search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழிலாளர்கள் பலி"

    • தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
    • விபத்து நடந்த தங்கசுரங்கம் கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது.

    லாஎஸ்பெரான்சா:

    தென் அமெரிக்கா நாடான பெரு லாஎஸ்பெ ரான்சா மாகாணம் அரேக்யூபா நகரில் தங்க சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் சுமார் 300 அடி ஆழ பள்ளத்தில் நேற்று தொழிலாளர்கள் வேலை பார்த்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது திடீரென அந்த தங்கசுரங்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென சுரங்கம் முழுவதும் பரவியது. இதனால் அங்கிருந்து தொழிலாளர்களால் உடனடியாக வெளியே வரமுடியவில்லை. அதற்குள் தீ அவர்களை சூழ்ந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி அவர்கள் தீயை அணைத்தனர். இந்த தீயில் சிக்கி மூச்சு திணறியும், உடல் கருகியும் 27 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

    உடல் கருகிய நிலையில் 2 பேர் மீட்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சம்பவம் பற்றி அறிந்ததும் பலியான தொழிலாளர்களின் உறவினர்கள் சோகத்துடன் அங்கு திரண்டனர். இறந்தவர்கள் உடலைப்பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

    குறைந்த மின் அழுத்தம் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரியவந்துள்ளது. பெரு நாட்டு வரலாற்றில் மிக மோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த தங்கசுரங்கம் கடந்த 23 ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த பகுதியில் உள்ள பல சுரங்கங்கள் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது.

    • தொழிற்சாலை விபத்தில் 12 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சோடியம் சல்பேட்டை அம்மோனியாவுடன் கலக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் போய்சர் நகரில் ஒரு ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜவுளித்தொழிலில் பயன்படுத்தப்படும் காமாஅமிலம் தயாரிக்கும் பிரிவில் நேற்று மாலை 4.20 மணியளவில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.

    இதனால் ஆலையின் மேற்கூரை சேதமடைந்து விழுந்தது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 12 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்தும் சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். அவர்கள் பலியான 3 தொழிலாளர்கள் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் படுகாயமடைந்த 12 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆலையில் சோடியம் சல்பேட்டை அம்மோனியாவுடன் கலக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×