என்பது அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடும்.

    • ஒருவர் மீது ஒருவருக்குக் கோபம் ஏற்படக் காரணம் என்ன? அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போவதுதான்.
    • சொர்க்கம் - நரகம் என்பதெல்லாம் வேறெங்கும் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. மூர்க்க குணம் கொண்டவன் நரகவாசி. சாந்தகுணம் கொண்டவன் சொர்க்கவாசி.

    நமக்குக் கோபம் அவசியமா. ஏன் கோபம் வருகிறது. யாரிடத்தில் கோபப்படுகிறோம். கோபத்தினால் நமக்குப் பயனுண்டா... இப்படி கோபத்தைப் பற்றிய பல கேள்விகள் எழத்தான் செய்கின்றன.

    மிருகங்கள் நம் மீது கோபப்படுவதில்லை. ஆனால், அவற்றைச் சீண்டினால் நம்மைத் தாக்க வரும். நாயைத் தடவிக் கொடுத்தால் அது வாலாட்டிக் குழையும். நாம் கல்லெடுத்து எறிந்தால் நம்மைக் கடிக்க வரும். சிற்றெறும்புகளுக்கும் கோபம் வரும், நாம் அவற்றை மிதித்துவிட்டால்.

    நம்மையும் சிலர் அப்படிதான் சீண்டிப் பார்ப்பார்கள். நம்மைக் கோபப்படுத்தி, பின்னர் குற்றப்படுத்துவதில் அவர்களுக்கு அப்படியொரு பிரியம். அதற்கென்றே திட்டமிட்டுத் திரிபவர்கள் உண்டு. நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

    உறவினர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்தார், பொது இடங்களில் பார்க்கின்ற மனிதர்கள் என பலதரப்பட்ட மக்களிடையே அப்படிப்பட்டவர்களையும் நாம் பார்க்க முடியும்.

    வேண்டுமென்றே வம்புக்கிழுப்பார்கள். தேவையற்ற வார்த்தைகளைப் பேசுவார்கள். உங்களை ஆத்திரமூட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்வார்கள். மொத்தத்தில் உங்கள் அமைதியைக் கெடுக்க வேண்டும். அதுதான் அவர்களின் நோக்கம். விஷப்பாம்புகளைக் கண்டால் எப்படி துரிதமாக விலகிச் செல்கிறோமோ, அதேபோல் அவர்களிடமிருந்து விலகிச் செல்வதுதான் உத்தமம்.

    சில சந்தர்ப்பங்களில் விலகிச் செல்ல முடிவதில்லை. அத்தருணங்களில் ஞானமாகப் பேசுவதும், புத்திசாலித்தனமாக அவர்களை மேற்கொள்வதும் மிக முக்கியம். இல்லையெனில், உங்கள் கோபத்தைக் கொண்டே உங்களை அழிவுக்கு உட்படுத்திவிடுவார்கள். அதனால்தான், 'தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம்' என்றான் வள்ளுவன்.

    இந்த உலகில் நல்லபடியாய் நாம் வாழ்வதற்குச் சில தகுதிகள் நமக்குத் தேவைப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, 'கோபத்தை அடக்கி ஆளும் திறன்' மற்றும் 'நியாயமான கோபத்தை நேர்மையாக வெளிப்படுத்தும் ஆற்றல்'.

    தவறான நடத்தையைத் திருத்த - சமூக நீதியைப் பாதுகாக்க - எதிர்மறை உணர்வுகளை நீக்க - தன்மானத்தைக் காத்துக் கொள்ள உதவக்கூடிய கோபம் நியாயமானதுதான். ஆனால், அதுவே சரியான வடிகால் இல்லாவிடில் அழிவைத் தந்துவிடும்.

    கண்மூடித்தனமான கோபம் ஆபத்தானது. எத்தனையோ பேருடைய வாழ்க்கை அவர்களுடைய கோபத்தினால் அழிந்த கதைகள் உண்டு. சிறைச்சாலைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் அப்படி வந்தவர்கள்தான். பேசித் தீர்க்க வேண்டிய சாதாரணமான விஷயங்களை, கோபம் பூதாகரமாக்கிவிடும். நிலைமையைத் தாறுமாறாக்குவது கோபம்தானே.

    ஒரு ஜென் குருவை, படைத்தளபதி ஒருவன் பார்க்க வந்தான்.

    குருவை பணிவுடன் வணங்கினான். பின்னர் அவரைப் பார்த்து, 'சொர்க்கம் நரகம் என இருவேறு இடங்கள் உண்டா?' என்று கேட்டான்.

    'நீ யார்?' என்று கேட்டார் குரு.

    'நான் ஒரு சமுராய்' என்று மிடுக்குடன் பதிலளித்தான் அந்தப் படைத்தளபதி. 'சமுராய்' என்பது ஜப்பானில் வீரப் பரம்பரையைக் குறிப்பது.

    கம்பீரமாய் நின்ற அவனிடம், 'சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?' என்றார் குரு.

    அவனுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்துவிட்டது. 'சமுராய்' என்று சொன்ன பிறகும் இப்படிக் கேட்டு அவமானப்படுத்திவிட்டாரே என்ற ஆத்திரத்தில் கொதித்தான்.

    உரக்கச் சிரித்தார் குரு.

    ஒன்றும் புரியாமல் படைத்தளபதி திகைத்தான்.

    'நீ கசாப்புக் கடைக்காரன்போல் தெரிகிறாயே. உன்னை எவன் தளபதியாக நியமித்தான்?' என்றார் குரு.

    படைத்தளபதிக்கு உச்சந்தலைமேல் கோபம் ஏறியது. சட்டென்று தன் உடைவாளை உருவினான்.

    'இப்போதே உங்கள் தலையைக் கொய்துவிடப் போகிறேன்' என்று கர்ஜித்தபடி வாளை ஓங்கினான்.

    'இதோ, இதுதான் நரக வாசல்' என்று நிதானமாகச் சொன்னார் குரு.

    அவன் புரிந்து கொண்டான். பனிபோல் கோபம் மறைந்தது. தலை தாழ்த்தி குருவை வணங்கினான்.

    'என்னை மன்னியுங்கள் குருவே' என்று பணிந்து கூறி, உடைவாளை உறையில் போட்டான்.

    'இதுதான் சொர்க்க வாசல்' என்றார் குரு.

    சொர்க்கம் - நரகம் என்பதெல்லாம் வேறெங்கும் இல்லை. அது நம்மிடம்தான் உள்ளது. மூர்க்க குணம் கொண்டவன் நரகவாசி. சாந்தகுணம் கொண்டவன் சொர்க்கவாசி.

    சிலர் அடிக்கடி கோபப்படுவார்கள். யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவார்கள். அவர்கள் இருக்கும் இடம் நரகத்தைப் போலிருக்கும். அவர்களை யாரும் விரும்பமாட்டார்கள்; நெருங்கிச் செல்ல யோசிப்பார்கள். ஏனெனில், எதற்கெடுத்தாலும் கோபப்படுகின்றவர்கள், எந்த நேரத்தில் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது.

    சாலையில் தங்கள் வாகனத்தை வேறு யாராவது முந்திவிட்டால் சிலருக்குக் கோபம் வந்துவிடுகிறது. விரட்டிச் சென்று அவர்களை முந்தப் பார்ப்பார்கள். பார்த்துப் பார்த்து முறைப்பார்கள். சிலர் சண்டைக்கே வந்துவிடுவார்கள். இது போன்ற சம்பவங்களை நாம் பார்க்கத்தானே செய்கிறோம்.

    சாப்பாட்டில் உப்பு குறைந்துவிட்டால் தட்டோடு தூக்கி வீசுகின்ற ஆண்கள்; பண்டிகைக்குப் பட்டுப் புடவை வாங்கித் தரவில்லை என்று கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டிற்குச் செல்லும் பெண்கள்; கைச்செலவுக்குப் பணம் தராத தந்தையை ஜென்மப் பகையாகப் பார்க்கும் பிள்ளைகள்; மாமியாரை வசைபாடும் மருமகள்கள்; அண்ணன் தம்பி வழக்குகள் - இப்படி ஒரு குடும்பத்திற்குள்ளேயே எத்தனை கோபதாபங்கள்!

    ஒருவர் மீது ஒருவருக்குக் கோபம் ஏற்படக் காரணம் என்ன? அவர்களின் செயல்பாடுகள் பிடிக்காமல் போவதுதான். அதை உடனே அவர்களிடத்தில் சாமர்த்தியமாகப் புரிய வைத்துவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும். அப்படிச் செய்யாமல், மனதிற்குள்ளேயே போட்டு அமுக்கி வைத்துக் கொண்டிருந்தால், அது ஒருநாள் வெடித்துச் சிதறிவிடும்.

    யாரையும் காயப்படுத்தாமல் எதையும் நாகரிகமாகப் பேசி நல்ல இணக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், சிலருக்குப் பேசவே தெரிவதில்லை. உள்ளதைத்தானே சொல்கிறேன் என்று முகத்தில் அடித்தாற்போல் பேசிவிடுவார்கள். அது கோபத்தை அதிகமாக்கி மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்திவிடும்.

    உறவுகளில் ஏற்படுகின்ற பிரிவுகளுக்கும், தேவையற்ற பிணக்குகளுக்கும் ஆத்திரமூட்டும் பேச்சுதானே காரணம். ஒரு சிறு தீக்குச்சியின் நெருப்பு மிகப்பெரிய காட்டையே சாம்பலாக்கிவிடும். அதைப் போன்றதுதான் கோபத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தை.

    கொலைகளும்கூட நிகழ்ந்துவிடுவதுண்டு. பலரின் வாழ்வில் கோபத்தினால் எத்தனை எத்தனை இழப்புகள்!

    மூவேந்தர் பாரி மகளிரைப் பெண் கேட்டு வந்தனர். ஆனால் அவர்களில் யாருக்குமே பெண் கொடுக்க பாரி சம்மதிக்கவில்லை. எனவே, மூவேந்தரும் ஓரணியாக இணைந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். அத்தோடு விட்டிருந்தால் நிலைமை மாறியிருந்திருக்கலாம்.

    ஆனால், மூவேந்தரையும் நோக்கிக் கபிலர் பாடிய பாடல்தான் அவர்களுக்குள் கோபத்தை அதிகப்படுத்தியது. அப்பாடல், புறநானூற்றில் நூற்றொன்பதாவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

    'அளிதோதானே பாரியது பறம்பே-

    நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்...' என்று தொடங்கும் அப்பாடலில் கபிலர் கூறுவது இதுதான்:

    'பாரியின் பறம்பு மலை, நாடி வருவோர்க்கு இரங்கத்தக்கது. ஆனால், மூவேந்தர்களாகிய நீங்கள் ஒன்று கூடி முற்றுகை இட்டாலும், பறம்பு மலையை உங்களால் கைப்பற்ற முடியாது. வாள் கொண்டு செய்யும் போருக்குப் பயந்து, தனது பறம்பு மலையை பாரி தந்துவிடமாட்டான். முற்றுகையின் காலத்தை நீட்டித்து, எங்கள் மக்களையும் வீரர்களையும் நலிவடையச் செய்து கைப்பற்றிவிடலாம் என்றும் எண்ண வேண்டாம். ஏனெனில், உழவர்கள் உழாமலேயே பறம்பு மலை நான்கு வகையான வளங்களை உடையது. எனவே, எக்காலத்திலேயும் பறம்பில் பஞ்சம் இல்லை. நீர் வளத்துக்கும் குறைவே இல்லை. உங்கள் வாள் வலிமைக்குப் பயந்து அவன் தன் மலையை ஒருபோதும் உங்களுக்குத் தாரை வார்க்க மாட்டான்'.

    இப்படியெல்லாம் பேசிய கபிலர், கிண்டலாக மூவேந்தரிடம் இன்னொன்றையும் சொல்கிறார்.

    'பறம்பு மலையை நீங்கள் பெறுவதற்கு ஒரே ஒரு வழி உண்டு. அது என்னவெனில், வடித்து முறுக்கப்பட்ட சிறிய யாழினைப் பண்ணிக் கொண்டு, நறுமணம் கொண்ட கூந்தலை உடைய உங்கள் விரலிகள் பின்னே வர, இரவலராய் ஆடியும் பாடியும் நீங்கள் வருவீர்களானால், கலைக்குத் தானமாக பறம்பு நாட்டையும், பறம்பு மலையையும் உங்களுக்குத் தருவான். எனினும், ஏற்கனவே பல கலைஞர்கள் வந்து ஆடிப் பாடி பறம்பு நாட்டின் முந்நூறு ஊர்களையும் பரிசாகப் பெற்றுச் சென்றுவிட்டார்கள். எனவே, பறம்பு மலையோடு நானும் பாரியும்தான் மிச்சம். தாமதம் பண்ணிவிட்டீர்களே' என்று பரிதாபப்படுவதுபோல் கபிலர் சொன்ன வார்த்தைகள்தான் மூவேந்தரை மூர்க்க வெறி கொள்ளச் செய்தது.

    விளைவு? பாரி கொல்லப்பட்டான். அவன் மகளிர் அனாதைகளாயினர்.

    இருவருக்கிடையே பிரச்சினை வருகின்ற போது, இன்னொருவர் பேசும் வார்த்தைகள் அந்தப் பிரச்சினையை நீக்குவதாக இருந்தால் நல்லது. கோபப்படுவது எப்படி குற்றமோ, அதைவிட பெரிய குற்றம் கோபமூட்டுவது. எனவே, நாம் கோபப்படுகிறோமோ இல்லையோ, கோபமூட்டாமலிருக்கத் தெரிய வேண்டும்.

    பலதரப்பட்ட நண்பர்கள், கருத்தொற்றுமை இல்லாத உடன்பணியாளர்கள், சுயநலமான சொந்தங்கள், புரிந்தவர்கள், புரியாதவர்கள் - இப்படி விதவிதமான மனிதர்களிடையில்தான் நம் வாழ்க்கை இருக்கிறது. முரண்பாடுகள் வரலாம். அதில் தவறில்லை. மோதல்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். நாம் பலியாகிவிடக் கூடாது.

    ஆனால், கோபமே இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? முடியாதுதான். ஏனெனில், உணர்வுகளால் ஆனது வாழ்க்கை. கோபமும் ஒருவகையான உணர்வுதானே. நமக்கு யாராவது அநியாயமோ துரோகமோ செய்துவிட்டால், அவர்கள் மீது வெறுப்பு ஏற்படுகிறது. அது முற்றும் போது கோபமாக உருவெடுக்கிறது. எனினும், கோபத்தைக் கையாள நாம் பழகிக் கொள்ள வேண்டும். எப்படி? அதற்குச் சில எளிய வழிமுறைகள்:

    கோபம் என்பது, நம் புத்தி செயல்படுவதற்கு முன்பே ஆழ்மனத்தில் இருந்து வரும் ஓர் உணர்வு. அதனால், கோபம் ஏற்படும் சூழ்நிலை வரும்போது ஒரு 5 நிமிடம் தியானம் செய்தால் போதும். புத்தி விழித்துக் கொள்ளும். கோபம் மாயமாகிவிடும்.

    கோபம் எழும் வேளையில் நாம் சுய உணர்வை இழந்துவிடக் கூடாது. 'கோபம் வந்தாலும் ஆத்திரப்பட்டு யாரிடமும் எதையும் பேசிவிடக் கூடாது' என்னும் உறுதிப்பாடு மனதில் வேண்டும்.

    கோபம் வரும்போது எளிதாக சுவாசப் பயிற்சி செய்யலாம். ஒன்றுமுதல் ஆறுவரை எண்ணியபடி, மெதுவாக மூச்சை உள்ளிழுங்கள். பின்னர் அதேபோல், ஒன்றுமுதல் ஏழுவரை எண்ணிக்கொண்டு மூச்சை அடக்க முயற்சி செய்யுங்கள். இறுதியாக, ஒன்றுமுதல் எட்டுவரை எண்ணிக்கொண்டு, மூச்சை நிதானமாக வெளியே விடுங்கள். இப்படி பத்து முறை செய்தால் போதும். கோபம் மட்டுமன்றி, பதற்றமும் பயமும்கூட பறந்துவிடும்.

    சிலருக்குக் கோபம் வந்துவிட்டால், இதயத்துடிப்பு அதிகமாகும்; நகங்களைக் கடித்திழுப்பார்கள்; பற்களை நறநற என்று கடிப்பார்கள்; கைகளைப் பிசைவார்கள். நீங்களும் அப்படியெனில், உங்கள் மனதை உடனடியாக அமைதிப்படுத்துங்கள். நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் செய்யுங்கள். இனிமையான இசையைக் கேளுங்கள். புத்தகத்தை வாசியுங்கள். உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்; தசைகள் நிதானமாகும்.

    கோபப்படும்போது நூற்றுக்கணக்கான நரம்புகள் செயல்படுகின்றன. அதிகப்படியான கோபத்தில் நரம்புகள் விரைவில் செயல் இழந்துவிடுகின்றன. கோபம் மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்துவிடும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

    மூளையைப் பாதிக்கும் பக்கவாதத்துக்குக்கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் நம்மை அழிப்பதற்குள் நாம் அதை அழித்துவிட வேண்டும். சினம் கொண்டவன் தன் மன நிம்மதியை இழக்கிறான். அவனுடைய மனைவி பிள்ளைகளும்கூட அவனுடன் பேச அஞ்சுகிறார்கள். அத்தகைய பொல்லாத கோபம் நமக்குத் தேவைதானா! கோபம் என்பது வீரம் அல்ல; அது நம் பலவீனத்தின் வெளிப்பாடு. எனவே, கோபத்தைத் தவிர்ப்போம்; குற்றங்களைத் தடுப்போம். அன்பின் வழியில் வாழ்வை வளப்படுத்துவோம்.

    • எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது.
    • எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன.

    கோபம் என்பது ஒரு விலங்கு தன்னை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளவும் இரை தேடல், இணை தேடல் போன்ற விஷயங்களில் தனக்கு போட்டியாக இருப்பதை பயமுறுத்தி விரட்டவும் உருவான ஒரு செயல். அதுவே மனிதர்களுக்கான காரணம் என்றால், பின்வருமாறு சொல்லப்படுகிறது.

    ஒருவரது நடவடிக்கை நமக்கு பிடிக்கவில்லை அல்லது நாம் எதிர்பார்த்த ஒன்று நடக்கவில்லை என்றால், அவரை நமது வழிக்குக்கொண்டுவர உதவும் ஒரு நடவடிக்கையாக கோபம் உருவாகிறது.

    எல்லா கோபத்துக்கு பின்னாலும் ஒரு ஏமாற்றம் இருக்கிறது. கோபத்தின்போது மூளையில் பல வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

    கோபத்தை குறைப்பதற்கு அடுத்து என்ன செய்யலாம் என அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கும் மூளையில் சில பகுதிகள் உள்ளன.

    மன அழுத்தம், விபத்து, மூளையில் ஏற்படும் நோய்கள், மது போன்றவை மூளையின் கோபத்தை கட்டுப்படுத்தும் பகுதியை பாதிக்கின்றன. அதனால் சிறு விஷயங்களுக்குக்கூட கட்டுப்படுத்த முடியாமல், ஏன் காரணமே இல்லாமல்கூட கடுங்கோபம் ஏற்படுகிறது. அதனால்தான் 'ஆறுவது சினம்' என அவ்வையார் கூறியுள்ளார்.

    அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி.

    எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்பார்ப்புகள் இல்லாமல் ஏற்க தொடங்கினாலே பாதி கோபம் குறைந்துவிடும்.

    இன்னொரு முக்கியமான விஷயம் கோபம் என்பது அனிச்சையாக நடைபெறும் ஒரு பழக்கம். சூடான பாத்திரத்தை தொட்டவுடன் கை அனிச்சையாக பின்செல்வதுபோல், ஒரு நிகழ்வு நடந்ததும் யோசிக்காமல் அனிச்சையாக கோபப்பட்டு பலரும் பழகி இருக்கிறோம். தினமும் காலை எழுந்ததும் ஓர் 5 நிமிடம் இன்ன விஷயங்களுக்கெல்லாம் கோபப்படமாட்டேன் என மனதளவில் தயாராக இருந்தாலே, கோபத்தைப் பெரிதும் தவிர்த்துவிடலாம், என்கிறார்கள் உளவியலாளர்கள்.

    ×