என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய பஸ்கள்"
- 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது.
- புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணி யாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர் என மொத்தம் 8,361 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன் களான ரூ.1,582 கோடியை வழங்கிட முதல்- அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
விழுப்புரம் கோட்டத்தில், 4.11.2022 அன்று முதற் கட்டமாக ஓய்வுபெற்ற 137 பணியாளர்களுக்கு ரூ.18.63 கோடியும், 2-வது கட்டமாக 200 பேருக்கு ரூ.30.63 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களில் ஓய்வு ெபற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் - வாரிசுதாரர்கள் என மொத்தம் 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது, என்றார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகை யில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான், போக்குவரத்துத்துறையை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே 21,000-க்கும் அதிகமான பஸ்கள் இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையை உருவாக்கி கொடுத்தார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளார். மகளிர் கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். புதியதாக பஸ்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும் புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது, என்றார். இதில் ரவிகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ‘பிஎஸ்-4’ ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன.
- சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பஸ்களும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பஸ்களும் வழங்கப்பட உள்ளன.
சென்னை:
தமிழகத்திற்கு புதிதாக 1,771 அரசு பஸ்களை வாங்க போக்குவரத்துத்துறை முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை வெளியிட்டுள்ளது.
தமிழகத்திற்கு புதிய பஸ்களை வாங்குவது தொடர்பாக ஏற்கனவே அரசு அறிவித்திருந்தது. இதில் மின்சார பஸ்களும் அடங்கும். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 'பிஎஸ்-4' ரக பஸ்கள் வாங்கப்பட உள்ளன. இந்த ரகத்தில் 1,771 பஸ்கள் வாங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பஸ்கள் அனைத்தும் அரசு போக்குவரத்துக்கழக மண்டலங்களுக்கு பிரித்து வழங்கப்பட உள்ளன. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பஸ்களும், விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பஸ்களும் வழங்கப்பட உள்ளன.
சேலம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், கோவை மண்டலத்திற்கு 115 பஸ்களும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பஸ்களும், மதுரை மண்டலத்திற்கு 251 பஸ்களும், நெல்லை மண்டலத்திற்கு 50 பஸ்களும் வழங்கப்படும். இந்த பஸ்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்