search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புஷ்கர் காயத்ரி"

    • பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான வெப் தொடர் 'சுழல்'.
    • இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

    விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரியின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான வால் வாட்சர் பிலிம்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரான முதல் வெப் தொடர் ' சுழல்- தி வோர்டெக்ஸ்'. இயக்குனர்கள் பிரம்மா மற்றும் எம்.அனுசரண் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்.பார்த்திபன், கதிர், சந்தானபாரதி, பிரேம், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி, நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.


    மியூக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த வெப் தொடருக்கு, சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைமில் கடந்த ஆண்டு ஜூன் 17-ந் தேதி வெளியான இந்த வெப் தொடர் பல்வேறு தரப்பில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த வெப் தொடரின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


    அதாவது, புஷ்கர் - காயத்ரி 'சுழல்' இரண்டாம் பாகத்திற்கு கதை எழுதி வருவதாகவும் விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    • நடிகர் எஸ்.ஜே. சூர்யா பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
    • இவர் தற்போது ‘வதந்தி’ வெப் தொடரில் நடித்துள்ளார்.

    அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன. சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது 'பொம்மை', 'மார்க் ஆண்டனி' மற்றும் 'ஆர்சி 15' படங்கள் உள்ளது.


    எஸ்.ஜே. சூர்யா

    தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் 'வதந்தி' எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இதன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.


    வதந்தி ஃபர்ஸ்ட் லுக்

    அதன்படி, 'வதந்தி' வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, "இது என்னை பற்றிய வதந்தி அல்ல" என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
    • பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

     

    விக்ரம் வேதா

    விக்ரம் வேதா

    இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கியிருந்தார்கள்.

     

    விக்ரம் வேதா

    விக்ரம் வேதா

    ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் திரையுலகினர் என பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தை போன்று இந்தியிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் படமாகவும் உருவாகி உள்ளது. இப்படத்தின் திரைக்கதை வடிவத்தை இந்தி திரையுலகம் வியப்பில் பார்த்து வருகிறது. இப்படம் மூலம் இந்தியில் தங்களுடைய தடத்தை பதித்துள்ள புஷ்கர்-காயத்ரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

    • புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் விக்ரம் வேதா.
    • இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.

    புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.


    விக்ரம் வேதா

    இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.

    ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.


    விக்ரம் வேதா

    இந்த நிலையில், படத்தின் புரொமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது, "விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவிலும் நினைக்க முடியாது.


    விக்ரம் வேதா

    என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன், நான் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு கதாபாத்திரத்தை அணுகும்போது, அந்தக் கதாபாத்திரம் ​​செய்ததை மீண்டும் நீங்கள் செய்ய முடியாது. ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர் என்பதை அறிந்துகொள்வதே அதற்கான எளிய வழி. எனவே, நான் பார்க்கும் விதத்தில் இதை அணுகினேன். அது தானாகவே வித்தியாசமாகவும், புதியதாகவும், நேர்மையாகவும் வந்திருக்கிறது'' என்றார்.

    ×