search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாதா சாஹேப் பால்கே விருது"

    • இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்கப்படுகிறது
    • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருதுகளை வழங்குகிறார்.

    2020-ம் ஆண்டுக்கான தாதா சாஹேப் பால்கே விருது  மூத்த இந்தி திரைப்பட நடிகை ஆஷா பரேக்கிற்கு வழங்கப்படுவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

    டெல்லியில் வரும் 30ந் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெறும் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    இந்திய சினிமாவிற்கு நடிகை ஆஷா பரேக் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்ததை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு தாதா சாஹேப் விருதுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை அடைவதாக மந்திரி அனுராக் தாக்கூர் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

    நடிகை ஆஷா பரேக் இந்தி திரைப்பட உலகில் 1960 ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டுவரை புகழ் பெற்ற நடிகையாக இருந்து வந்தார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், தில் தேக்கே தேக்கோ என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக விளங்கினார்.

    95-க்கும் அதிகமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். திரைப்பட இயக்குனராகவும், படத் தயாரிப்பாளராகவும் அவர் பணியாற்றி உள்ளார். 1992ஆம் ஆண்டு பரேக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×