search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேபிள் வயர்"

    • சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது.
    • இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் ஊராட்சி, வடமலைபாளையம் ஊராட்சி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த காற்றாலைகளில் உள்ள கேபிள் வயர்கள் அடிக்கடி திருட்டு போவதும் நடந்து வந்தது. இது குறித்து காற்றாலை உரிமையாளர்கள் காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 5 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் காற்றாலைகளில் கேபிள் வயர் திருடும் கும்பல் என்பது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு நடத்திய விசாரணையில் அவர்கள் மாதப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டம்பட்டி மற்றும் வடமலைபாளையம் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கேபிள் வயர்களை திருடியது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.90 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு வேன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த முருகேசன் என்பரது மகன் வேல்குமார் (வயது 28 ), அதே பகுதியை சேர்ந்த பிச்சை நாடார் என்பவரது மகன் மாரியப்பன் (38), வெள்ளைச்சாமி என்பவரது மகன் பெருமாள் (32), தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ராமன் என்பவரது மகன் விஜி (28), புதுக்கோட்டை மாவட்டம் ,இலுப்பூர் பகுதியை சேர்ந்த சின்னக்கண்ணு என்பவரது மகன் ஜீவானந்தன் (23) என்பதும் தெரிய வந்தது. இந்த 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சில ஆட்களுடன் பனமரத்துப்பட்டி, தும்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தங்கி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
    • அதற்கு பயன்படும் இயந்திரத்துக்கு தேவையான, 200 கி.மீ., கேபிள் வயர் வைத்திருந்தார்.

    சேலம்:

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, சூரியம்பா ளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). இவர் சில ஆட்களுடன் பனமரத்துப்பட்டி, தும்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் தங்கி, சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதற்கு பயன்படும் இயந்தி ரத்துக்கு தேவையான, 200 கி.மீ., கேபிள் வயர் வைத்தி ருந்தார். நேற்றுமுன்தினம் இரவு 8 மணிக்கு ரவிச்சந்தி ரன் சாப்பிட சென்று விட்டு திரும்பி வந்தபோது வயரை காணவில்லை. இது குறித்து மக்களிடம் தெரிவித்த அவர் அப்பகுதியில் தேடினார்.

    அப்போது வயர் எரிக்கப்படும் நாற்றம் வந்த இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது, 6 பேர், கேபிள் வயரை எரித்துக்கொண்டிருந்தனர். அந்த வயர் மேற்புறத்தில் உள்ள பிளாஸ்டிக் தீ உருகிய பின், உட்பகுதியில் உள்ள காப்பர் கம்பியை விற்க திட்டமிட்டிருந்தனர். இதனால் ரவிச்சந்திரன் புகார்படி, பனமரத்துப்பட்டி போலீசார் விசாரித்து, வேடப்பட்டியை சேர்ந்த ஜெய்ஹிந்த் (23), ராஜா (29) சின்னதம்பி (30) கார்த்தி (21), தங்கராஜ் (50) நாகராஜ் (26) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

    • பைபர் நெட் கேபிள் பதிக்கும் பணி ரூ.3,500 கோடி செலவில் கடலுக்கு அடியில் தீவிரமாக நடந்து வருகிறது.
    • 2 மிதவை கப்பல்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அந்த கேபிளை பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    செயற்கை கோள் உதவியின்றி அதிவேக இணைய வசதி பெறும் வகையில் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு கடலுக்கு அடியில் பைபர் நெட் கேபிள் பதிக்கும் பணி ரூ.3,500 கோடி செலவில் கடலுக்கு அடியில் 8,100 கிலோ மீட்டர் தூரத்திற்கு பைபர் நெட் கேபிள் எனும் கண்ணாடியிழை வடம் பதிக்கும் பணி சமீபத்தில் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

    இதற்காக பட்டினப்பாக்கம் கடலுக்கு தொழில்நுட்ப கப்பல் ஒன்று வந்தது. அது சென்னை பட்டினப்பாக்கம் கடலில் இருந்து மியான்மர் வழியாக சிங்கப்பூருக்கு கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்நிலையில் பதிக்கப்பட்ட கேபிள் வெளியில் வந்தது. இதையொட்டி 2 மிதவை கப்பல்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அந்த கேபிளை பதிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பணிகள் இன்று மாலைக்குள் முடிவடையும் என்று பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கூறினர்.

    • புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பில்டிங்கில் லிப்ட் கனெக்ஷன்காக வைத்திருந்த கேபிள் வயரை 45 மீட்டர் அளவுக்கு மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.
    • இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெருந்துறையை அடுத்துள்ள பட்டக்காரன் பாளையம் பகுதியில் ஒரு தனியாருக்கு சொந்தமான பால் கம்பெனி இயங்கி வருகிறது.

    இந்த கம்பெனியில் செக்யூரிட்டி பணியாளராக பணிபுரிந்து வருபவர் மாயதேவன். கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு பில்டிங்கில் லிப்ட் கனெக்ஷன்காக வைத்திருந்த கேபிள் வயரை 45 மீட்டர் அளவுக்கு மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர்.

    இதன் மதிப்பு ரூ.30 ஆயிரம் இருக்கும். மாயதேவன் மற்றும் கம்பெனி ஊழியர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கேபிள் வயர் கிடைக்கவில்லை.

    பின்னர் இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பெருந்துறை சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×