search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஜினி ரசிகர்கள்"

    • திருப்பூர் திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.
    • ரசிகர்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி 108 தேங்காய்களை உடைத்தனர்.

    திருப்பூர்:

    நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியானது. திருப்பூர் திரையரங்குகளில் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வமுடன் குவிந்தனர். திருப்பூர் உஷா திரையரங்கம் முன்பு படத்தை காண குவிந்த ரசிகர்கள் பட்டாசு வெடித்து மேளதாளம் முழங்க கொண்டாடினர். பின்னர் நடிகர் ரஜினியின் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் கேக் வெட்டியும் கொண்டாடினர்.

    அதேபோல சக்தி திரையரங்கின் முன்பு குவிந்த ரசிகர்கள் படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டி 108 தேங்காய் உடைத்து ரஜினி படத்திற்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    • ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
    • தற்போது மக்களின் பணிக்காக மன்றத்தை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து விட்ட பிறகு தமிழ்நாடு முழுவதும் இருந்த ரஜினி ரசிகர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற அரசியல் கட்சிகளில் இணைந்து விட்டனர். ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டும் தொடர்ந்து மன்றத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

    ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால் அவரது படங்கள் வெளியாகும் போது மட்டும் ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டும், நற்பணிகளை செய்தும் வருகிறார்கள். ஆனால் இந்த செயல்பாடுகள் தலைமை மன்றத்தின் ஆதரவோடு இல்லாமல் அவரவர்கள் அந்தப்பகுதிகளில் இருக்கும் ரசிகர்களோடு சேர்ந்து செய்து வருகிறார்கள்.

     

    ரஜினி அரசியலுக்கு முழுக்கு முடிவை அறிவித்தபோது ரசிகர்களின் நற்பணி மன்றம் தொடர்ந்து செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு மிகப்பெரிய நற்பணிகள் ரசிகர்களால் செயல்படுத்தப்படவில்லை. சிலர் பிற கட்சிகளில் இணைந்து பெரிய பொறுப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். இதன்படி கிருஷ்ணகிரி ரஜினி ரசிகர் மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருந்த மதியழகன் மன்றத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்.

    இவரது செயல் பாடுகளில் நம்பிக்கை வைத்த தி.மு.க. தலைமை பர்கூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. இதை பயன்படுத்தி எம்.எல்.ஏ.-வாக மதியழகன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இப்போது மாவட்டச் செயலாளர் பொறுப்பும் கூடுதலாக அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.

     

    தற்போது ரஜினியின் தீவிர ஆதரவாளர்கள் மட்டுமே மன்றத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறார்கள். சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது. ரஜினி மன்றத்தின் தலைமையின் அனுமதியோடு நற்பணிகளை செய்ய வேண்டும் அதற்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் இந்த மக்கள் பணிக்கு ரஜினி அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

    ×