என் மலர்
நீங்கள் தேடியது "பெண் சிசு கொலை"
- இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள்.
- விழுப்புணர்வுக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சி எடுத்தது.
ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகளவில் உயிரிழக்கும் பெரிய நாடு இந்தியா மட்டுமே.
முந்தைய மூடநம்பிக்கை மண்டிய ஆணாதிக்க இந்திய சமூகத்தில் பெண்ணாக பிறப்பவர்களுக்கு விதிக்கப்பட்ட கொடூரமான பாகுபாடுகள் உடைக்கப்பட்டு தற்கால சமூகம் சற்று முன்னேறி உள்ளது.
முன்பிருந்த வெகுஜன மனநிலைக்கு மாறாக இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.
ஆனால் நவீன சமூக கூட்டு மனப்பான்மையில் வேரோடியிருக்கும் ஆணாதிக்கம் வேறு வழிகளில் பெண் குழந்தைகளை ஒடுக்க தொடர்ந்து வழி தேடி வருகிறது. அதன் விளைவாகவே முந்தைய காலங்களின் தொடர்ச்சியாக தற்போதும் குழந்தைத் திருமணம், பெண் சிசுக் கொலை, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை என பல வழிகளில் மீண்டும் பெண்கள் மீதான தனது அதிகாரத்தை நிறுவ சமூகத்தில் ஆணாதிக்க தன்மை முயன்று வருகின்றது.
இவ்வாறான கொடுமைகள் குறித்த விழுப்புணர்வுக்காக 2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.
ஆனாலும் பெண் குழந்தைகளுக்கு எதிரான மனப்பான்மை இந்திய சமூகத்தில் இருந்து முற்றிலுமாக ஒழிந்தபாடில்லை. குழந்தைதியிலுருந்தே பல பெண்கள் குடும்ப வன்முறை, கட்டாய கர்ப்பம், கட்டாயக் கருக்கலைப்பு போன்ற அனைத்து வகையான பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.
WHO வெளியிட்ட ஒரு மதிப்பீட்டின்படி, உலகளவில் 3ல் 1 (30%) பெண்கள் தங்கள் வாழ்நாளில் தங்களுக்கு நெருங்கியவர்களாலேயே உடல் அல்லது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் வன்முறையைக் கண்டுள்ளனர்.
தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள். வருந்தத்தக்க வகையில் பாதிக்கப்பட்டவர்களில் பலர் பெண் குழந்தைகள். மேலும் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 3 சிறுமிகள், குழந்தைத் திருமணத்துக்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
இந்த கொடுமைகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்க இன்றைய தேசிய பெண் குழந்தைகள் தினம் களம் ஏற்படுத்தித் தருகிறது. நேற்று வெளியான ஆஸ்கர் விருதுகளுக்கான இறுதி பட்டியலில் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் வாழ்க்கை இன்னல்களை பிரதிபலிக்கும் இந்திய குறும்படமான அனுஜா இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- பெண் சிசு கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- சமூக ஆர்வலர்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா தலைமை மருத்துவமனை, பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை தடுப்பது குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. பேரூராட்சி சேர்மன் அம்பலமுத்து, துணை சேர்மன் இந்தியன் செந்தில் ஆகியோர் ெதாடங்கி வைத்தனர். தனியார் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இணைந்து நடத்திய இந்த பேரணியில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், கல்லூரி மாணவிகள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று கண்டறிவது, பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசு கொலை செய்வது அரசுக்கு விதிக்கு புறம்பாக செயல் படுவது சட்டப்படி தவறு உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வந்தனர். சுந்தரம்நகர் வீதி, திண்டுக்கல் சாலை, பெரியகடை வீதி வழியாக மருத்துவமனையை சென்றடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தலைமை மருத்துவர் அய்யன்ராஜ், சுபசங்கரி, டாக்டகர்கள் ஹரிபிரசாத், கோபிநாத், அருண்பிரசாத், சிவபிரியா, ரங்கமணிகண்டன், சமூக ஆர்வலர்கள் சரவணன், சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.