search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு துறையினர் பாராட்டு"

    • மாணவன் வடஅயர்லாந்து நாட்டின் வடக்கு கால்வாயில் 35 கி.மீ கடல் தூரத்தை 14 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளான்.
    • ஏதிர்காலத்தில் இங்கிலாந்து –பாரீசிற்கு இடையே 42 கி.மீ தூரமுள்ள ஆங்கில கால்வாயை நீந்தி கடப்பதே என் லட்சியம்.

    தேனி:

    தேனி நகர் பகுதியை சேர்ந்தவர் நீதிராஜன் இவருடைய மகன் சினேகன் (வயது 14). இந்த மாணவன் வடஅயர்லாந்து நாட்டின் வடக்கு கால்வாயில் 35 கி.மீ கடல் தூரத்தை 14 மணி நேரத்தில் நீந்தி சாதனை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளான். இந்த சாதனை குறித்து மாணவன் சினேகன் தெரிவிக்கையில்,

    கடந்த மார்ச்.28-ந் தேதி தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரையும், தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்ஜலசந்தி பகுதியில் 56 கி.மீ தூரத்தை குறைந்த நேரத்தில் நீந்தி சாதனை படைத்தேன். தற்போது சவாலான வடஅயர்லாந்து கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளேன். ஏதிர்காலத்தில் இங்கிலாந்து –பாரீசிற்கு இடையே 42 கி.மீ தூரமுள்ள ஆங்கில கால்வாயை நீந்தி கடப்பதே என் லட்சியம்.

    இதற்கான பயிற்சியை வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளேன் என்றார். நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் கூறுகையில், சாதனை மாணவன் சினேகன் கடந்த 8 ஆண்டுகளாக நீச்சல் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவருக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும், துணிச்சலும் அதிகமாக உள்ளது என கூறினார்.

    நீச்சலில் சாதனை படைத்த சிறுவன் சினேகனுக்கு தேனி மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மதுரை மண்டல மேலாளர் பியூலாஜானி சுசீலா, நீச்சல் சங்க செயலாளர் கண்ணன் மற்றும் சிவபாலன், மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் வரவேற்பளித்தனர். மேலும் சிறுவனின் குடும்பத்தினர் சிறுவன் சினேகன் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    ×