என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் தர்ணா"

    • நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பல்லடம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் நகராட்சி 14 வது வார்டு மேற்கு பல்லடம் பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு முறையாக தண்ணீர் வழங்கப்படுவதில்லை என்றும், அங்குள்ள சுகாதார வளாகத்திற்கு கடந்த ஒரு வாரமாக தண்ணீர் வருவதில்லை என்றும் கூறி அப்பகுதியை சேர்ந்த சுமார்10க்கும் மேற்பட்ட பெண்கள் அந்த வார்டின் நகர்மன்ற உறுப்பினர் ஈஸ்வரி தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவரிடம் பேசிய நகராட்சி அதிகாரிகள் குழாய் இணைப்பு வேலைகள் நடைபெற்று வருவதால், தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனை சரி செய்ய லாரி மூலம் தண்ணீர் வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×