search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இமாச்சல் பிரதேசம்"

    • இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.

    இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளக்காடானது.

    இதற்கிடையே, கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சல பிரதேசம் மிக மோசமாக பாதிப்பு அடைந்துள்ளது. 1,300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. வெள்ள, நிச்சரிவில் சிக்கி இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளனர்.

    குறிப்பாக, சுற்றுலாத் தளங்களில் பயணிகள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால், பயணிகளை மீட்பதற்கான உரிய நடவடிக்கையை இமாச்சல் அரசு எடுத்து வருகிறது.

    இந்நிலையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கித் தவித்த 60,000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளதாக இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இன்று காலை 9 மணி வரை, மொத்தம் 60,000 சுற்றுலாப் பயணிகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். நான் தற்போது குலுவில் கடந்த மூன்று நாட்களாகத் தங்கி, நடந்து வரும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறேன்.

    சாலை சேதம் காரணமாக கசோல் மற்றும் தீர்த்தன் பள்ளத்தாக்கில் சுமார் 10,000 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

    சாலை சேதமடைந்த இடத்திலிருந்து டிரான்ஸ்- ஷிப்மென்ட், ஜீப்கள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்கி உள்ளோம்.

    தற்போதைய மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இந்திய விமானப் படையின் முயற்சிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தீவிர மற்றும் சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், அவர்கள் ஏழு நபர்களை காப்பாற்றுவதன் மூலம் விதிவிலக்கான திறமையை வெளிப்படுத்தினர்.

    மணாலியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு மீட்டமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • இமாச்சல பிரதேசத்தில் கடந்த மாதம் 12ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
    • குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

    இமாச்சலப் பிரதேசத்தில் 68 தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதேபோல் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வரும் 8ந் தேதி வெளியாகின்றன.

    இந்நிலையில் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டிவி9 குஜராத்தி மற்றும் ரிபப்ளிக் டிவி, நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.  இதேபோல் டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

    • பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.
    • வான்வழித் தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார்.

    காங்கரா: 

    வரும் 12ந் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் நிலைவும் நிலையில் காங்கரா மாவட்டத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளதாவது:

    அவர்கள் (காங்கிரஸ்) கடந்த 10 ஆண்டுகள் ஆடசி செய்தார்கள். ஆனால் அவர்கள் பெரிய ஊழல்களில் ஈடுபட்டனர். இப்போது அவர்கள் இமாச்சல பிரதேச அப்பாவி மக்கள் ஏமாற்றுவதற்காக தேர்தல் வாக்குறுதியில் 10 உத்தரவாதங்களை அளிக்கிறார்கள். அதை யார் நம்புவார்கள்?. பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா தற்போது உலகின் வலிமையான நாடாக உருவெடுத்துள்ளது.  

    உரி மற்றும் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது சர்ஜிக்கல் மற்றும் வான்வழித் தாக்குதல் நடத்தி பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இந்தியாவின் எல்லைகளில் குழப்பம் விளைவிப்பவர் அதற்கு உரிய விலையை கொடுக்க வேண்டும் என்ற செய்தியை இதன் மூலம் உலகிற்கு அவர் அறிவித்தார்.

    ரஷியா நடத்திய வரும் போர் காரணமாக உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிக்கித் தவித்த போது, இரு நாட்டு அதிபர்களிடமும் பேசி இந்தியர்கள் வெளியேற இரண்டு நாட்கள் போரை நிறுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த முறை இமாச்சல பிரதேச மாநிலத்தில் சட்டசபை மட்டுமல்ல பாராளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
    • முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

    68 தொகுதிகளை கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    இதில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ் ஆம் ஆத்மி என 3 முனை போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முதல் கட்டமாக 46 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில் இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. 62 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

    முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் செராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் மகன் சுனில் சர்மா மாண்டி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கு மீண்டும் டிக்கெட் கொடுக்கப்படவில்லை.

    ×