என் மலர்
நீங்கள் தேடியது "முகமது சமி"
- இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டில் தோல்வியடைந்தது.
- முதலில் பேட்டிங் செய்த அந்த அணியால் 137 ரன்களே அடிக்க முடிந்தது.
மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது. பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் (52 நாட்அவுட்) சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை வெளியிட்டிருந்தார்.
அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''இது கர்மா (It's call (sic) karma) என்று அழைக்கப்படும்'' எனப் பதில் அளித்திருந்தார்.
இதுகுறித்து சற்றும் எதிர்பார்க்காத சோயிப் அக்தர் ''இதை நீங்கள் உணர்வுப்பூர்வமான ட்வீட் என அழைக்கிறீர்கள்'' என அக்தர் பதில் அளித்துள்ளார்.
கிரிக்கெட் விமர்சகரான ஹர்சா போக்லே ''பாகிஸ்தான் அணிக்கு பாராட்டு. அவர்கள் செயல்பட்ட விதத்தில் சில அணிகள் 137 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்தும். சிறந்த பந்து வீச்சு அணி'' என ட்வீட் செய்திருந்தார்.
- அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும்.
- இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும்.
பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அக்தர் வெளியிட்ட டுவீட்டை சமி கிண்டல் செய்து இருந்தார். கராச்சி, மெல்போர்ன் மைதானத்தில் நேற்று உலகக் கோப்பை டி20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பாகிஸ்தான் பேட்டிங் செய்து 137 ரன்களே அடித்தது.
பின்னர், 138 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸின் சிறப்பான ஆட்டத்தால் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தான் தோல்வியடைந்ததும், அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜி படத்தை டுவிட்டரில் வெளியிட்டிருந்தார்.
அதற்கு ரி-டுவீட் செய்திருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ''மன்னிக்கவும் சகோதரரே, இது தான் கர்மா'' எனப் பதில் அளித்திருந்தார். அரையிறுதி போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்த இருந்த அக்தர், பாகிஸ்தானை இறுதிப் போட்டியில் எதிர்கொள்ளும் தகுதி இந்தியாவுக்கு இல்லை என்று கூறி இருந்தார்.பாகிஸ்தான் இறுதி போட்டியில் வீழ்ந்ததால் அதனை கிண்டல் செய்யும் வகையில் முகமது ஷமி ஒரே வார்த்தையால் நீங்கள் செய்தது உங்களுக்கே வந்துவிட்டது என்ற பொருள்படும் வகையில் கூறி உள்ளார்.
இந்த நிலையில் சமியின் இந்த பதில் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி, இந்நாள் மட்டும் முன்னாள் வீரர்கள் இதுபோன்ற கருத்துக்களால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மக்களிடையே வெறுப்பை வளர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், " நாம் கிரிக்கெட் வீரர்கள். இந்த விளையாட்டின் முன்மாதிரிகளாகவும், தூதர்களாகவும் இருக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அனைத்து வெறுப்பையும் முடிவுக்குக் கொண்டுவர நாம் முயற்சிக்க வேண்டும். மாறாக வெறுப்பை வளர்க்கும் செயல்களை நாம் செய்யக்கூடாது.
இதுபோன்ற செயல்களை நாமே செய்ய ஆரம்பித்தால், சாமானிய மக்களிடம் நாம் என்ன எதிர்பார்க்க முடியும். விளையாட்டின் மூலம் தான் இந்தியா- பாகிஸ்தான் உறவுகள் மேம்படும். பாகிஸ்தான் அணி அவர்களுடன் விளையாடுவதை காண விரும்புகிறோம். அதே போல் இந்திய அணியும் பாகிஸ்தானில் விளையாடுவதைப் பார்க்க வேண்டும்" என்றார்.
- இந்தியா- வங்காளதேசம் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 4-ந்தேதி மிர்புரில் நடக்கிறது.
- பயிற்சியின்போது ஷமி காயம் அடைந்ததால் தொடரிலிருந்து விலகியுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மிர்பூர்:
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது.
இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.
நியூசிலாந்து தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா , சஞ்சு சாம்சன் , சாஹல், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியது.
இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடனும் , திறமையுடனும் விளையாட வேண்டும்.
வேகப்பந்து வீரர் முகமது ஷமி இந்த தொடரில் இடம் பெற்று இருந்தார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். டெஸ்ட் தொடரிலும் அவர் ஆடுவது சந்தேகமே.
வங்காளதேச அணியின் வழக்கமான கேப்டன் தமீம் இக்பாலும் காயம் காரணமாக இடம் பெறவில்லை. இதனால் லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இரு அணிகளும் நாளை மோதுவது 37-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 36 ஆட்டங்களில் இந்தியா 30-ல், வங்காளதேசம் 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு இல்லை.
கடைசியாக 2019-ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இரு அணிகளும் மோதின. இதில் இந்தியா 28 ரன்னில் வங்காளதேசத்தை தோற்கடித்து இருந்தது.
இந்திய அணி சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 0-1 என்ற கணக்கில் இழந்தது. வங்காளதேசம் ஜிம்பாப்வேக்கு எதிராக 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- வங்கதேசக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக முகமது சமி விலகி உள்ளார்.
- இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது.
மிர்பூர்:
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா -வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
நியூசிலாந்து தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் ரோகித் சர்மா , முன்னாள் கேப்டன் விராட் கோலி , லோகேஷ் ராகுல் ஆகியோர் அணிக்கு திரும்பி உள்ளனர். இஷான் கிஷன், முகமது சிராஜ், ரஜத் படிதார், ராகுல் திரிபாதி , குல்தீப் சென் உள்ளிட்டோரும் இந்த தொடரில் ஆடுகிறார்கள்.
நியூசிலாந்து தொடரில் ஆடிய சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், சாஹல் உள்ளிட்டோர் வங்காளதேச தொடரில் இடம் பெறவில்லை. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால் வங்காளதேச அணி அதன் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடக்கூடியது. இந்திய அணி கடைசியாக 2015 ஆண்டு அந்த நாட்டில் ஆடிய போது 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்து இருந்தது. இதனால் இந்திய வீரர்கள் மிகவும் கவனத்துடனும் , திறமையுடனும் விளையாட வேண்டும்.
இந்நிலையில், வேகப்பந்து வீரர் முகமது சமி இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இந்நிலையில், காயம் அடைந்த முகமது சமிக்கு பதிலாக இந்திய வேகப்பந்து வீச்சு புயல் உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
- சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.
- ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும்
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி முக்கிய பங்கு வகிக்கிறார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது சமியின் திருமண வாழ்க்கை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமி மீது பல்வேறு புகார்களை கூறி வந்த ஹசின் ஜஹான், வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை கூறி வந்தார்.
இந்த புகார்கள் அனைத்திற்கும் சமி மறுப்பு தெரிவித்து வந்தார். இதையடுத்து, கடந்த 2018-ம் ஆண்டு முகமது சமி மற்றும் ஹாசின் ஜஹான் விவாகரத்து வழக்கு கொல்கத்தா குடும்ப நல நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு ரூ.7 லட்சம் மற்றும் மகளின் பராமரிப்பிற்காக ரூ.3 லட்சம் என்று மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
கடந்த 2020 மற்றும் 2021-ம் நிதியாண்டிற்கான சமியின் வருமான வரி கணக்கின்படி, சமியின் ஆண்டு வருமானம் ரூ.7 கோடிக்கு அதிகமாக இருந்ததாகவும், இதன் காரணமாக ஜீவனாம்சமாக மகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.3 லட்சம் என்றும், ஹசின் ஜஹானின் செலவுக்கு ரூ.7 லட்சம் என்றும் மொத்தமாக ரூ.10 லட்சம் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தோம் என்று ஹசின் ஜஹானின் வழக்கறிஞர் குடும்ப நல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, கொல்கத்தா நீத்மன்றம் ஹசின் ஜஹான் மற்றும் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்று ரூ.1.30 லட்சம் வழங்க உத்தரவிட்டது. அதில், ஜஹானின் தனிப்பட்ட செலவிற்கு என்று ரூ.50 ஆயிரமும், மீதமுள்ள ரூ.80 ஆயிரம் அவரது மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து, சமியின் வழக்கறிஞர் சலீம் ரஹ்மான் கூறியிருப்பதாவது: சமியின் மனைவி தனக்கும், தனது மகளுக்கும் ஜீவனாம்சம் கோரி குடும்ப நல நீதிமனத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஆனால், சமியோ கடந்த 2018-ம் ஆண்டு முதல் தனது மகளுக்காக மாதந்தோறும் ரூ.80 ஆயிரம் கொடுத்து வருகிறார். ஹசின் ஜஹான் தனது சொந்த செலவுக்கு என்று ரூ.7 லட்சம் வேண்டும் என்றும், மகளுக்கு ரூ.3 லட்சம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். தற்போது நீமன்றம் ஹசின் ஜஹானுக்கான சொந்த செலவுக்கு ரூ.50 ஆயிரமும், மகளின் பராமரிப்பு செலவுக்கு என்றும் ரூ.80 ஆயிரமும் கொடுக்க உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதமும் 10-ம் தேதி இந்த ஜீவனாம்சம் தொகையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.டோனி (78) 2-ம் இடத்திலும் உள்ளனர்.
- சச்சின் டெண்டுல்கர் (69) 3-ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4-ம் இடத்திலும் உள்ளனர்.
நாக்பூர்:
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனை தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. இதனை தொடர்ந்து நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.
கேப்டன் ரோகித் சர்மா 120 ரன்கள் குவித்து அவுட் ஆனார். 3ம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 400 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் அக்சர் படேல் 84 ரன்களும், ஜடேஜா 70 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து 223 ரன்கள் பின் தங்கிய நிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 91 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி இன்னிங்சிஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இன்னிங்சில் பேட்டிங் ஆடிய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 47 பந்தில் 37 ரன்கள் குவித்தார். இதில் அவர் 2 பவுண்டரியும், 3 சிக்சரும் பறக்க விட்டார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் அவர் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி உள்பட 4 இந்திய வீரர்களை முந்தி உள்ளார்.
கோலி 24, ராகுல் டிராவிட் 21, கேஎல் ராகுல் 17, புஜாரா 15, விவிஎஸ் லஷ்மன் 5 ஆகியோரை பின்னுக்கு தள்ளினார் முகமது சமி. சமி இதுவரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 25 சிக்சர்கள் அடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் விரேந்தர் சேவாக் (90) முதல் இடத்திலும், எம்.எஸ்.டோனி (78) 2-ம் இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் (69) 3-ம் இடத்திலும், ரோகித் சர்மா (66) 4-ம் இடத்திலும் உள்ளனர்.
- ராகுல் திவேதியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார்.
- பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டனர்.
அகமதாபாத்:
ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி பரபரப்பான ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. அகமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்தது. இதனால் குஜராத் அணிக்கு 131 ரன் இலக்காக இருந்தது.
பின்னர் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 125 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த போட்டியில் டெல்லி அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் குஜராத் அணி 3-வது தோல்வியை தழுவியது. 131 ரன் இலக்கை எடுக்க முடியாமல் டெல்லியிடம் அந்த அணி தோற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்ட்யா கடைசி ஓவரில் களத்தில் இருந்தபோது 12 ரன்னை எடுக்க முடியாமல் போனது பரிதாபமே. இஷாந்த்சர்மா கடைசி ஓவரில் 6 ரன்னே கொடுத்து திவேதியா விக்கெட்டை கைப்பற்றி டெல்லியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
குஜராத் அணியின் தோல்விக்கு கேப்டன் ஹர்திக் பாண்டயா பொறுப்பேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த எளிய இலக்கை எந்த நாளாக இருந்தாலும் நாங்கள் வெற்றிகரமாக துரத்தி இருப்போம். முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்து விட்டோம். ராகுல் திவேதியா அதிரடியாக விளையாடி எங்களை மீண்டும் ஆட்டத்திற்கு கொண்டு வந்தார். இதனை பயன்படுத்திக் கொண்டு அணியை வெற்றி பெற வைக்க வேண்டும் என நினைத்தேன்.
ஆனால் என்னால் அது முடியவில்லை. மிடில் ஓவர்களில் மிகப்பெரிய ரன்னை குவிக்கலாம் என்று எதிர்பார்த்தோம். நான் கடுமையாக முயற்சித்தேன். இந்த தோல்விக்கு நான்தான் முக்கிய காரணம். இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்கிறேன்.
டெல்லி அணியை நான் பாராட்டுகிறேன். அவர்கள் உண்மையிலேயே சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். ஆடுகளத்தை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஏனென்றால் நாங்கள் இங்கு தான் பயிற்சி பெற்றோம். இந்த தோல்விக்காக முகமது சமியிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவருக்காக நான் நிச்சயம் வருந்துகிறேன். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை அளித்துவிட்டனர். முகமது சமி தனது திறமையான பந்துவீச்சால் எதிர் அணியை திணறடித்து விட்டார்.
இன்னும் போட்டிகள் இருக்கிறது. இந்த போட்டி மூலம் நாங்கள் பல விஷயங்களை கற்றோம். நல்ல கிரிக்கெட்டை வெளிப்படுத்துவது அவசியமானது.
இவ்வாறு ஹர்திக் பாண்டயா கூறியுள்ளார்.
டெல்லி அணி 3-வது வெற்றியை பெற்றது. இந்த வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியதாவது:-
எங்களது பேட்டிங் மோசமாக இருந்தாலும் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டனர். ராகுல் திவேதியா களத்துக்குள் வந்தபோது பதட்டம் இருந்தது. இஷாந்த்சர்மா மிகவும் சிறப்பாக பந்துவீசி வெற்றியை பெற்று தந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
டெல்லி அணி 10-வது ஆட்டத்தில் பெங்களூரை 6-ந்தேதி சந்திக்கிறது. குஜராத் அடுத்த போட்டியில் ராஜஸ்தானை 5-ந்தேதி எதிர்கொள்கிறது.
- ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து விளையாடி வருகிறது.
- முகமது சமி ஓவரில் ஸ்மித் இந்த ரியாக்ஷனை கொடுத்துள்ளார்.
லண்டன்:
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகியது.
தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா 0 ரன்னிலும் டேவிட் வார்னர் 43 ரன்னிலும் லாபுசேன் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ட்திராவிஸ் ஹெட் - ஸ்மித் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்மித் ரியாக்ஷன் தற்போது சமூக வலைதளங்கில் வைரலாகி வருகிறது. முகமது சமி ஓவரில் இந்த சம்பவம் அரங்கேறியது. அவர் தொடர்ந்து அவுட் ஸ்விங் வீசிய நிலையில் அந்த பந்தை இன் ஸ்விங் செய்தார். அதனை ஸ்மித் பேட்டில் வாங்காமல் விட்டுவிட்டார். அப்போது தான் அவர் அந்த ரியாக்ஷன் கொடுத்தார். ஓ.... இன் ஸ்விங் என கை சைகையில் காட்டினார்.
இவரது ரியாக்ஷன் அடிக்கடி வைரலாகி வருவதுண்டு அதுபோல இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
- ஜாகீர் கான், ஸ்ரீநாத் ஆகியோர் தலா 44 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்
- பும்ரா 33 விக்கெட்டுகளும், கும்ப்ளே 31 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா 357 ரன்கள் குவித்த நிலையில், இலங்கை 55 ரன்னில் சுருண்டது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த தொடரின் தொடக்க ஆட்டங்களில் அவர் களம் இறக்கப்படவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக களம் இறங்கினார். அந்த போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். அதன்பின் இங்கிலாந்துக்கு எதிராக 4 விக்கெட்டுகளும், தற்போது ஐந்து விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மூன்று போட்டிகளில் 14 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை முகமது சமி 45 விக்கெட்டுகள் வீழ்த்தி, உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் ஜாகீர் கான் 44 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடம் இடத்தில் இருந்தார். தற்போது அவரை சமி பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஸ்ரீநாத் 44 விக்கெட்டுகள், பும்ரா 33 விக்கெட்டுகள், கும்ப்ளே 31 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் 5 விக்கெட் வீழ்த்துவது சமிக்கு இது 3-வது முறையாகும். இதன்மூலம் உலகக் கோப்பையில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையில் ஸ்டார்க் உடன் இணைந்துள்ளார்.
இந்திய அணிக்காக அதிக முறை (4) ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். ஸ்ரீநாத், ஹர்பஜன் சிங் ஆகியோர் தலா 3 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
ஒரே உலகக் கோப்பையில் அதிக முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 2-வது இடத்தை பிடித்துள்ளார். அப்ரிடி (2011), ஸ்டார்க் (2019) ஆகியோர் 4 முறை 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளனர்.
சமி (2019), ஆடம் ஜம்பா (2023), முகமது சமி (2023) ஆகியோர் 3 முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி 2-வது இடத்தில் உள்ளனர்.
- ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும்.
- 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இலங்கை - இந்தியா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
இந்த போட்டியில் 18 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது சமி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இதன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார்.
உலகக் கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய இந்தியர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஜாகீர்கான் (23 ஆட்டத்தில் 44 விக்கெட்), ஸ்ரீநாத் (34 ஆட்டத்தில் 44 விக்கெட்) ஆகியோரை பின்னுக்கு தள்ளினார். இந்த வரிசையில் 4-வது இடத்தில் பும்ரா (33 விக்கெட்) உள்ளார்.
உலகக் கோப்பையில் முகமது ஷமி ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் மற்றும் அதற்கு மேல் சாய்ப்பது இது 3-வது முறையாகும். உலகக் கோப்பையில் அதிக தடவை 5 விக்கெட் வீழத்திய ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை (இவரும் 3 முறை) சமன் செய்தார்.
ஒட்டுமொத்த ஒருநாள் போட்டிகளில் முகமது ஷமி 5 விக்கெட் எடுப்பது இது 4-வது நிகழ்வாகும். இந்தியர்களில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்தியவர் இவர் தான். ஸ்ரீநாத், ஹர்பஜன்சிங் (தலா 3 முறை) அடுத்த இடத்தில் உள்ளனர்.
பல்வேறு சாதனைகளை படைத்த முகமது சமிக்கு ஆப்கானிஸ்தான் ரசிகை சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் மைதானம் அவருக்கு சொந்தமானது. என்ன ஒரு அற்புதமான வீரர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- உலகக் கோப்பையில் அதிகமுறை 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய பந்து வீச்சாளர்.
- உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 398 ரன் இலக்கை நோக்கி சென்ற நியூசிலாந்து 327 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அபாரமாக பந்து வீசி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகள் படைத்தார்.
அவரது சாதனைகள்....
1. ஒருநாள் கிரிக்கெட் மற்றும் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக ஸ்டூவர்ட் பின்னி 4 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் சாய்த்தது இந்திய பந்து வீச்சாளரின் சாதனையாக இருந்தது.
2. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்து வீச்சாளராகியுள்ளார். சமி தற்போது வரை இந்த தொடரில் 23 விக்கெட் வீழ்த்தியுள்ளார். முன்னதாக ஜாகீர் கான் (2011) 21 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.
3. ஒரு உலகக் கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். மிட்செல் ஸ்டார்க் (2019) 27 விக்கெட்டுகள் உடன் முதல் இடத்தில் உள்ளார். மெக்ராத் (2007) 26 விக்கெட்டுகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
4. உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். மெக்ராத் (7/15), பிக்கெல் (7/20), டிம் சவுத்தி (7/33), வின்ஸ்டன் டேவிஸ் (7/51) ஆகியோர் ரன் குறைவாக கொடுத்த அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றனர்.
5. உலகக் கோப்பையில் 4 முறை ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக ஸ்டார்க் உடன் 3 முறை வீழ்த்தி சமன் நிலையில் இருந்தார்.
6. உலகக் கோப்பையில் அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.
நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருது முகமது சமிக்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில் "என்னுடைய வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். நான் அதிக அளவில் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. நாங்கள் யார்க்கர், ஸ்லோவர் பந்துகள் பற்றி பேசும்போது, இது என்னுடைய மனதில் இருந்தது.
புதுப்பந்தில் விக்கெட் வீழ்த்த நான் முயற்சி செய்தேன். என்னால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முயற்சி செய்தேன். கேன் வில்லியம்சன் கேட்ச்-ஐ தவறவிட்டேன். அதை மோசமாக உணர்ந்தேன். நான் என்னுடைய முழு வேகத்தில் பந்து வீச முயற்சி செய்தேன். அவர்கள் அவர்களுடைய முறைப்படி விளையாடிக் கொண்டிருந்தனர்.
ஆகவே, வாய்ப்பை நான் எடுத்துக் கொண்டேன். விக்கெட் நன்றாக இருந்தது. பனி இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. புற்கள் நன்றாக நறுக்கப்பட்டிருந்தது. பனி இறங்கியிருந்தால், நிலைமை மோசமாக இருந்திருக்கும.
நான் இதை ஆச்சர்யமாக உணர்கிறேன். ஏனென்றால் இது மிகப்பெரிய மேடை. நாங்கள் 2015, 2019 அரையிறுதி போட்டிகளில் தோல்வியடைந்தோம். எனக்கு கிடைத்த வாய்ப்பை, சிறப்பாக மாற்ற பார்க்கிறேன். இனி எப்பொழுது நம் அனைவருக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவில்லை." என்றார்.
- 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
- அரையிறுதி போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 397 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 398 என்ற கடின இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 48.5 ஓவர்களில் 327 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.
இந்நிலையில் டோனியின் ரன் அவுட்டுக்கு முகமது சமி பழி திர்த்தார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் டோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார். அவர் களத்தில் நின்றிருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்கும் என இன்று வரை ஏங்காத ரசிகர்கள் இல்லை.
அந்த நிலையில் நேற்றைய அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக இருந்த முகமது சமி 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டோனியின் ஜெர்சி நம்பர் 7 என்றும் முகமது எடுத்த விக்கெட்டும் 7 என்றும் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.