என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பால் உற்பத்தியாளர்"
- பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல் பட்டி அருகே இளையாத்தங்குடியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர் களுக்கு போனஸ் தொகை மற்றும் கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்க டேஷன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், துணை செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்ட மைப்பு தலைவர் மாணிக்க வாசகம், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது.
திருப்பூர் :
டாக்டர் வர்கீஸ் குரியன் பிறந்ததினமான நவம்பர் 26-ம் நாள் தேசிய பால் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் தேசிய பால் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் வெண்மைப்புரட்சிக்கு வித்திட்ட டாக்டர்.வர்கீஸ் குரியன் பணி பற்றி நினைவு கூறப்பட்டு, சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தலா 3 நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டது. இதில் திருப்பூர் ஒன்றிய பொது மேலாளர், துணைப்பதிவாளர்(பால்வளம்), உதவிப்பொது மேலாளர், குழுத்தலைவர்கள், ஒன்றிய பணியாளர்கள், விரிவாக்க அலுவலர்கள், சங்கச் செயலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
- ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும்.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு மகளிா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் அமைக்க திருப்பூா் மாவட்டத்தில் ஒரு சங்கம் அமைக்க ரூ.1 லட்சம் நிதி வழங்கப்படவுள்ளது.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடராகவும், 18 வயது முதல் 65 வயதுக்கு உள்பட்டவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சங்க உறுப்பினா் குறைந்தபட்சம் ஒரு கறவை மாடாவது வைத்திருக்க வேண்டும். மேலும், சங்க உறுப்பினா்கள் மூலமாக பெறப்படும் பாலின் அளவு சங்கத்தில் பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.
மகளிா் குழுக்கள் அதிகம் பயன்பெற்ற கிராமங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும். திருப்பூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மகளிா் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501, 503, 5ஆவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, திருப்பூா்-641604 என்ற முகவரி அல்லது 94450-29552, 0421-2971112 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்