search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் மூடல்"

    • இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைபாலத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது.
    • அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே பாலாற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் திருமூர்த்தி அணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பாலாற்றுக்கு வரக்கூடிய சிற்றோடைகள் வழியாகவும் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

    இதன் காரணமாக ஆற்றின் மையப்பகுதியில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தரைபாலத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. அதை கடந்து பக்தர்கள் சென்றால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது.

    இதை கருத்தில் கொண்டு பக்தர்களின் நலன் கருதி பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தற்காலிகமாக கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெள்ளப்பெருக்கு குறைந்தவுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • இமயமலை பகுதியில் அமைந்துள்ளது கேதார்நாத் கோவில்.
    • பத்ரிநாத் கோவில், நவம்பர் 19-ந்தேதி மூடப்படுகிறது.

    டேராடூன் :

    உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள், குளிர்காலத்தில் பனியால் சூழப்பட்டு இருக்கும். எனவே, குளிர்காலத்தையொட்டி, இக்கோவில்கள் 6 மாதங்களுக்கு மூடப்படுவது வழக்கம். அதன்படி, கேதார்நாத் கோவில் நேற்று காலை 8.30 மணிக்கு மூடப்பட்டது. அதற்கு முன்பு, வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்தப்பட்டது.

    அப்போது, 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்களும், மாவட்ட அதிகாரிகளும், கோவில் கமிட்டி நிர்வாகிகளும் இருந்தனர். இந்திய ராணுவத்தின் மராத்தி ரெஜிமெண்ட் படைப்பிரிவினர், பக்தி பாடல்களை இசைத்தனர். யமுனோத்ரி கோவிலும் நேற்று மூடப்பட்டது. கங்கோத்ரி கோவில் நேற்று முன்தினம் மூடப்பட்டது. பத்ரிநாத் கோவில், நவம்பர் 19-ந்தேதி மூடப்படுகிறது.

    • அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது.
    • சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது

    விழுப்புரம்: 

    மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளபர மேஸ்வரி அம்மன் கோவிலில் 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அமாவாசை விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை சூரிய கிரகணம் ஏற்படுவதால் மாலை 4 மணி முதல் இரவு 7 மணிவரை கோவில் நடைசாத்தப்படுகிறது. பரிகார பூஜைகள் நடைபெற்று மீண்டும் கோவில் திறக்கப்படும். வழக்கம் போல் இரவு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ×