என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக உணவு தின மரபு சார்"

    • விவசாயிகளின் நலன்கருதி, உள்ளூர் மற்றும் பாரம்பரிய விதைகள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது.
    • சான்றளிப்பு துறை அலுவலர், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்பு நிகழ்ச்சி நடக்கும்.

    திருப்பூர்:

    மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்படி பொங்கலூர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், உலக உணவு தின மரபுசார் ஒருங்கிணைப்பு கண்காட்சி நாளை 17ந் தேதி நடக்கிறது.

    உள்ளூர் மற்றும் பாரம்பரிய ரகங்கள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், வேளாண்துறை, தோட்டக்கலை, சான்றளிப்பு துறை அலுவலர், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்பு நிகழ்ச்சி நடக்கும்.பாரம்பரிய மற்றும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படும். பாரம்பரிய உணவுகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கும்.விவசாயிகளின் நலன்கருதி, உள்ளூர் மற்றும் பாரம்பரிய விதைகள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது.

    திருப்பூர் மாவட்ட விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறலாம் என வேளாண்துறையும், மாவட்ட நிர்வாகமும் அழைப்புவிடுத்துள்ளன.

    ×