search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேபிள் ஆபரேட்டர்கள்"

    • பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது.
    • மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம், கடந்த ஜூன் மாதம் கணக்கிட்டு பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. பிறகு செப்டம்பர் மாதம் இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

    இது குறித்து அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்களை, ஆபரேட்டர்கள் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர். இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், பூண்டி போலீஸ் நிலையங்கள், அவிநாசி, சேவூர், ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, அமராவதி, மூலனூர் நிலையங்களில் 14 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 56 லட்சம் ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளனர். ஒரு செட்டாப் பாக்ஸ் மதிப்பு 1,726 ரூபாய் என கணக்கிட்டு அதற்கான தொகையை செலுத்தக்கோரி போலீசில் புகார் அளித்து வருகிறோம். மொத்தம் 20 வகை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்டியல் வரிசைப்படி புகார் அளிக்கிறோம் என்றார். 

    • பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடையாக உள்ள கேபிள்களை முறையாக அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.
    • பெரும்பாலானோர் மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் வழியாகவும் இஷ்டம் போல் கேபிள்களை கொண்டு செல்கின்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இயங்கும் கேபிள் ஆபரேட்டர்களுடன் மாநகராட்சி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில், நூற்றுக்கும் மேற்பட்ட கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலானோர் மின் கம்பங்கள், தெரு விளக்கு கம்பங்கள், சிக்னல் கம்பங்கள் வழியாகவும் இஷ்டம் போல் கேபிள்களை கொண்டு செல்கின்றனர்.இதனால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் மாநகராட்சி மைய அலுவலகத்தில் கேபிள் ஆபரேட்டர்களுடன் கமிஷனர் கிராந்திகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் நகரப்பகுதியில் பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடையாக உள்ள கேபிள்களை முறையாக அமைப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டது.

    ×