search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விராலிமலை"

    • நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.
    • போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விராலிமலை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள இலுப்பூர் பெருமாள் கோவில் கிழக்கு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் சவுமியா நாராயணன். இவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று இரவு திடீரென்று தீ பிடித்தது.

    சமையல் அறையில் தீ பிடித்ததால் அங்கிருந்த சிலிண்டரும் வெடித்தது. இதனால் அங்கிருந்த பொருட்கள் எரிந்து சேதமாயின. சவுமியா நாராயணன் உள்ளிட்ட வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்தனர்.

    இதனிடையே தீ விபத்து குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு படையினர் நிலைய அதிகாரி மகேந்திரன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். மேலும் நீராவி மூலம் சிலிண்டர் குளிர்விக்கப்பட்டது.

    வீட்டில் இருந்த மற்றொரு காலி சிலிண்டர் வெளியே கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் வீட்டில் எவரும் இல்லாத காரணத்தினால் எவ்வித உயிர் சேதமோ எவருக்கும் தீக்காயமும் ஏற்படவில்லை. வீட்டின் மேற்கூரை ஓடுகள் சேதமாயின. மேலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. தீ விபத்து நடைபெற்ற பகுதியை டி.எஸ்.பி. முத்துராஜ் பார்வையிட்டார். தொடர்ந்து போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விராலிமலை முருகன் கோவிலில் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நவராத்திரி நிறைவு நாளையொட்டி நடந்தது

    புதுக்கோட்டை

    விராலிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து மலைமேல் உள்ள நவராத்திரி கொழு மண்டபத்தில் விதவிதமான அலங்காரங்களுடன் கூடிய கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்ற வந்தது. தினமும் முருகன் மற்றும் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியை முன்னிட்டு நேற்று முருகபெருமாள் சமேத வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து அம்புஎய்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் விராலிமலை சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×