search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை கவர்னர்"

    • புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.
    • தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.

    புதுச்சேரி:

    சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படை சார்பில் புதுச்சேரி கடற்கரை காந்தி சிலை அருகில் கடலோர தூய்மை பணி நடந்தது.

    தூய்மை பணியை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்து மாணவ-மாணவிகளுடன் இணைந்து குப்பைகளை அகற்றினார்.

    அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ., அரசு செயலர்கள் பத்மா ஜெய்ஸ்வால், ஜெயந்தகுமார் ரே, டி.ஜி.பி. அஜித்குமார் சிங்ளா, இந்திய கடலோரக் காவல்படை கமாண்டன்ட் எஸ். எஸ். தசிலா, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி, பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவ-மாணவிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    • புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார்.
    • புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பில் குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.

    புதுவை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் கவர்னர் தமிழிசை தேசிய கொடியேற்றுகிறார். தொடர்ந்து மாலையில் ராஜ் நிவாசில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்களுக்கு, கவர்னர் தமிழிசை தேநீர் விருந்து அளிக்கிறார்.

    இதற்கான அழைப்பிதழ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்க போவதாக தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதுகுறித்து தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா, வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற முக்கிய நாட்களில் மாநிலத்தின் தலைமை நிர்வாகி என்ற முறையில் கவர்னர் மக்கள் பிரதிநிதிகளை அழைத்து தேநீர் விருந்து அளிப்பது என்பது மரபு. அந்த மரபின் அடிப்படையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேநீர் விருந்துகளில் நானும் எங்கள் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்று உள்ளோம்.

    ஆனால் சமீப காலமாக புதுவை கவர்னர் மாளிகை என்பது பா.ஜனதா கொடி கட்டாத அலுவலகமாகவும், கவர்னர் பா.ஜனதா தலைவர் போலும் செயல்படுகிறார்.

    இச்செயல் அவர் வகிக்கும் பொறுப்புக்கு அழகல்ல என்று நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், அவர் தன் நிலையில் இருந்து மாறாமல் இருந்து வருகிறார்.

    ஆகவே, கவர்னர் தமிழிசை விடுத்துள்ள குடியரசு தின விழா தேநீர் விருந்து அழைப்பை தி.மு.க. புறக்கணிக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எல்லா கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றோம்.
    • அனைத்து கவர்னர்களும் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் 6 பேர் விடுதலை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பதால் கருத்து சொல்ல முடியாது. கவர்னர் தாமதம் தான் விடுதலைக்கு காரணம் என்றும் கூறமுடியாது. கவர்னர் முடிவெடுப்பதில் சில சவால்கள் இருந்திருக்கலாம்.

    சிறையில் இருப்பவர்களை விடுவிக்கும்போது பல மாநிலங்களில் முன் உதாரணமாக இருந்து விடக்கூடாது என்று கவர்னர் அதை சவாலாக நினைத்து இருக்கலாம், கவர்னருக்கு முடிவெடுப்பதில் சில காரணங்கள் இருந்து இருக்கலாம். எனவே நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    கவர்னர்களை பற்றி அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இப்போது கவனம் கவர்னர் பக்கம் திரும்பியுள்ளது. எல்லா கவர்னர்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு, சட்டவிதிகளுக்கு உட்பட்டு தான் நடக்கின்றோம். இதில் விதிமீறல்கள் இல்லை.

    ஆனால் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட விமர்சனம் செய்வது என சில அரசியல்வாதிகள் கிளம்பியிருக்கிறார்கள்.

    அதில் சீத்தாராம் யெச்சூரியும் ஒருவர். அனைத்து கவர்னர்களும் மக்களுக்கு நல்லது செய்ய தான் அரசியல் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் கவர்னர்கள் உள்ளோம். ஆனால், கவர்னர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுகிறது.

    இவ்வாறு தமிழிசை கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.
    • கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.

    புதுச்சேரி:

    தமிழக கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்று கூறுவது தேவையற்றது என, புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

    நேரு இளையோர் மையம் சார்பில், புதுவை காலாப்பட்டு பல்நோக்கு சமூக சேவை மையத்தில் அரசு சாரா அமைப்பு மேலாண்மை, ஆதார மேம்பாடு தொடர்பான மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கடல் மேலாண்மைத் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. 100 படுக்கைகளுடன் போதை மறு வாழ்வு மையம் அமைய உள்ளது.

    அரசு சாரா அமைப்புகள் தவறான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    தமிழக கவர்னரைத் திரும்பப் பெற வேண்டும் என சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுப்பது தேவையற்றது.

    கவர்னருக்கு அவரது கருத்தைக் கூற உரிமையுள்ளது. அந்த கருத்து பிடிக்கவில்லை என்றால், எதிர்க்கருத்தைக்கூறலாம்.

    கவர்னர் ஒரு கருத்தைக் கூறிவிட்டார் என்பதற்காக, அவரைத் திரும்பப் பெற வேண்டும் என்பது சரியல்ல.

    சாதாரண குடிமகன் முதல் அனைவருக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம், புதுவையை சேர்ந்த 13 சகோதரர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் தாயகம் திரும்புகின்றனர்.
    • மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மியான்மரில் சிக்கித்தவித்த தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்தவர்கள் மத்திய அரசின் தொடர் நடவடிக்கையால் 13 சகோதரர்கள் தாயகம் திரும்புகின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர் முயற்சிகளால் மியான்மரில் சிக்கிய சகோதரர்களை மீட்ட மத்திய அரசுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். மற்ற சகோதரர்களையும் மீட்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் மற்றவர்களும் தாயகம் திரும்புவர்.

    இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.

    ×