என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேர்தல் நிதி"
- டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது.
- புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.
புதுடெல்லி:
13 தனியார் அறக்கட்டளைகள் கடந்த 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு அளித்த நன்கொடை குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தும் தி புருடென்ட் மற்றும் ஏ.பி.ஜெனரல் எலக்ட்ரோல் டிரஸ்ட் மட்டும் கடந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 8 அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.464.81 கோடி நன்கொடையாக வழங்கி இருப்பதாக கூறி உள்ளது.
இதில் பாரதிய ஜனதாவுக்கு மட்டும் ரூ.336.5 கோடி அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு ரூ.18.4 கோடி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த அறக்கட்டளை உள்பட மொத்தம் 5 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து 2021-2022-ம் நிதி ஆண்டில் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.481.05 கோடியை வழங்கி உள்ளன.
இதில் 72 சதவீத நிதியை பாரதிய ஜனதா பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 3.8 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது.
2020-21-ம் ஆண்டில் 7 தேர்தல் அறக்கட்டளைகள் இணைந்து ரூ.258.4 கோடி நன்கொடைகளை வழங்கி உள்ளது. இதில் பாரதிய ஜனதா ரூ.215.5 கோடி(82 சதவீதம்), மற்றும் காங்கிரஸ் ரூ.5.4 கோடி(2.1 சதவீதம்) பெற்றுள்ளன.
2021-2022-ம் ஆண்டில் காங்கிரசை விட மாநில கட்சிகளுக்கு அதிக நிதி வழங்கப்பட்டிருப்பது ஆவணங்களில் தெரிய வந்துள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் பதவியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி ரூ.21.1 கோடியை பெற்றுள்ளது. இதில் புரூடென்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.16.3 கோடியும், இன்டிபென்டன்ட் எலக்ட்ரோல் அறக்கட்டளை ரூ.4.8 கோடியும் வழங்கி உள்ளது.
புரூடென்ட் அறக்கட்டளையிடம் இருந்து டி.ஆர்.எஸ். கட்சி பெற்ற நிதி ரூ.40 கோடி ஆகும். இதே அறக்கட்டளை சமாஜ்வாடி கட்சி ரூ.27 கோடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.20 கோடி, சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு ரூ.7 கோடி, பஞ்சாப் லோக் காங்கிரசுக்கு ரூ.1 கோடி வழங்கி உள்ளது.