என் மலர்
நீங்கள் தேடியது "அரசின் திட்டங்களின் செயல்பாடு"
- அனைத்து திட்டங்களின் செயல்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைப்பெற்றது.
- ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பிக்கனஅள்ளியில் அரசின் அனைத்து திட்டங்களின் செயல்பாடு குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நலத்திட்ட உதவிகள் குறித்தும், பயன்பெற்ற பயனாளிகளின் விவரங்கள் குறித்தும் ஒவ்வொரு துறை அலுவலர்களுடன் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டு, இத்திட்டத்தினை மிகச்சிற ப்பாக செயல்படுத்துவது குறித்து பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் கைத்தறி, கைத்திறன், மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியம் உள்ளிட்ட 13 துறைகளை ஒருங்கிணைத்து இத்திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டது.
ஒவ்வொரு நபரும் அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்திட வேண்டும் என கலெக்டர் சாந்தி ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பிக்கனஅள்ளி ஊராட்சி மன்றத்தலைவர் பத்மாவதி சுப்ரமணி, ஜக்கசமுத்திரம் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன் உள்ளிட்ட வட்டார அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.