என் மலர்
முகப்பு » அன்ன ராஜன்
நீங்கள் தேடியது "அன்ன ராஜன்"
- நடிகை அன்ன ராஜன் சிம் கார்டு வாங்குவதற்காக தனியார் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
- நடிகைக்கும் ஊழியருக்கும் இடையில் சிம் கார்டு வாங்குவதில் தகராறு ஏற்பட்டுள்ளது.
மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ், ரண்டு, ஐயப்பனும் கோஷியும் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் அன்ன ராஜன். இவர் ஆலுவாவில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்கு சிம் கார்டு வாங்குவதற்காக சென்றுள்ளார்.

அன்ன ராஜன்
அப்போது, ஊழியருக்கும் நடிகைக்கும் இடையில் சிம் கார்டு வாங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஊழியர் நடிகை அன்ன ராஜனை அலுவலகத்திற்குள் வைத்து பூட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நடிகை அன்ன ராஜன் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஊழியர் மீது ஆலுவா போலீசாரிடம் புகாரளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பினரையும் சுமுகமாக பேசி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
×
X