என் மலர்
நீங்கள் தேடியது "பிசி ஸ்ரீராம்"
- திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வருபவர் பி.சி.ஸ்ரீராம்.
- இவர் தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே, ஐ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் சாந்தோம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் ஒரு நாளிலேயே மின்சார விநியோகத்தில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது. மின்சாரத் துறையின் செயல்பாட்டிற்கு என்ன நேர்ந்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக பதிலளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவுறுத்தப்படும். நகரம் முழுவதும் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருவதால் இது போல் நடக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
- நண்பன் நிறுவனத்தின் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது.
- இதில், விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது.
நண்பன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் நண்பன் கலை பண்பாட்டு ஆய்வு மற்றும் கருவூல மையம்'ஆகியவற்றின் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழா மஹதி அகாடமியில் பயிலும் மாணவ மாணவியர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து டிரம்ஸ் சிவமணி, வீணை ராஜேஷ் வைத்யா, பியானோ லிடியன் நாதஸ்வரம் ஆகிய மூவரும் இணைந்து இசை நிகழ்ச்சியை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நாசர் பேசியதாவது, '' உலகில் இருக்கும் உன்னதமான உறவு நட்பு. உன்னதமான நட்பை ஒரு தத்துவமாக்கி, அதனை உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுவதற்காகவும் நம் மண்ணில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதற்காகவும் முதலில் அவர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளைக்காரன் ஒரு விசயத்தைச் செய்தால் அதை உடனடியாக எழுதி வைத்து விடுவார். ஆனால் நாம் பல விசயங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நண்பனிசம்- விளக்கம் தேவையற்ற ஒரு தத்துவம். நட்பிற்கு விளக்கம் தேவையில்லை. அந்த ஒரு எளிய உறவை.. உணர்ச்சியை... உன்னதமான உணர்ச்சிகளாக்கி உலகம் முழுவதும் பரப்புகின்ற உங்களுக்கு இந்த அரங்கத்தில் உள்ள அனைத்து நண்பர்களின் சார்பாகவும் நட்பைக் காணிக்கையாக்குகிறேன்.

நண்பன் என்டர்டெய்ன்மென்ட் எனும் படத் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன். எனக்கு அளிக்கப்பட்ட கௌரவமாக நினைக்கிறேன். நட்புடன் இருப்போம் நண்பர்களாகவே இருப்போம். இங்கு விருது பெற்ற கலைஞர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள் தான். நான் வாழ்க்கையில் என்ன ஆவேன் என தெரியாமல் இருந்த காலகட்டத்திலிருந்து என்னை வழிநடத்தியவர்கள். கவிஞர் அறிவுமதி, நான் படத்தை இயக்கும்போது அவராகவே முன்வந்து உதவி செய்தவர். பேராசிரியர் ராமசாமி அவருக்கும் எனக்குமான நட்பு புதிரானது. ஓவியர் டிராட்ஸ்கி மருது இல்லையென்றால் எனக்கு எழுதவே வந்திருக்காது. " என்றார்.

மேலும், இயக்குனர் சேரன் பேசியதாவது, '' நாம் அனைவரும் சேர்ந்து தான் அரசாங்கத்தை உருவாக்கி இருக்கிறோம். நாம் எல்லோரும் சேர்ந்து அளிக்கும் பணத்தில் தான் அரசாங்கம் இயங்குகிறது. நமக்கு வேண்டியவற்றை அரசாங்கம் செய்து தருகிறது. அப்படிச் செய்ய முடியாத சில வேலைகளை நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் குழுமம் செய்கிறது. அதனால் இவர்கள் ஒரு குட்டி அரசாங்கம். நண்பர்கள் ஒன்றிணைந்து கூட்டு முயற்சியில் ஒரு அரசாங்கத்தை உருவாக்கிக் கொண்டு தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு உதவி செய்து வருவதும், சமூகத்துக்குத் தேவையான உதவி செய்து வருவதை வாழ்த்துவதிலும், வரவேற்பதிலும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது பி.சி. ஸ்ரீராம் சொன்னது போல், அடுத்தடுத்து தொடர்ந்து ஓடுவதற்கு அளிக்கப்பட்ட ஊக்க மருந்தாக எடுத்துக் கொள்கிறேன். நண்பன் குழுமம் அனைவருடனும் இணைந்து தொடர்ந்து பயணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

இந்த விழாவில், நண்பன் க்ராஃப்ட் மாஸ்டர்ஸ் விருது இயக்குனர் பாக்யராஜ், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் சேரன், கலை இயக்குனர் முதுதுராஜ், இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன்னதாக கலை மற்றும் பண்பாட்டு துறையில் சிறந்த சேவை செய்துவரும் கலைஞர்களான ஓவியர் ட்ராஸ்ட்கி மருது, பேராசிரியர் மு ராமசாமி, கவிஞர் அறிவுமதி, புரிசை கண்ணப்ப சம்பந்தம், பெரிய மேளம் கலைஞர் முனுசாமி ஆகியோருக்கு நண்பன் விருது வழங்கப்பட்டது. இதனை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ஆகியோர் வழங்கினர்.

இவர்களைத் தொடர்ந்து நண்பன் டேலண்ட் கேட்வே விருதினை அறிமுக படைப்பாளிகளான கணேஷ் கே பாபு, விக்னேஷ் ராஜா, விநாயக் சந்தரசேகரன், முத்துக்குமார், மந்திரமூர்த்திக்காக அருவி மதன் ஆகியோர் விருதினை பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு இந்த விருதினை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் தேனான்டாள் முரளி ராமசாமி, செயலாளர் கதிரேசன், நடிகர் சங்க தலைவர் நாசர், ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம், இயக்குனர் சேரன் ஆகியோர் வழங்கினர். விருதாளர்கள் அனைவருக்கும் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம்.
- சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "நாம் இந்தியாவை காக்க பிறந்தவர்கள். தூய்மையான காற்றை 'இந்தியா' சுவாசிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

குடியரசு தலைவர் மாளிகை தரப்பில் அனுப்பிய ஜி-20 உச்சி மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்குப் பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது. ஏற்கனவே, சிறப்பு பாராளுமன்ற கூட்டம் கூட்டப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்றப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பெயர் மாற்றத்திற்கு பிரபலங்கள் பலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
- 4 ஆண்டுக்குப் பிறகு தற்போது சி.ஏ.ஏ. நடைமுறைக்கு வந்துள்ளது
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடந்த உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு சி.ஏ.ஏ. எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் வாயிலாக குடியுரிமை வழங்கப்படும். பாராளுமன்ற தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்படும். இது உறுதி. இதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது
இந்நிலையில், நாம் ஒரு மதச்சார்பற்ற நாடு, இந்த சிஏஏ எங்கு பொருந்தும்? என கேமராமேன் பி.சி.ஸ்ரீராம் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
- சினிமா துறையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்.
- இவர் சமூக பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
இந்திய திரையுலகின் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் பி.சி.ஸ்ரீராம். தமிழில் பூவே பூச்சுடவா, மவுன ராகம், நாயகன், தேவர் மகன், காதல் தேசம், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளத்திலும் நிறைய படங்களில் பணியாற்றி இருக்கிறார். விக்ரம் நடித்த மீரா, கமல்ஹாசன், அர்ஜுன் இணைந்து நடித்த குருதிப்புனல் மற்றும் வானம் வசப்படும் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

பி.சி.ஸ்ரீராம்
மேலும் பல விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார். சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வரும் இவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் தனது சமூக வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்த் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பி.சி.ஸ்ரீராம்
அதில், "பொதுவெளியில் மனம் விட்டு பேசுவதற்கு வலிமையான மனம் வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே சென்று அனைவரிடமும் உண்மையை பேசியுள்ளார். நேரடி தொடர்பும் வெளிப்படை தன்மையும் அச்சமின்மையும் இருக்கும் இன்றைய உலகில் இது அவரது வலிமையைக் காட்டுகிறது. அவர் இன்னும் உயர்ந்து நிற்கிறார்" என்று பதிவிட்டுள்ளார்.
#MKStalin
— pcsreeramISC (@pcsreeram) October 13, 2022
To speak ones mind in public needs a strong mind . Mr @mkstalin has gone one step further to speak the truth to all . This is shows his strength in today's world of direct communication & being open & fearless .He stands tall .