search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊரக திறனாய்வு தேர்வு"

    • 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.
    • நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது.

    திருப்பூர் :

    கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, பிளஸ் 2 படிப்பு முடிக்கும் வரை, ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 10ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தகுதியான மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் மாணவர்கள், அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருக்க வேண்டும். பெற்றோரின் வருமான சான்றிதழை கட்டாயம் இணைக்க வேண்டும்.நாளை (26ந் தேதி) முதல் நவம்பர் 5-ந் தேதி வரை தலைமை ஆசிரியர் உதவியுடன் மாணவர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர் விபரங்களை 28ந் தேதி முதல், நவம்பர் 8 க்குள் தலைமை ஆசிரியர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விட வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×