search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர் வளர்ச்சி"

    • வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார்.
    • வேளாண்மை உதவி அலுவலர் வினோத், அலுவலர்கள் சுஜி, அனுசியா உட்பட பலர் பேசினர்.

    அவிநாசி:

    அவிநாசி வேளாண்மை துறை சார்பில் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டம் சார்பில் அசநல்லிபாளையத்தில் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. வேளாண்மை துறை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார். இதில் பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி கலையரசன் பேசியதாவது:-

    தேனீ வளர்ப்பின் போது புகை மூட்டி தேன் எடுப்பதை விவசாயிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். புகையில்லாமல் தேன் எடுப்பது குறித்த பயிற்சியை வழங்கி வருகிறோம். தரமான தேன் கிலோ 1,000 ரூபாய் வரை கூட விற்கப்படுகிறது. அதற்கு சந்தையில் நிலையான கிராக்கி உள்ளது.விவசாய தோட்டங்களில் தேனீ வளர்ப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீதம் வரை அயல் மகரந்த சேர்க்கை நடக்கும். இதனால் விவசாயிகளுக்கு தெரியாமலேயே மகசூல் அதிகரிக்கும். சாகுபடி பெருக, விவசாயிகளுக்கு மறைமுக நண்பனாக தேனீக்கள் உள்ளன. தேனீ வளர்ப்பு என்பது விவசாயத்தின் ஒரு அங்கம் என்பதை விவசாயிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். வேளாண்மை உதவி அலுவலர் வினோத், அலுவலர்கள் சுஜி, அனுசியா உட்பட பலர் பேசினர்.

    ×