search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர்கள்"

    • டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார்.
    • வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர்.

    பெங்களூரு:

    சமூக வலைதளங்கள் மூலம் நடைபெறும் மோசடிகள், குற்றச்சம்பவங்கள் குறித்து போலீசார் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதை அறியாமல் மோசடி கும்பலின் வலையில் சிக்குபவர்கள் பல லட்சங்களை இழந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

    அந்த வகையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பெங்களூருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் புட்டேனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

    அதில், டெலிகிராம் என்ற செயலி மூலம் நேகா என்கிற மெகர் என்ற பெண் தன்னை தொடர்பு கொண்டார். பின்னர் வாட்ஸ்-அப் மூலம் இருவரும் பேச ஆரம்பித்தோம்.

    அப்போது அவர் எனது கணவர் துபாயில் பணிபுரிகிறார். இதனால் நான் தனிமையில் தவிக்கிறேன். உங்களுடன் உடலுறவில் ஈடுபட விரும்புகிறேன் என கூறியதோடு அவரது புகைப்படங்கள் மற்றும் முகவரியை கூறினார்.

    அதன்படி சம்பவத்தன்று நான் மெகர் வீட்டுக்கு சென்றபோது அங்கு அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென நுழைந்து ஏன் இங்கு வந்தீர்கள் என கூறி என்னை தாக்கினர்.

    பின்னர் என்னை ஆபாசமாக வீடியோ எடுத்து ரூ.3 லட்சம் தராவிட்டால் நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலமாக அழைத்து செல்வோம் என மிரட்டினார். இரவு வரை என்னை சிறைப்பிடித்து வைத்திருந்த அந்த கும்பல் என்னிடம் இருந்த ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டதோடு கூடுதலாக ரூ.2 லட்சம் கேட்டனர்.

    அப்போது என்னுடைய கிரெடிட் கார்டு வீட்டில் இருப்பதாக கூறி நான் வீட்டுக்கு முயன்றபோது ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்தேன். என்னை கடத்தி தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்த வாலிபரை கடத்தி தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் என்பது தெரிய வந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட நேகா என்ற மெகர் மும்பையை சேர்ந்த மாடல் அழகி என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் மும்பை விரைந்து சென்று அவரை பிடித்தனர்.

    மாடல் அழகி நேகா ஹனிடிராப் முறையில் தொழில் அதிபர்கள், வாலிபர்கள் என 50-க்கும் மேற்பட்டோரிடம் செல்போன் செயலிகள் மூலம் உரையாடி உள்ளார்.

    அப்போது கொஞ்சி குலாவி பேசி அவர்களை தனது வலையில் வீழ்த்தி உள்ளார். பின்னர் அவர்களை வீட்டுக்கு வரவழைத்து உள்ளார். அங்கு வருபவர்களை வீட்டு வாசலுக்கு பிகினி உடையில் கிளுகிளுப்பாக சென்று வரவேற்று உள்ளே அழைத்து சென்று விடுவாராம். ஏற்கனவே வீட்டிற்குள் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தி உள்ள நிலையில் வீட்டுக்குள் வருபவர்களை நேகா பிகினி உடையில் கட்டி அணைத்ததும் அதனை சரண பிரகாஷ், அப்துல் காதர், யாஷின் ஆகிய 3 பேரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி அவர்களிடம் இருந்து பணம் பறித்துள்ளனர். இதுவரை அந்த கும்பல் 50-க்கும் மேற்பட்ட வாலிபர்களிடம் ரூ.35 லட்சத்திற்கும் மேல் பணம் பறித்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
    • மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது.

    சென்னை:

    புதிதாக பொறுப்பேற்ற தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சென்னையில் இருந்து இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டின் மூலம் தமிழகத்திற்கு அதிக தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு திட்டமிட்டு வருகிறது.

    இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் (23-ந்தேதி) வெளிநாடு செல்கிறார். சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்று தொழில் அதிபர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.

    இதையொட்டி முதலமைச்சரின் நிகழ்ச்சி முன்னேற்பாடுகளை கவனிக்க தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளார்.

    முதலமைச்சருடன் இணைந்து ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பங்கேற்க இருப்பதால் முன் கூட்டியே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கைவல்யா தனது 19 வயதிலேயே ரூ.1,000 கோடி நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 1,036-வது இடத்தில் உள்ளார்.
    • செப்டோவின் மற்றொரு இளம் நிறுவனரான ஆதித் பலிச்சா ரூ.1,200 கோடி நிகர சொத்து மதிப்புடன் 950-வது இடத்தை பிடித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.ஐ.எப்.எல். வெல்த் மற்றும் ஹாரூன் நிறுவனம் ஆகியவை 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

    அதில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் செப்டோ செல்போன் செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகிய இளம் தொழில் முனைவோர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர்.

    கைவல்யா தனது 19 வயதிலேயே ரூ.1,000 கோடி நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 1,036-வது இடத்தில் உள்ளார்.

    செப்டோவின் மற்றொரு இளம் நிறுவனரான ஆதித் பலிச்சா ரூ.1,200 கோடி நிகர சொத்து மதிப்புடன் 950-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    கைவல்யா வோரா, ஆதித் பலிச்சா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவார். புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் இந்தியா திரும்பினர்.

    கடந்த 2020-ம் ஆண்டு செப்டோ நிறுவனத்தை தொடங்கினர். இந்நிலையில் கொரோனா சமயத்தில் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படுவதை கண்ட இருவரும் செப்டோ நிறுவனத்தின் மூலமாக மளிகை பொருட்களை ஆன்லைன் டெலிவரி செய்ய நினைத்து செய்த நடவடிக்கைகள் நிறுவனத்தை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது.

    கைவல்யா வோராவின் பங்குதாரர் ஆதித் பலிச்சாவுக்கு தற்போது 20 வயதாகிறது. இவரது சொத்து மதிப்பு ரூ.1,200 கோடி ஆகும். பலிச்சா, தன்னுடைய 17 வயது முதல் ஸ்டார்ட் அப் கனவில் இருந்ததாக பல முறை குறிப்பிட்டுள்ளார்.

    இந்நிலையில் இருவரும் சேர்ந்து தொடங்கிய இந்நிறுவனம் 2 வருடங்களில் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பது ஸ்டார்ட் அப் உலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    ×