search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் வடிகால் பணிகள்"

    • சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • முதலமைச்சர் கள ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    மழைக் காலங்களில் நகர் முழுக்க மழைநீர் தேங்கி, பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில், சென்னை நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த நிலையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகே மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது வடகிழக்கு பருவமழை காலம் துவங்குவதற்கு முன்தாகவே பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

    முதலமைச்சரின் திடீர் ஆய்வின் போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சென்னையில் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள்.
    • பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரி யோர்கள் விழுந்து விடக்கூடாது.

    சென்னை:

    சென்னையில் மழை காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் கடுமையாக பாதிப்புகளை சந்தித்து வருகிறார்கள். இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து வடிகால் பணிகளை அமைக்க உத்தரவிட்டார்.

    இதன்படி சென்னையில் முதல் கட்ட மழைநீர் வடிகால் பணிகள் முடிவடைந்துள்ளன. இந்தநிலையில் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

    ரூ.447 கோடி மதிப்பில் 2-ம் கட்ட பணிகளை 120 கி.மீ. தூரத்திற்கு மேற் கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    15 மாநகராட்சி மண்டலத்தில் பணிகள் திட்டமிடப்படும நிலையில் பெருங்குடி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

    மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடத்தில் தடுப்புகள் அமைக்கவும், தேவை இருப்பின் மாற்று பாதையை மக்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டுக்குள் பெரும்பாலான பணிகளை முடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மொத்தமாக 24 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அசோக் நகர், வடபழனி, எம்.ஜி.ஆர். நகர் அண்ணா சாலை பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் நடைபெறும் இடத்தில் கம்பிகள் நீட்டிக் கொண்டிருப்பதால் குழந்தைகள் மற்றும் பெரி யோர்கள் விழுந்து விடக்கூடாது.

    இதனை கருத்தில் கொண்டு மழைநீர் வடிகால் நடைபெறும் இடங்களில் கூடுதலாக தடுப்புகளை அமைத்து பொதுமக்கள் ராட்சத பள்ளத்தில் விழுந்து விடாத வகையில் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அடையாறு ஆறு பகுதிகளிலும் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
    • ஆய்வின்போது தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    சென்னை:

    சென்னை புறநகர் பகுதியான பம்மல் பகுதியில் ஒரு கோடியே 25 லட்சம் செலவில் நடைபெறும் ஓடை வடிகால் பணிகள் அனகாபுத்தூர் மேட்டு தெருவில் 4 கோடியே 50 லட்சம் செலவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளையும் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அடையாறு ஆறு பகுதிகளிலும் எடுக்கப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் ஆய்வு செய்தார். அனகாபுத்தூர் பாலத்துக்கும் சென்று பார்வையிட்டார்.

    மழைநீர் வடிகால் பணிகளை பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பு தடுப்புகள் ஏற்படுத்தி தரமாக முடிக்க வேண்டும் என்றும் மழைநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பகுதிகளில் உடனடியாக பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் சாலைகளை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

    அவருடன் நகராட்சிகள் நிர்வாக இயக்குனர் பொன்னையா, தாம்பரம் மாநகராட்சி வெள்ளத்தடுப்பு கண்காணிப்பு அலுவலர் ஜான் லூயிஸ், பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், செயற்பொறியாளர் முருகேசன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

    • பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழக அரசு தலைமை செயலாளர் வெ.இறையன்பு, அரசு முதன்மை செயலாளர் அமுதாவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பருவ மழையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சில இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, வேலைகள் முடிவு பெறாமல் உள்ள நிலையில் பள்ளங்கள் மூடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு, பாத சாரிகளுக்கு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

    எனவே மழை நீர் வடிகால் பணிகள் மற்றும் வேறு சில வேலைகளுக்காக தோண்டப்பட்டுள்ள பள்ளங்களும் மற்றும் குழிகளும் மூடப்படாதிருப்பின் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்புகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும் சாலைகளில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மூடி திறந்திருப்பின், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாவண்ணம் தடுப்புகள், அடையாள பலகைகள் ஆகியவற்றை மேற்கொள்வதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தொடர்புடைய துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும்.
    • மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

    ஆனாலும் பல இடங்களில் 75 சதவீதம் அளவுக்கு தான் பணிகள் நடந்துள்ளன.

    எனவே பணிகளை விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

    வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும் என்பதால் சென்னை புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் எந்த அளவுக்கு நடைபெற்றுள்ளன என்பதை முதல்-அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்.

    இதற்காக தென் சென்னைக்கு உட்பட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    செம்மஞ்சேரி டி.எஸ்.எப். பின்புறம், பெரும்பாக்கம் அருகே உள்ள பாலம், நேதாஜி நகர் பிரதான சாலை, வேளச்சேரி-தாம்பரம் சாலையில் உள்ள பாலாஜி பல் மருத்துவ கல்லூரி அருகே கட்டப்படும் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டார்.

    பள்ளிக்கரணை, தாமரைக்குளம் பகுதி, வேளச்சேரி ஏ.ஜி.எஸ். காலனி, அடையார் கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 3-வது பிரதான சாலை ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    மொத்தம் ரூ.174.48 கோடி செலவில் நடைபெற்று வரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

    அப்போது அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பொன்முடி, மா.சுப்பிரமணியன், அதிகாரி சந்தீப் சக்சேனா, கலெக்டர் ராகுல்நாத் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உடன் சென்றிருந்தனர்.

    ×