என் மலர்
நீங்கள் தேடியது "மதுபாட்டில் கடத்தல்"
- இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்
- அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபா கரன் தலைமையிலான போலீசார் அத்தி யூரில் வாகன சோதனை யில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அவரிடம் போலீ சார் நடத்திய விசாரணையில், அவர் புதுப்பட்டு கிரா மத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 47) என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் மூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
- சென்னை துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்கிவிட்டு வெளியே வந்த லாரியில் தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
- லாரி டிரைவர் பரந்தாமனை சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீசார் கைது செய்து செய்தனர்.
ராயபுரம்:
சென்னை துறைமுகத்துக்கு ஏற்றுமதி, இறக்குமதிக்காக வரும் சரக்கு கப்பல்களில் இருந்து வெளிநாட்டு மதுபானங்களை வாங்கி கண்டெய்னர் லாரிகள் மூலம் வெளியில் கடத்தப்பட்டு கள்ளச்சந்தைகளில் விற்பனை நடைபெறுவதாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் துறைமுகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.
இந்த நிலையில் சென்னை துறைமுகத்தில் இருந்து பொருட்களை இறக்கிவிட்டு வெளியே வந்த லாரியில் தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு மது பாட்டில்கள் கடத்தி செல்வது தெரிந்தது.
இதையடுத்து லாரி டிரைவர் பரந்தாமனை சென்னை துறைமுக பொறுப்பு கழக போலீசார் கைது செய்து செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.