search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 ேபர் கைது"

    • தலையில் அண்டாவை கவிழ்த்து மளிகை கடையில் திருடிய கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • முகத்தை மறைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    செஞ்சி, டிச.3-

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள பிரபல மளிகை கடையில் கொள்ளை போனது. இந்த கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக மாடி வழியே கதவை உடைத்து உள்ளே புகுந்த திருடன் சி.சி.டி.வி. கேமராவில் முகம் பதிவாகாமல் இருப்பதற்கு தலையில் அண்டாவை கொண்டு முகத்தை மறைத்து டார்ச் லைட் அடித்து கடையில் உள்ள பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர் ராஜகோபால் கொடுத்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் செ ஞ்சியில்சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த 2பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் செஞ்சி காந்தி பஜாரில் உ ள மளிகை கடையில் உள்ளே புகுந்து தலையில் அண்டாவை கொண்டு முகத்தை மறைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதுதெரிய வந்தது. இத்தி ருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட செஞ்சி சக்கராபுரம் பகுதியை சேர்ந்த உத்தரவேல் (வயது39), வெங்க டேசன் , செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கர்ணன் ஆகியயோர் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகி ன்றனர்.

    • கரூர் மற்றும் வெங்கமேட்டில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், குட்கா போன்றவை விற்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ரோந்து பணியின் போது போலீசார் குட்கா விற்ற 3 பேரை கைது செய்தனர்.

    கரூர் :

    கரூர் மற்றும் வெங்கமேட்டில் அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், குட்கா போன்றவை விற்க படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., அப் துல்லா, வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட போலீசார் செங்குந்தபுரம், பஞ்ச மாதேவி, சுங்ககேட் பகுதிகளில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது, தமிழக அரசால் தடை செயப் பட்டுள்ள புகையிலை, குட்கா பொருட்களை விற்றதாக இந்திராணி, (வயது48), ராஜா (32), காந்திமதி(61), ஆகிய மூன்று பேரை, கரூர் டவுன் மற்றும் வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.

    ×