search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்டு"

    • வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்.
    • ஆம்ஸ்ட்ராங் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து வீரவணக்கம்.

    சென்னை:

    சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வக்கீலுமான ஆம்ஸ்ட்ராங்க், ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது, ஆம்ஸ்ட்ராங் கொலையில் மறைமுகமாக ஈடுபட்டவர்களையும், உண்மைக் குற்றவாளிகளையும் கைது செய்யவேண்டும். வக்கீல்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, வக்கீல்கள் பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    அப்போது வக்கீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கு புகை படத்தை வைத்து மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், வக்கீல்கள் சங்கரசுப்பு, சத்தியச்சந்திரன், ரஜினிகாந்த், ரமேஷ் உள்பட ஏராளமான வக்கீல்கள் கலந்துக் கொண்டனர்.

    • ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவின்படி கீழ்கண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
    • சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுகளில் பணியாற்றிய நீதிபதிகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை :

    ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உத்தரவின்படி கீழ்கண்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் (ஆய்வு) எம்.ஜோதிராமன், சென்னை ஐகோர்ட்டின் ஜூடிசியல் பதிவாளராகவும், கடலூர் தொழிலாளர் கோர்ட்டு நீதிபதி எம்.சுபா அன்புமணி, சென்னை ஐகோர்ட்டின் பதிவாளராகவும் (மாவட்ட நீதித்துறை), சென்னை வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தமிழ்நாடு மாநில ஜூடிசியல் அகாடமி இயக்குனராகவும், திருவள்ளூர் மாவட்ட லோக் அதாலத் நீதிபதி ஏ.ரமேஷ்பாபு, சென்னை ஐகோர்ட்டு சட்ட இதழ் தலைமை எடிட்டராகவும், தமிழ்நாடு ஜூடிசியல் அகாடமி இயக்குனர் டி.லிங்கேஷ்வரன், சென்னை முதலாவது (தடா) செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும், அந்த கோர்ட்டில் நீதிபதியாக இருந்த வி.தங்கமாரியப்பன், 2-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், 3-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி, சென்னை நிரந்த லோக் அதாலத் நீதிபதியாகவும், சிதம்பரம் மாவட்ட கூடுதல் நீதிபதி பா.யு.செம்மல், காஞ்சீபுரம் மாவட்ட 2-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதியாகவும், விழுப்புரம் குடும்பநல கோர்ட்டு நீதிபதி வி.தேன்மொழி, எழும்பூர் பொருளாதார குற்றவியல் 1-வது கோர்ட்டு நீதிபதியாகவும், புதுக்கோட்டை மகளிர் கோர்ட்டு நீதிபதி ஆர்.சத்தியா, திருவள்ளூர் 1-வது கூடுதல் மாவட்ட செசன்சு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சிட்டி சிவில் கோர்ட்டுகளில் பணியாற்றிய நீதிபதிகள், சென்னையில் உள்ள கோர்ட்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில், சென்னை 19-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக ஏ.ரமேஷ், 18-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.சுஜாதா, 17-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக எல்.ஆபிரகாம் லிங்கன், 16-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக ஜி.புவனேஷ்வரி, 15-வது கோர்ட்டுக்கு நீதிபதியாக பி.சுரேஷ்குமார், 7-வது கோர்ட்டு நீதிபதியாக வி.பாண்டியராஜ், 6-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.டாஸ்னீம், 5-வது கோர்ட்டு நீதிபதியாக எஸ்.முருகநாதன், 4-வது கோர்ட்டு நீதிபதியாக ஜெ.சந்திரன், 3-வது கோர்ட்டு நீதிபதியாக டி.வி.ஆனந்த் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு சட்டத்துறை செயலாளராக பணியாற்றிய நீதிபதி பி.கார்த்திகேயன், சென்னை வணிக வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை 4-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி ஏ.சரவணகுமார், சென்னை விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும், சேலம் குடும்பநல கோர்ட்டு நீதிபதி சி.ஜெயஸ்ரீ, சென்னை 7-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதியாகவும், 7-வது கூடுதல் குடும்பநல கோர்ட்டு நீதிபதி எஸ்.எழில்வளவன், சென்னை 8-வது சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு துணைச் செயலாளராக இருந்த டி.ஜெயஸ்ரீ, செங்கல்பட்டு தலைமை மாஜிஸ்திரேட்டாகவும், மயிலாடுதுறை தலைமை மாஜிஸ்திரேட்டு எம்.எஸ்.மணிமேகலை, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், இந்த கோர்ட்டில் பணியாற்றிய நீதிபதி ஜெ.ஓம்பிரகாஷ், முதலாவது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், எழும்பூர் 2-வது குற்றவியல் கோர்ட்டு நீதிபதி யஷ்வந்த்ராவ் இங்கர்சால், திருவள்ளூர் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதியாகவும், சென்னை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதி பி.சுந்தரராஜன், சென்னை 5-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும், காட்பாடி சார்பு கோர்ட்டு நீதிபதி எஸ்.தமிழ்செல்வி, 9-வது சிறுவழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டு நீதிபதியாகவும், ஊட்டி சார்பு கோர்ட்டு நீதிபதி சி.சுரேஷ்குமார், சென்னை 9-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை 13-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக என்.சச்சிதானந்தன், சென்னை சைதாப்பேட்டை 23-வது கோர்ட்டு நீதிபதியாக ஆர்.வேல்ராஜ், 15-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக சி.அசோக்குமார், 17-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக ஆர்.காரல்மார்க்ஸ், 19-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எஸ்.ஜீவபாண்டியன், 22-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக இ.தாமோதரன், 26-வது சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எம்.ஜியாவூர் ரகுமான், 27-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டு நீதிபதியாக எஸ்.சிவசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை எழும்பூரில் உள்ள நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டு நீதிபதி டி.ராஜேஷ் ராஜூ, பூந்தமல்லி 2-வது மாஜிஸ்திரேட்டாகவும், சிவகங்கை மாவட்ட முன்சீப் நீதிபதி இனிய கருநாகராஜன், காஞ்சீபுரம் முதலாவது மாஜிஸ்திரேட்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 189 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதற்கட்டமாக பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் திறக்கப்பட்டது.
    • கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறக்க ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    சென்னை:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தை தொடர்ந்து அங்கு கலவரம் வெடித்தது. இதனால் அந்தப் பள்ளிக்கூடம் மூடப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்தை திறக்க அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும், பின்னர், 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் சோதனை அடிப்படையில் திறக்க அனுமதியளித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளியில் அமைதியான சூழல் நிலவுவதாக கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பள்ளி நிர்வாகம் தரப்பில், எல்.கேஜி. முதல் 4-ம் வகுப்பு வரையுள்ள வகுப்புகளையும் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மார்ச் முதல் வாரத்திலிருந்து பள்ளிக்கூடத்தை முழுமையாக திறக்கலாம். மழலை வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளுடன் பெற்றோரும் பள்ளிக்கு வர அனுமதியளிக்க வேண்டும். பள்ளிக்கூடத்தின் 3-வது தளத்துக்கு வைக்கப்பட்ட சீலை மட்டும் இப்போதைக்கு அகற்றக்கூடாது. நடப்பு கல்வியாண்டு முடியும்வரை பள்ளிக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு தொடர வேண்டும். இந்தப் பள்ளியை திறப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டார்.

    • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியது.
    • இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் திருமாவளவன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.

    சென்னை:

    75-வது சுதந்திர தின விழா, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு விழா, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தில் 51 இடங்களில் அக்டோபர் 2-ம் தேதியன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி. உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    இந்த வழக்கு கடந்த 22-ம் தேதி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வரும் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ். சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, வரும் 28-ம் தேதிக்குள் போலீசார் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கிய உத்தரவை திரும்பப் பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், நீதிமன்ற நிபந்தனைகளைப் பின்பற்றாமல் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×