search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மா சுப்ரமணியன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.
    • தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

    சென்னை:

    சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நேற்று வெயிலின் தாக்கம் மிக கொடூரமாக இருந்தது.

    * 5 பேரும் இறந்த பின்னர் தான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

    * மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பின் சிகிச்சை பலனின்றி யாரும் உயிரிழக்கவில்லை

    * 5 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தம் தருகிறது. இதில் அரசியல் செய்ய நினைக்கக்கூடாது.

    * சாகச நிகழ்ச்சியின்போது வெயிலின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 102.

    * விமானப்படை கேட்ட அனைத்து உதவிகளும் செய்யப்பட்டன.

    * ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 3 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

     

    * குடிநீர், குடை உள்ளிட்டவற்றை எடுத்து வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தோம்.

    * தேவையான அளவு குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்திருந்தோம்.

    * அரசு மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

    * அரசு சார்பில் மருத்துவ முகாம், மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் என அனைத்தும் தயார் செய்யப்பட்டிருந்தது.

    * 7500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    * குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக அரசியல் பேசுவதை தவிர்க்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • இந்நிகழ்ச்சிக்காக மெரினா கடற்கரையில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிந்தனர்.
    • இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது.

    சென்னை:

    இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பிடம், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடும் வெயிலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதற்கிடையே, விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க.ஸ்டாலின் அரசுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், விமான சாகசத்துக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:

    சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருமுறையும், பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.

    இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப்படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    இதுதவிர, அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.

    ராஜீவ்காந்தி அரசுப் பொதுமருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

    சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
    • 2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.

    மதுரை:

    உடல் உறுப்பு தானம் செய்து உயிரிழந்தவருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதன்படி தேனியைச் சேர்ந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இனிமேல் உடல் உறுப்பு கொடை கொடுப்பவர்களுக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று சின்னமனூரில் உயிரிழந்த அரசு ஊழியர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். அவருக்கு அரசு சார்பாக மரியாதை செலுத்துவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். இனி உடலுறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யும் பணி நடைபெறும்.

    மதுரையில் இதுவரை 17 பேர் டெங்குவால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு பருவமழைக்கு முன்பும் பாதிப்பு இருக்கும். இதை தடுப்பது தொடர்பாக அனைத்துத்துறை செயலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    2012-ல் 13,000 பேர் பாதிக்கப்பட்டு, 26 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 2017-ல் 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 65 உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது. 476 மருத்துவக் குழுக்கள், 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழு சார்பாக பள்ளி மாணவர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

    தமிழகம் முழுவதும் வருகிற 1-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம் காலை 9 மணி முதல் 4 மணி வரை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். மேலும் எந்த கடையில் உணவு பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் விற்கப்படுகிறதோ அங்கு சோதனை நடத்தப்படுகிறது. மீதமுள்ள இறைச்சியை பதப்படுத்தாமல் பயன்படுத்துவது தான் விஷமாக மாறுகிறது. எங்கே தவறு நடைபெற்றாலும் அங்கு சோதனை நடைபெறும் என்பதில் மாற்றம் இல்லை.

    மதுரை எய்ம்ஸ் பொருத்தவரை தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வருகிற டிசம்பர் மாதத்திற்குள் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 2028 ஆம் ஆண்டுக்குள் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது எய்ம்ஸ் மருத்துவ மாணவர்கள், கட்டிடத்தை பார்க்காமலேயே படிப்பை முடிக்க உள்ளனர் என்ற போதிலும் செய்தியாளர்கள் இதனை ஒன்றிய அரசிடம் தான் கேட்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
    • 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    சென்னை:

    சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டம் எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்றது.

    கலைஞர் நகர் தெற்கு பகுதி செயலாளரும் சென்னை தெற்கு மாவட்டம், கலைஞர் நகர் தெற்கு பகுதி சார்பில் என் (பகுதி செயலாளர், 138-வது வார்டு கவுன்சிலர் கே.கண்ணன்) தலைமையில் வடக்கு பகுதி செயலாளர், 129-வது வார்டு கவுன்சிலர் மு.ராசா முன்னிலையில் நடந்த பேராசிரியர் பெருந்தகை நூற்றாண்டு விழா பொதுகூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் நெல்லிகுப்பம் புகழேந்தி ஆகியோர் சிறப்புரையாற்றி 1500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

    இந்நிகழ்வில் விருகம்பாக்கம் எம்.எல்.ஏ., சகோதரர் ஏ.எம்.வி..பிரபாகர் ராஜா, கணக்கு நிலைகுழு தலைவர் அண்ணன் க.தனசேகரன், மாநில வர்த்தகரணி செயலாளர் அண்ணன் கவிஞர் காசி முத்துமாணிக்கம் பங்கேற்ற நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர்கள் அண்ணன் பிஎஸ்.முருகேசன், அண்ணன் ST.தங்கராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன், பகுதி நிர்வாகிகள் எஸ்.உமாபதி, அஜந்தாரவி, பெ.தியாகு, கனிமொழிதனசேகரன், அ.பாபு, ரஞ்சித்குமார், ஆர்.சசிகுமார், வட்ட செயலாளர்கள் சோ.செந்தில்குமார், மு.அன்பழகன், பூக்கடை ஆர்.பழனிச்சாமி, பிகே.குமார், சதீஷ்கண்ணன் வடக்கு வட்ட செயலாளர்கள் மு.கோவிந்தராஜ், மைக்கேல், விஏ.ராஜா, பழக்கடை பாஸ்கர், தஞ்சை பாபு, ஆர்.ராமமூர்த்தி மற்றும் மாவட்ட பிரதிநிதிகள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை நடக்கிறார். அமைச்சர் அரசு துறை அதிகாரிகளையும் அழைத்து செல்கிறார்.
    • வீடு வீடாக என்னென்ன பிரச்சினை என்பதை கேட்டு மனுவாக எழுதி வாங்குகிறார்.

    சென்னை:

    மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஓட்டம் மற்றும் நடைபயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

    இப்போது தொகுதி மக்களை நேரில் சந்தித்து குறை கேட்டு வருகிறார்.

    அதையும் புதுமையான முறையில் நடக்கலாம் வாங்க... கோரிக்கை மனுக்களை தாங்க... என்ற வேண்டுகோளுடன் தினமும் வீடு வீடாக செல்கிறார்.

    அதாவது குறை கேட்பதுடன் உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வையும் மக்களிடம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளார்.

    இதன்படி தினமும் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை நடக்கிறார். அவருடன் அரசு துறை அதிகாரிகளையும் அழைத்து செல்கிறார். வீடு வீடாக என்னென்ன பிரச்சினை என்பதை கேட்டு மனுவாக எழுதி வாங்குகிறார்.

    முந்தைய நாளே கட்சியினர் நாளை எந்த பகுதிகளில் அமைச்சர் நடந்து வருகிறார் என்பதை தெரிவித்து விடுகிறார்கள். இதனால் தெருக்களில் மக்களும் தயாராக இருக்கிறார்கள்.

    மொத்தம் 20 நாளில் 50 மணி நேரம் நடந்து சைதாப்பேட்டை தொகுதி முழுவதும் அனைத்து வீடுகளிலும் குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார்.

    3-வது நாளான இன்று ஏராளமானோர் மனு கொடுத்தனர். பெரும்பாலும் முதியோர், விதவை நிதி உதவி பற்றிய புகார்களே அதிகம் வருகிறது. அவைகளை உடனே நிறைவேற்றி கொடுக்க உத்தரவிட்டு வருகிறார்.

    இதுபோல் தெரு விளக்கு எரிவதில்லை, தண்ணீர் சரியாக வருவதில்லை போன்ற புகார்கள் தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்.

    அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி இந்த நடைபயணமும், குறை கேட்பும் நிறைவு பெறுகிறது.

    ×