என் மலர்
நீங்கள் தேடியது "உடுமலை மாரியம்மன் கோவில்"
- அனைத்து நோய்களுக்கும் குணமும், குளுமையும் தந்து காப்பவள்.
- அக்கினி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மனுக்கு சுமார் 200 ஆண்டு கால வரலாற்று பெருமை உள்ளது. உடுமலை நகரில் அமைந்துள்ள இந்த கோவிலில் மூல விக்ரகத்தின் முன் சுயம்புவாக எழுந்து அம்மன் அருள் பாலித்து வருவதோடு, நோய்களில் இருந்து காக்கும் தெய்வமாகவும் மாரியம்மனை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

கண் புரை, அம்மை நோய், ஜூரம், வெயில் கொப்புளங்கள் ஆகியவையோடு வெப்பத்தால் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் குணமும், குளுமையும் தந்து காப்பவள் என்ற பெருமையும் கொண்டவள் உடுமலை மாரியம்மன்.
அம்மை வார்க்கும்போது அம்மனை வழிபட்டு நோய் குணமாக பூச்சட்டி எடுத்தல், பூ மிதித்தல், அடி அளந்து கொடுத்தல், தீர்த்தம் கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை மக்கள் அம்மனுக்கு காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். சாதி பேதமின்றி அனைத்து சமயத்தினரும் உடுமலை மாரியம்மனை வணங்கி வழிபடுவது பெரிய சிறப்பாகும்.
மணமாகாத கன்னிப்பெண்கள் அம்மன் சந்நிதிக்கு வந்து தரிசனம் செய்தால் நல்ல வாழ்க்கை துணை கொடுப்பாள் இந்த அன்னை என்பது மக்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

8-வது நாள் திருக்கம்பம் நடுதலும், மறுநாள் கொடியேற்று விழாவும் நடைபெறும். கொடி மர பூஜை, கொடி வஸ்திர பூஜை, அஸ்திர பூஜை ஆகியவைகள் செய்து கொடியேற்ற நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.
ஆத்மாவையும், தர்மத்தையும் கீழ் நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்ல அன்னை கருணை இதயத்தோடு அருள்புரிய ஆயத்தமாக காத்திருக்கிறாள் என்பதையே கொடியேற்றுதல் நிகழ்ச்சி உலகிற்கு உணர்த்துகிறது.
திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் எழுந்தருளும் அம்மன் சமம், விசாரம், சந்தோஷம், சாது, சங்கமம் என்ற நான்கு கால்களாக கொண்ட ரிஷபம், யானை, காமதேனு, சிங்கம், மயில், அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலிக்கிறாள்.
எண்ணிய எண்ணம் முடித்தல் வேண்டி அக்கினி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். வாழ்வில் விளக்கேற்றிடும் அன்னைக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபடுகின்றனர். திருவிழாவின்போது 15ம் நாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இந்த விழாக்களில் ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வாக பிரம்மிக்க வைக்கும் வகையில் திருத்தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு உடுமலை நகரம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கூடியுள்ளனர் என்பது சிறப்பான ஒன்றாகும்.
- பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
- திருப்பூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய தேர் செய்யப்பட்டது.
உடுமலை:
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும். 15- வது நாளில், திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம் சிறப்பாக நடந்து வருகிறது. பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
வருகிற 2023ம் ஆண்டு தேர்த்திருவிழா மார்ச் 28-ந்தேதி நோன்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது. கம்பம் போடுதல் நிகழ்ச்சி ஏப்ரல் 4-ந்தேதியும், 7-ந்தேதி, பூவோடு, 12ந் தேதி சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் 13-ந் தேதி நடக்கிறது. பல நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் தேர் மரத்தினால் செய்யப்பட்டு, பின்னர் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டிருந்தது. தேர் பழமையானதாக உள்ளதால் அதற்குப்பதிலாக புதியதாக ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் எண் கோண வடிவில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. பழைய தேரை விட சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும், ஐந்து நிலைகளை கொண்டதாகவும் தேரின் மொத்த உயரம், 12 அடியாகவும், இதில் தேர்பலகை 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம் இரண்டடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தேருக்கு ஏறத்தாழ 780 கனஅடி இலுப்ப மரமும், 20 கனஅடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட்டது. தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என 220 மரச்சிற்பங்களும் வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில் 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
திருப்பூர் சாலையில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. புதிய தேரை மாரியம்மன் கோவில் வடக்கு வாசல் அருகிலுள்ள தேர் நிலைக்கு கொண்டு வரவும், புதிய தேர் வெள்ளோட்டம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டது. இதற்காக புதிய தேரை தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதையொட்டி இன்று அதிகாலை, 5 மணிக்கு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. காலை 6மணிக்கு, தேரை நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.புதிய தேர் வெள்ளோட்டம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கோவில் தக்கார் ஸ்ரீதர் மற்றும் செயல் அலுவலர் தீபா தெரிவித்துள்ளனர்.
- விஷ்ணு,முருகன்,விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும்,120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
- காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெறுகிறது.
உடுமலை:
உடுமலையில் நீண்ட காலமாக பயன்பாட்டில் இருந்த பழமையான தேருக்குப் பதிலாக புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளது.எண்கோண வடிவில் மர சிற்ப வேலைப்பாடுகளுடன் 5 நிலைகளைக் கொண்டதாக ரூ. 53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் இந்த தேர் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த தேரின் மொத்த உயரம் 12 அடியாக உள்ள நிலையில் தேர்ப்பலகை 9 அடி உயரத்திலும்,உற்சவருக்கான சிம்மாசனம் 2 அடி உயரத்திலும் அமைந்துள்ளது.இந்த தேரை உருவாக்குவதற்காக இலுப்ப மரம் மற்றும் தேக்கு மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த தேரில் அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள், சிவன்,விஷ்ணு,முருகன்,விநாயகர் உள்ளிட்ட 220 மரச்சிற்பங்களும்,120 பொதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.
பல்வேறு சிற்ப வேலைப்பாடுகளுடன் கண்ணைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தேர் நிலைக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி கடந்த ஆண்டு டிசம்பர் 14 ந் தேதி நடைபெற்றது.இந்தநிலையில் வருகிற 23 ந் தேதி (வியாழக்கிழமை) புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது.அன்று காலை 9.45 மணிக்கு மங்கள இசை,அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது.காலை 10.30 மணிக்கு தேவதா ஹோமத்தை தொடர்ந்து புதிய தேர் பிரதிஷ்டா ஹோமங்கள் நடைபெறுகிறது.
நண்பகல் 1 மணிக்கு புதிய தேர் கும்ப ப்ரோக்ஷனம், ஸ்தாபனம்,பலிதானம்,மஹா தீபாராதனை நடைபெறும்.மாலை 4 மணிக்கு புதிய தேர் வெள்ளோட்டம் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வெள்ளோட்டத்தை துவக்கி வைக்க உள்ளனர்.மாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா வருகிற மார்ச் மாதம் 28 ந் தேதி நோம்பு சாட்டுதலுடன் தொடங்குகிறது. உச்ச நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்ரல் மாதம் 13 ந் தேதி நடைபெறவுள்ளது.
- மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று நடந்தது.
- தேரோட்டம் இன்று மாலை 4.15 மணிக்கு தொடங்குகிறது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று மாலை விமரிசையாக நடைபெறுகிறது.
கடந்த 9-ந்தேதி பூச்சொரிதல் மற்றும் நோம்பு சாட்டுதலுடன் தொடங்கிய இந்த விழாவில் அடுத்தடுத்த நிகழ்வுகளாக கொடியேற்றம், பூவோடு, மாவிளக்கு எடுத்தல், அலகு குத்துதல், கண்மலர் செலுத்துதல், பறவை காவடி தீர்த்தம், பால்குடம் எடுத்தல் நடைபெற்றது.
பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து பயபக்தியுடன் நேர்த்திக் கடன்களை மாரியம்மனுக்கு செலுத்தினார்கள்.
நாள்தோறும் இரவு 7 மணி அளவில் மாரியம்மன் சூலத் தேவருடன் வெவ்வேறு வாகனங்களில் உடுமலை நகருக்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தேரோட்டத்திற்கு முந்தைய முக்கிய நிகழ்வாக மாரியம்மன் சூலத்தேவர் திருக்கல்யாண வைபவம் நேற்று கோவில் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4.15 மணியளவில் கோவில் வளாகத்தில் தொடங்குகிறது. தேரானாது உடுமலை-பொள்ளாச்சி சாலை, தளிரோடு, சதாசிவம் வீதி, தலைகொண்ட அம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக பொள்ளாச்சி-உடுமலையை சாலையை அடைந்து கோவிலை வந்தடைகிறது.
தேரோட்டத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து ள்ளனர். இதை யடுத்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
- பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா கொண்டாடப்படும்.
- திருவிழாவின் 15 வது நாளில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம், சிறப்பாக நடந்து வருகிறது.
உடுமலை :
உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், பங்குனி மாதத்தில் அமாவாசை தினத்தை அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா நோன்பு சாட்டப்பட்டு 15 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும்.
திருவிழாவின் 15 வது நாளில் திருத்தேரில் அம்மன் எழுந்தருளி உலா வரும் தேரோட்டம், சிறப்பாக நடந்து வருகிறது. பல லட்சம் மக்கள் பங்கேற்கும் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்.
கோவில் அருகில் இருந்து தேரை பக்தர்கள் இழுத்து செல்ல, பின்னால் இருந்து யானை தள்ளி செல்லும் சிறப்பான நிகழ்வாக கொண்டாடப்படுகிறது.பல நூற்றாண்டு பழமையான மாரியம்மன் கோவில் தேர் மரத்தினால் செய்யப்பட்டு பின்னர் இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டிருந்தது.தேர் பழமையானதாக உள்ளதால் அதற்கு பதிலாக புதியதாக ரூ.53 லட்சத்து 85 ஆயிரம் செலவில் எண் கோண வடிவில் புதிய தேர் செய்யப்பட்டுள்ளது.
பழைய தேரை விட சிறப்பு அம்சங்களுடனும், சிற்ப வேலைப்பாடுகளுடனும் 5 நிலைகளை கொண்டதாகவும், தேரின் மொத்த உயரம் 12 அடியாகவும், இதில் தேர்பலகை 9 அடி உயரத்திலும், சுவாமிகள் எழுந்தருளும் உற்சவருக்கான சிம்மாசனம் இரண்டடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய தேருக்கு ஏறத்தாழ 780 கன அடி இலுப்ப மரமும், 20 கன அடி தேக்கு மரமும் பயன்படுத்தப்பட்டது. தேரின் வெளிப்புறத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன், அம்மன் தலங்கள் குறித்த வரலாற்று சிற்பங்கள் மற்றும் சிவன், மகாவிஷ்ணு, விநாயகர், முருகன் சிற்பங்கள் என 220 மரச்சிற்பங்களும், வாழ்வியல் தத்துவம் விளக்கும் வகையில் 120 போதியல் சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன.திருப்பூர் ரோட்டிலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய தேர் செய்யப்பட்டது. இந்நிலையில் புதிய தேரை மாரியம்மன் கோவில் தேர் நிலைக்கு கொண்டு வரவும், புதிய தேர் வெள்ளோட்டம் மேற்கொள்ளவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதற்காக பல 100 ஆண்டுகள் சுவாமி எழுந்தருளி, தேரோடும் வீதிகளில் ஓடிய பழைய தேர், நிலையிலிருந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொக்லைன் எந்திரம் உதவியுடன் இழுத்துச்செல்லபட்டு திருப்பூர் ரோட்டிலுள்ள கோவில் நிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.பழைய தேரை பழுதடையாமலும், அமைப்பும், அழகும் மாறாமல் முறையாக பராமரிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை நகராட்சியில் தேரை கண்காட்சியாக வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.