search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தற்கொலை படை தாக்குதல்"

    • ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு.
    • காலை 8 மணியளவில் வங்கி வெளியே காத்திருந்த மக்களை குறிவைத்து குண்டு வெடித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானின் காந்தஹார் நகரில் இன்று நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    மார்ச் 11 அன்று இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியதில் இருந்து நாடு முழுவதும் பல குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில், சில சம்பவங்களை தலிபான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

    மத்திய காந்தஹார் நகரத்தில் உள்ள நியூ காபூல் வங்கிக் கிளைக்கு வெளியே இன்று காலை 8 மணியளவில் காத்திருந்த மக்கள் குழுவை குறிவைத்து வெடித்துள்ளது.

    இதுகுறித்து கந்தஹார் மாகாணத்தின் தகவல் மற்றும் கலாச்சார இயக்குனர் இனாமுல்லா சமங்கானி கூறுகையில்" தற்கொலைப் படை தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் படுகாயமடைந்துள்ளனர்.பொதுவாக மக்கள் தங்கள் சம்பளத்தைப் பெறுவதற்காக வங்கியில் கூடுகிறார்கள். அப்போது குண்டு வெடித்துள்ளது. காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட நகரின் மருத்துவமனையில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது" என்றார்.

    இதற்கிடையே, தலிபான் அதிகாரிகள் வங்கிக்கு வெளியே உள்ள பகுதியை சுற்றி வளைத்தனர். பத்திரிக்கையாளர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்.

    இருப்பினும், குண்டுவெடிப்பை அடுத்து ஆம்புலன்ஸ்களில் மயக்கமடைந்தவர்கள் அல்லது இறந்தவர்களின் உடல்கள் ஏற்றப்பட்டதாகவும், சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் அப்பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தனர், அங்கு இரத்தம், உடைகள் மற்றும் காலணிகள் தரையில் சிதறிக்கிடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

    • மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
    • பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பலுசிஸ்கான் மாகாணம் மற்றும் கைபர் பக்துன்சலா மாகாணத்தில் உள்ள மசூதிகளில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்த 2 சம்பவங்களிலும் பலியானவர்கள் எண்ணிக்கை 65-ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு இந்தியா தான் காரணம் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.

    இது தொடர்பாக அந்நாட்டு உள்துறை மந்திரி சர்பராஸ் புக்டி கூறும் போது பாகிஸ்தானில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குலுக்கு இந்தியாவின் உளவு நிறுவனமே காரணமாகும் என தெரிவித்துள்ளார்.

    • தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது.
    • தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

    பெலிட்வி:

    ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள பெலிட்வி நகரில் நேற்று வெடிமருந்து நிரப்பிய லாரி வந்தது. அங்குள்ள சோதனை சாவடி அருகே சென்ற போது அந்த லாரியில் இருந்த வெடிபொருட்கள் வெடித்து சிதறியது.

    பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் லாரியில் இருந்த வெடிபொருட்களை வெடிக்க செய்து இந்த தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர்,

    இந்த தற்கொலை படை தாக்குதலில் அப்பகுதியை சேர்ந்த 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதில் 5 பேர் போலீஸ்காரர்கள் ஆவார்கள், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த இடம் அருகே இருந்த கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது யார்? என்று தெரியவில்லை. எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி கொலைக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு.
    • குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், அங்கு திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஆப்கானிஸ்தான் மாகாண ஆளுநர் அகமது அஹ்மதி தற்கொலை படை தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதில் அகமது உள்பட அவரது கார் ஓட்டுனரும் கொல்லப்பட்டார். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்

    இவரது இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்ற நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்கிற அச்சம் இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • ஆப்கானிஸ்தான் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • இதில் 46 மாணவிகளும் அடங்குவர்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள தஷ்ட்-இ-பார்ச்சி நகரில் தனியாருக்குச் சொந்தமான உயர் கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை இந்த கல்வி மையத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி மையத்துக்கு வந்து மாதிரி தேர்வை எழுதி கொண்டிருந்தனர். அப்போது கல்வி மையத்துக்குள் நுழைந்த தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

    இதில் சிக்கி 35 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் அதிகமானோர் பலத்த காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், காபூல் பள்ளியில் நடந்த தற்கொலைப் படைத்தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்படி 46 பெண் குழந்தைகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • இந்த தாக்குதலுக்கு எந்த குழுவினரும் பொறுப்பேற்கவில்லை.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஷியைட் பகுதியில் இன்று நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரான் தெரிவித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில் சிறுபான்மை சமூகமாக கருதப்படும் ஷியைட் இன மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அவர்களுக்கு போட்டியாக கருதப்படும் இஸ்லாமிய அரசு குழுவை சேர்ந்தவர்கள் ஹசாரா சமூகத்தை குறி வைத்து தாக்குல் நடத்தி வருகின்றனர்.

    அதன் தொடர்ச்சியாக தற்போது ஷியைட் பகுதியில் வாழும் மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை.

    ×