search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுவாதி மலிவால்"

    • மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களுக்கு நடந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
    • சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    இம்பால் :

    மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் 2 பேரை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் மணிப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் பாதிக்கப்பட்ட பழங்குடியின பெண்கள் இருவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    அப்போது அவரிடம் அந்த பெண்கள், அரசு சார்பில் யாரும் தங்களை சந்திக்கவில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பேசிய சுவாதி மலிவால், "முதல்-மந்திரி பைரன் சிங் உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களை அவர் ஏன் சந்திக்கவில்லை. நான் டெல்லியில் இருந்து வந்து அவர்களை (பாதிக்கப்பட்டவர்களை) சந்திக்க முடியுமானால், அவரால் ஏன் முடியாது?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

    • பிரபல இந்தி இயக்குனர் சஜித்கான் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
    • இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பலர் குரல் எழுப்பியுள்ளனர்.

    பிரபல இந்தி இயக்குனர் சஜித்கான். இவர் தற்போது இந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 16-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்று உள்ளார். இவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினரும் கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.


    பிக்பாஸ் சீசன் - 16

    இதையடுத்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவியான சுவாதி மலிவால், மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், " இயக்குனர் சஜித்கான் மீது 10 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து உள்ளனர். அப்படிப்பட்டவரை சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க செய்து இருப்பது தவறானது. அவரை உடனடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


    சஜித்கான்

    இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மலிவால் இன்று கூறும்போது, இயக்குனர் சஜித்கானை பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நீக்க கோரி மத்திய மந்திரி அனுராக் தாக்குருக்கு கடிதம் எழுதியதில் இருந்து சமூக ஊடகம் வழியே தனக்கு பாலியல் பலாத்கார மிரட்டல்கள் தொடர்ந்து வருகின்றன.


    சுவாதி மலிவால்

    எங்களது பணியை நிறுத்த அவர் விரும்புகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதுபற்றி டெல்லி போலீசில் நான் புகார் ஒன்றை அளித்து உள்ளேன். எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். இந்த மிரட்டல்களை விடுத்த நபர்களை டெல்லி போலீசார் கைது செய்ய வேண்டும்" என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.


    ×