search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக அமைச்சர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்
    • மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை.

    உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் மாட்டு தொழுவத்தில் படுத்திருப்பது புற்றுநோயை குணப்படுத்தும் என்றும் பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும் என்றும் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. அமைச்சர் சஞ்சய் கங்வார் நவ்காவா பகடியாவில் கோசலா ஒன்றை திறந்து வைத்தார். அதன்பிறகு பேசிய அவர், "மாட்டு தொழுவத்தில் படுத்து அதை சுத்தம் செய்வதன் மூலம் புற்றுநோயை குணப்படுத்த முடியும். பசுவின் முதுகில் தடவினால் ரத்த அழுத்தம் குறையும்." 

    "ரத்த அழுத்த நோயாளி ஒருவர் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை பசுவின் முதுகில் தடவினால் அவர்களின் மருந்து அளவை 10 நாட்களில் 20 மில்லி கிராமில் இருந்து 10 மில்லி கிராமாக குறைக்கலாம்."


     

    "இங்கே ரத்த அழுத்த நோயாளி இருந்தால் பசுக்கள் உள்ளன. அந்த நபர் தினமும் காலை, மாலை நேரங்களில் மாட்டின் முதுகில் தடவிக் கொடுக்க வேண்டும். மாடுகள் மூலம் உருவாகும் பொருட்கள் ஏதோ ஒருவகையில் நமக்கு பயனுள்ளதாகவே இருக்கும். மாட்டு சாணம், புண்ணாக்குகளை எரிப்பதன் மூலம் கொசுக்களை ஒழிக்க முடியும்."

    "தாய்க்கு சேவை செய்யவில்லை என்றால் அம்மா யாருக்காவது தீங்கு செய்வாரா? மாடுகள் விளை நிலங்களில் மேய்வதாக கூறுகின்றனர். மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லை. மாடுகளுக்கு உரிய மரியாதை இல்லாததால் இந்த பிரச்சினை உருவாகிறது. ஈத் பண்டிகை அன்று முஸ்லிம்கள் மாட்டு தொழுவத்திற்கு வரவேண்டும். ஈத் அன்று செய்யப்படும் வரமிளகாய் பசும் பாலில் செய்யப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • 'Beti Bachao, Beti Padhao' மத்திய அரசு திட்டத்தின் பெயரை இந்தியில் எழுத்து பிழையுடன் எழுதிய அமைச்சர் சாவித்ரி தாக்கூர்.
    • இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் தார் தொகுதியில் வென்ற சாவித்ரி தாக்கூர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

    இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர், தனது தொந்த தொகுதியில் அரசு சார்பில் நடந்த பள்ளி விழாவில் கலந்துகொண்டார். அப்போது பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ('Beti Bachao, Beti Padhao') என்ற மத்திய அரசின் திட்டத்தை இணையமைச்சர் இந்தியில் எழுதும் பொழுது எழுத்துப் பிழையுடன் எழுதியுள்ளார்.

    மத்திய இணையமைச்சர் இந்தியில் எழுத்துப் பிழையுடன் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த வைரல் வீடியோவிற்கு காங்கிரஸ் தலைவர் கேகே மிஸ்ரா தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்வினை ஆற்றியுள்ளார். அதில், "தங்களது தாய்மொழியை கூட எழுத தெரியாதவர்கள் தான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது ஜனநாயகத்தின் துரதிஷ்டம். இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு துறையை நிர்வகிக்க முடியும். பாராளுமன்ற உறுப்பினராவதற்கு கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    சாவித்ரி தாகூர் தனது வேட்புமனுவில் 12 ஆம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
    • பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புதிய தாங்கல் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது.

    இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் அங்கிருந்த பெண்களிடம் 100 நாள் வேலைவாய்ப்பு 200 நாட்களாகவும் அதற்கான கூலியையும் பிரதமர் மோடி உயர்த்திருக்கிறார்.

    மேலும் மக்களுக்கு வருகின்ற நிதியை உயர்த்தி கொடுக்க சொல்லியும் கூறி இருக்கிறார் என்றார். அப்போது பெண்கள் இதனை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் நீங்கள் கைதட்டுங்கள் என்று அமைச்சர் கூறினார். அங்கிருந்த பெண்கள் சிரித்துக்கொண்டே கைதட்டினர்.

    இதையடுத்து அங்கிருந்து பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி மந்திரம் ஓதினார். இதை பார்த்த பெண்கள் சிரித்தனர். பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    இதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.
    • ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார்.

    புதுச்சேரி:

    வீட்டை பாதுகாக்க கதவுக்கு பூட்டுபோட்டு செல்வது வழக்கம். ஆனால் புதுவையில் பொது இடத்தில் வைத்துள்ள பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதை தடுப்பதற்காக பா.ஜனதா அமைச்சர் ஒருவர் பேனருக்கு பூட்டு போட்டுள்ளார். இது பார்ப்போரை வியப்படையச் செய்துள்ளது.

    புதுவை குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார். பா.ஜனதா அமைச்சரான இவர் புதுவை ஊசுடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர்.

    ஊசுடு தொண்டமாநத்தம் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடங்குவதையொட்டி பேனர் வைத்துள்ளார். அந்த பேனரில் பிரதமர் மோடி, கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது.

    புதுவை-விழுப்புரம் சாலையில் இந்திரா சிலை சதுக்கத்தில் பேனர் வைத்துள்ளார்.

    இந்த பேனரை யாரும் அகற்ற கூடாது என்பதற்காக பின்பக்கமாக பூட்டு போட்டுள்ளார்.

    இதன் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    • பெண்ணின் கண்ணத்தில் அமைச்சர் அறையும் வீடியோ சமூக வளைதளத்தில் வைரலானது.
    • பாஜக அமைச்சரை பதவி நீக்கம் செய்ய கர்நாடகா காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்

    சாம்ராஜ்நகர்:

    கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹங்கலா கிராமத்தில் அரசு நிலத்தில் வீடு கட்டி வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சர் சோமண்ணா கலந்து கொண்டு, அந்த பகுதி மக்களுக்கு நில உரிமை பட்டாக்களை வழங்கினார்.

    அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர் மத்தியில் நெரிசல் ஏற்பட்டது. இதில் அங்கிருந்த பெண் ஒருவர் தள்ளப்பட்டதால் அவர் அமைச்சர் மீது விழுவது போல் சென்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அமைச்சர் சோமண்ணா அறையும் வீடியோ காட்சி சமூக வளைதளத்தில் வெளியாகி வைரலானது. 


    அமைச்சரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அவரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று கர்நாடகா காங்கிரஸ் கட்சி, வலியுறுத்தி உள்ளது.

    இந்நிலையில் குடகு மாவட்டம் மடிகேரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அம்மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் சோமண்ணா பெண்ணை அறைந்தது அவரது மனிதாபிமானமற்ற செயலை காட்டுகிறது என்று கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறையில் பாஜக அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×