search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாமுவேல் எல் ஜாக்சன்"

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி.
    • இவரின் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

    தெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.


    ராஜமவுலி

    மகேஷ் பாபு தற்போது எஸ்.எஸ்.எம்.பி. 28 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. மேலும் இந்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும் என்றும் இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது என்றும் அண்மையில் ராஜமவுலி தெரிவித்திருந்தார்.


     சாமுவேல் எல் ஜாக்சன்

    இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி கதாபாத்திரங்களை தேர்வு செய்யும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் எல் ஜாக்சன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சாமுவேல் எல் ஜாக்சன், ஜுராசிக் பார்க், அயன் மேன், அயன் மேன் 2, கேப்டன் அமெரிக்கா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிபலமானவர். தற்போது வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×