என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சர்தூல் தாகூர்"
- தீபக் சாஹருக்கு மாற்று வீரராக சென்னை அணி வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மும்பை:
பும்ரா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நிலையில் தற்போது தீபக் சாஹரும் விலகி உள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் ரிசர்வ் வீரராக இருந்த தீபக் சாஹரை மெயின் அணிக்கு கொண்டு செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல முன்னாள் வீரர்களும் தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தீபக் சாஹர் பேட்டிங்கும் செய்வதால், அவர் புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இடம்பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக பயிற்சி செய்த நிலையில் தீபக் சாஹருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து விலகிய நிலையில் வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து பெங்களூருவில் நடைபெற்ற உடல் தகுதி தேர்வில் தீபக் சாஹர் தோல்வி அடைந்தார். இதனால் அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார்.
தீபக் சாஹருக்கு பதிலாக மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல முன்னணி பவுலர்கள் காயம் காரணமாக விலகுவது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.