என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வடலூர் ஜோதி தரிசனம்"
- மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இறைவன் ஜோதி வடிவானவன் என்பதை உலகுக்கு உணர்த்திய ராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம் வடலூரில் சத்தியஞான சபையை நிறுவினார். இங்கு மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகள் மட்டும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். ஆனால் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று 7 திரைகளையும் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இந்த ஆண்டு தைப்பூச விழா கடந்த 5-ந்தேதி கோலாகலமாக நடைபெற்றது.
இதில் 6 காலங்களில் நடந்த ஜோதி தரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதன் தொடர்ச்சியாக வள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் நேற்று நடைபெற்றது. இங்குள்ள ஒரு அறைக்கு உள்ளே சென்ற வள்ளலார், உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, அங்கு சித்தி பெற்றார். அந்த அறை திறக்கப்பட்டு, தீபம் காண்பிப்பதே திருஅறை தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி நேற்று மேட்டுக்குப்பத்தில் நடந்த திருஅறை தரிசனத்துக்காக, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய (பேழை) பெட்டியை சத்திய ஞானசபையில் இருந்து பூக்களால் அலங்கரித்து காலை 6 மணிக்கு தூக்கிக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். மேட்டுக்குப்பத்தில் உள்ள திருமாளிகையை ஊர்வலம் சென்றடைந்தது. இதை தொடர்ந்து திருஅறை தரிசனம் தொடங்கியது. திருஅறை முன்பு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 5 மணி வரை திரு அறை தரிசனம் நடைபெற்றது
- வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது.
- காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் வடலூர் பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச விழா ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு 152 ஆண்டு தைப்பூச விழாவாக நடைப்பெற்றது. இதன் தொடக்கமாக கடந்த 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தருமச்சாலையில் மகாமந்திரம் ஓதப்பட்டது, 31-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந் தேதி வரை ஞான சபையில் அருட்பா முற்றோதல் நடைபெற்றது.
நேற்று (4-ந்தேதி) காலை 5 மணி மணிக்கு அகவல் பாராயணமும், 7.30 மணிக்கு வள்ளலார் பிறந்த மருதூர், தண்ணீ ரால் விளக்கு எரித்த கருங்குழி யிலும். வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பத்தி லும், தருமச்சாலையிலும் சன்மார்க்க கொடி ஏற்றம் நடைபெற்றது, ஞானசபையில் கொடி ஏற்றம் காலை 10 மணிக்கும் பார்வதிபுரம் கிராம மக்கள் சார்பில் நடைபெற்றது, இரவு தருமச்சாலை மேடையில் சன்மார்க்க சொற்பொழிவும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது.
தைப்பூச திருவிழாவை இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி காலை 6 மணிக்கு 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது.
அப்போது சன்மார்க்க அன்பர்கள் பக்தி பரவசத்துடன் அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி என்கிற மகாமந்திர ஒலி ஞானசபை திடல் எங்கும் ஓங்கி ஓலித்தது.
இதனை காண தமிழகம் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள், லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் திரண்டு வந்து ஜோதி தரிசனம் பார்த்தனர், மேலும், வெளிநாட்டினரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தருமச்சாலை மேடையில் சிறப்பு நிகழ்வுகள் மாவட்ட அறநிலையத் துறையின் அதிகாரி முன்னிலையில் சன்மார்க்க அறிஞர்கள் உரையாற்றினார்கள்.
அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், அறநிலை யத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட உயர் அதிகாரிகள் உட்பட பலர் ஜோதி தரிசனம் பார்த்தனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10மணி நாளை காலை 5.30 மணிக்கும் 7 திரை நீக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது.
வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் வருகிற 7-ந் தேதி பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் நடை பெற உள்ளது.
அப்போது வடலூர் ஞான சபையில் இருந்து வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய பெட்டியை பூக்களால் அலங்கரித்து மேளதாளம் முழங்க வள்ளலார் சித்திபெற்ற திருஅறை உள்ள மேட்டுக்குப்பம் கொண்டு செல்லப்படும். அங்கு பக்தர்கள் வழி பாட்டுக்கு பின்னர் மீண்டும் வடலூர் கொண்டு வரப்படும்.
தைப்பூச திருவிழாவையொட்டி பல்வேறு சன்மார்க்க சங்கத்தினர்களால் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சி. நாடகம் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை வள்ளலார் தெய்வநிலையம் உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் ராஜா சரவணக்குமார் மற்றும் பார்வதிபரம், மேட்டுக்குப்பம், கருங்குழி, மருதூர் கிராம மக்கள் செய்திருந்தனர். விழாவினை முன்னிட்டு 700 போலீசார், 200 ஊர்க்காவல் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.
- 7-ந் தேதி வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருதூரில் வள்ளலார் அவதரித்தார்.
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், உணவே மருந்து, மருந்தே உணவு போன்ற போதனைகளை கூறியதோடு அதற்கேற்றார் போல வாழ்ந்து காட்டியவர்.
தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை இயற்கை வைத்திய முறைகளில் தீர்த்து வைத்தவர். யாரும் பசியால் இறக்க கூடாது என்ற எண்ணத்தில் சன்மார்க்க சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கினார். இதனால் வள்ளலார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
இறைவனுக்கு உருவம் கிடையாது. ஜோதி வடிவானவர் என்று உலகிற்கு பறைசாட்டியவர் வள்ளலார். அதற்கென ஞான சபை அமைத்து ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர தினத்தன்று ஆன்மீகவாதிகளுக்கு ஜோதி தரிசனம் தருவார்.
அவரை பின்பற்றி மாதந்தோறும் வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.
தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வடலூர் சுற்று வட்டார பகுதி மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச விழாவிற்கு தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் வள்ளலார் சபையினர் இங்கு வந்து ஜோதி தரிசனம் பார்த்து செல்வர்.
இந்த ஆண்டுக்கான விழா நாளை (4-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 5 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்படும். காலை 7.30 மணிக்கு மருதூர் வள்ளலார் சன்னதியில் மருதூர் கிராமவாசிகளால் கொடியேற்றப்படும். நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியில் நற்கருங்குழி கிராமவாச களால் கொடி யேற்றப்படும்.
பார்வதிபுரத்தில் உள்ள வள்ளலார் ஞானசபையில் காலை 10 மணிக்கு தைப்பூச விழாவிற்கான கொடியேற்று விழா நடைபெற வுள்ளது. இக்கொடியினை பார்வதிபுரம் கிராமவாசிகள் ஏற்றிவைத்து விழாவினை தொடங்கிவைக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து திரு அருட்பா கருத்தரங்கம், சன்மார்க்க கருத்தரங்கங்கள் நடக்கவுள்ளது.
5-ந் தேதி தைப்பூச தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.
இதையொட்டி சிறப்பு பஸ் வசதி மற்றும் ரெயில் வசதி செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1000 போலீ சார் வடலூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- இன்று முதல் 3-ந்தேதி வரை திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடக்கிறது.
- 7-ந்தேதி திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன. இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.
அதன் முன் 6.9 அடி உயரமும், 4.2 அடி அகலமும் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, நீலம், சிவப்பு என 7 வண்ணங்களிலான திரைகள் காணப்படும். இந்த திரைகளை நீக்கி நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம்.
சத்தியஞான சபையில் ஆண்டுதோறும் தை மாசம் பூச நட்சத்திர நாளில் ஜோதி தரிசனம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டு 152-ம் ஆண்டுக்கான தைப்பூச ஜோதி தரிசன விழா நேற்று தருமச்சாலையில் மகா மந்திரம் ஓதுதலுடன் தொடங்கியது. விழாவில் வருகிற இன்று முதல் 3-ந்தேதி வரை ஞானசபையில் திரு அருட்பா முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்றம் வருகிற 4-ந்தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல் பாராயணம், 7.30 மணி அளவில் வடலூர் தருமச்சாலை, வள்ளலார் பிறந்த மருதூர் இல்லம், தண்ணீரால் விளக்கு எரிவித்த கருங்குழி ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது.
தொடர்ந்து 10 மணி அளவில் சத்திய ஞானசபையில் பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணியளவில் தருமச்சாலை மேடையில் திருஅருட்பாஇசை நிகழ்ச்சியும், தொடர்ந்து சன்மார்க்க கருத்தரங்கமும் நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் 5-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி காலை 6 மணி, 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள்(திங்கட்கிழமை) காலை 5 மணி ஆகிய 6 காலங்களில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. பின்னர் 7-ந்தேதி மதியம் 12 மணிக்கு திருஅறை தரிசனம் நடைபெற உள்ளது.
தரிசன விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள், சுற்றுலா மற்றும் அறநிலையத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய ஆணையர், கூடுதல் ஆணையர், மாவட்ட கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவையொட்டி சத்திய ஞான சபை திடலை சுத்தம் செய்யும் பணிகள் உள்ளிட்டவைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
- பூச நட்சத்திரத்தன்று 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும்.
- பூச நட்சத்திர நாட்களை விட கூடுதல் பக்தர்கள் திரண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
வடலூர் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறும். இதை காண உள்ளூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அந்த வகையில் மாத பூசத்தையொட்டி நேற்று 6 திரைகளை நீக்கி புரட்டாசி மாத ஜோதி தரிசனம் இரவு 7.45 மணி முதல் 8.30 மணிவரை நடைபெற்றது.
நேற்று செவ்வாய்கிழமை என்பதால் வழக்கமான பூச நட்சத்திர நாட்களை விட கூடுதல் பக்தர்கள் திரண்டு ஜோதி தரிசனம் செய்தனர். இதனால் சத்திய ஞானசபை மற்றும் சத்திய தருமச்சாலையில் பக்தர்கள் கூட்டத்தை காண முடிந்தது. பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
முன்னதாக மருத்துவதுறையினரும், காவல்துறையினரும் நோய் தடுப்புக்காக கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும், முன்னெச்ரிக்கையுடன் இருக்க பக்தர்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்களை கண்டிப்பாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வரவேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்