என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பழங்கரை ஊராட்சி"
- அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.
- குளத்துப்பாளையம் பகுதியில் நீர்வழிப்பாதையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார்.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சியின் மாதாந்திர கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன் முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் சண்முகம், கவுரீஸ்வரி, அண்ணாமலை, சரஸ்வதி, தங்கபாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் குளத்துப்பாளையம் பகுதியில் நீர்வழிப்பாதையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு முதல் ஊர் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளதால் அந்த சாலையை பராமரிப்பது. மகாலட்சுமி அவென்யூ பகுதியில் தெருவிளக்கு அமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
- வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது.
அவினாசி :
அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கோமதி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், ஊராட்சி முன்னாள் தலைவர் எம்.செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் கோமதி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மிலிட்டிரி நடராசன், வார்டு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசுகையில் வார்டு பகுதிகளில் தெருவிளக்கு, சாக்கடை வசதி, சாலை சீரமைப்பு பணிகள் செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர். வார்டு உறுப்பினர்கள் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுவதாக தலைவர் உறுதிகூறினார். முடிவில் ஊராட்சி செயலாளர் பரமேஸ்வரன் (பொறுப்பு) நன்றி கூறினார்.