என் மலர்
நீங்கள் தேடியது "தலைமை வழக்கறிஞர்"
- தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
- கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.
சென்னை:
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக தெரிகிறது. தனது ராஜினாமா முடிவை முதலமைச்சரிடம் தெரிவித்துவிட்டார். இதுவரை தனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக சண்முகசுந்தரம் கூறி உள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்து அரசின் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக பி.எஸ்.ராமனை, கவர்னருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
- 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
- பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர் கடந்த 2022-ம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
சென்னை:
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார்.
பல்வேறு முக்கிய வழக்குகளில் அரசு சார்பில் ஆஜரான அவர், கடந்த 2022-ம் ஆண்டு பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தொடர்ந்து பணியில் நீடித்து வந்த சண்முகசுந்தரம் ராஜினாமா கடிதத்தை தற்போது அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.
புதிய தலைமை வழக்கறிஞரை அரசு விரைவில் நியமிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் நிறைவடைந்தது.
மத்திய அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வக்கீல் ஆர்.வெங்கடரமணியை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் பதவிக்காலம் கடந்த ஜூன் 30-ந் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மேலும் 3 மாதங்கள் தொடர அவரை மத்திய அரசு கேட்டுக் கொண்டது. இதனை ஏற்ற அவா் தற்போது அந்த பதவியில் நீடித்து வருகிறார்.
இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வக்கீல் ஆர்.வெங்கடரமணியை நியமித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் தலைமை வக்கீலாக வெங்கடரமணி அடுத்த 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.