என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி போட்டி"

    • இந்தியா உள்பட 3 அணிகளுக்கு பயிற்சி போட்டி இல்லை.
    • பாகிஸ்தான் உள்பட 5 அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதற்காக 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சி போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 5 அணிகள் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றனர்.

    இந்தியா ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால், பயிற்சி ஆட்டங்களில் விளையாட வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதேபோல ஆஸ்திரேலியாவும் தற்போது இலங்கையுடன் ஒருநாள் தொடரில் விளையாடி வருவதால் அந்த அணியும் பயிற்சி போட்டியில் விளையாடவில்லை.

    பிப்ரவரி 16-ந் தேதி நியூசிலாந்தும் ஆப்கானிஸ்தான் அணிகளும் மோதுகின்றனர். பாகிஸ்தான் அணி பயிற்சி போட்டியில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் என்ற பெயரில் 3 அணிகளாக களமிறங்குகிறது.

    அதன்படி 14-ந் தேதி நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சதாப் கான் தலைமையில் பாகிஸ்தான் ஷாஹீன்ஸ் களமிறங்குகிறது. அதனை தொடர்ந்து 17-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முகமது ஹுரைராவும், துபாயில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் முகமது ஹாரிஸ் கேப்டனாக செயல்படுவார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

    • இந்த போட்டியில் ரோகித் சர்மா, அர்தீப்சிங் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.
    • இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    2022 டி20 உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணி தற்போது பெர்த் நகரில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், 2வது பயிற்சி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் விராட் கோலிக்கும், சூர்யகுமார் யாதவுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி கேப்டனாக ராகுல் செயல்பட்டார்.

    ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே அர்தீப்சிங் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து பவர்பிளேவில் ஹர்திக் பாண்டியா பந்தவீச வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் அவர் அதிவேகமாக பவுண்சர்களை வீசி நெருக்கடி அளித்தாலும், வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலிய வீரர்கள் ரன்களை குவித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    இறுதியில் வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், ஹர்சல் 2 விக்கெட்டும்,ஆர்ஸ்தீப் சிங் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - ரிஷப் பண்ட் ஆடினர். ரிஷப் பண்ட் 9 ரன்னிலும் தீபக் ஹூடா 6 ரன்னிலும் வெளியேறினர். இந்நிலையில் கேஎல் ராகுலுடன் பாண்ட்யா ஜோடி சேர்ந்து ஆடினார்.

    17 ரன்கள் எடுத்த நிலையில் பாண்ட்யாவும் அவுட் ஆனார். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அரை சதம் அடித்தார். அடுத்த வந்த அக்சர் படேல் 2 ரன்னிலும் தினேஷ் கார்த்திக் 10 ரன்னிலும் நடையை கட்டினர். நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் 74 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட்டர்ன் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா, அர்தீப்சிங் ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.

    ×