என் மலர்
நீங்கள் தேடியது "சிறுபான்மையின மாணவ"
- மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்புக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
- அக்டோபா் 31-ந் தேதி வரையில் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் :
சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசால் சிறுபான்மையினா்களாக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா்கள்,கிறிஸ்தவா்கள், சீக்கியா்கள், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிறுவனங்களில் பள்ளிப் படிப்புக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இதில் ஒன்றாம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித் தொகை பெறவும், பதிவை இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளவும் அக்டோபா் 15 ந் தேதி வரையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியா், ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை) பட்டப் படிப்புகளுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் தகுதியான மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் புதிதாகவும், புதுப்பிக்கவும் அக்டோபா் 31-ந் தேதி வரையில் மேற்கண்ட இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணிலும் அல்லது மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம். ஆகவே திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.