search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சொத்துப்பிரச்சினை"

    • விரிவான நில தகவல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
    • தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கோர்ட்டில் சொத்துப்பிரச்சினை வழக்கில் நில விவரங்களை, விரிவான நில தகவல் இணையதளத்தில் (சி.எல்.ஐ.பி.) பதிவேற்றம் செய்வது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கினார்.

    மோட்டார் வாகன விபத்து வழக்குகள் தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், மகளிர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், அரசு வக்கீல்கள், மூத்த சிவில் வக்கீல்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். வக்கீல்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் தங்களது வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை கோர்ட்டு மென்பொருளில் பதிவேற்றம் செய்யும்போது, தானாகவே தமிழக அரசின் சி.எல்.ஐ.பி. இணையத்துடன் இணைப்பதற்கு இந்த தகவல் பரிமாற்றம் மிகவும் உதவியாக இருக்கும்.

    மேலும் வக்கீல்களும், பொது மக்களும் மேற்கூறிய சி.எல்.ஐ.பி. இணையத்தில் ஒரு சொத்து சம்பந்தமாக தற்போது வில்லங்கசான்று பதிவுத்துறையில் இருந்து பெறுவது போலவே, நிலுவை வழக்குகள் பற்றிய விவரங்களை அறிய வசதியாக அமையும். பதிவுத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர். மேலும் வழக்குகளில் தொடர்புடைய சொத்து விவரங்களை விரைந்து வழங்குவதாக உறுதி அளித்தனர்.

    ×