என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி20 உலககோப்பை கிரிக்கெட்"

    • குரூப் 1-பிரிவில் இலங்கை, நியூசிலாந்தை தவிர மற்ற அணிகள் 3 போட்டிகள் முடிந்து விட்டது.
    • நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன.

    சிட்னி:

    மழை காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் சுவாரசியம் குறைந்து காணப்படுகிறது.

    மழை காரணமாக இதுவரை 4 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே, நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான், அயர்லாந்து-ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா-இங்கிலாந்து ஆகிய போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    இதில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருந்தது. மழையால் அந்த அணியின் வெற்றி பறி போனது. மற்ற 3 போட்டிகளும் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    மேலும் அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் மழையின் விதியால் இங்கிலாந்து அதிர்ஷ்டம் இல்லாமல் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    மழையால் ஆட்டம் ரத்தாவதால் அரை இறுதியில் நுழைய 'குரூப்-1' பிரிவில் கடும் போட்டி நிலவுகிறது. இந்த பிரிவில் இலங்கை, நியூசிலாந்தை தவிர மற்ற அணிகள் 3 போட்டிகள் முடிந்து விட்டது. நியூசிலாந்து, இங்கிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா தலா 3 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து முதல் இடத்தில் இருக்கிறது.

    இலங்கை, ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் இந்த பிரிவில் எந்த அணிக்கு அரை இறுதி வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்ல இயலாத நிலை காணப்படுகிறது. ஒவ்வொரு அணியும் போட்டியில் உள்ளன.

    முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இந்த பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து-இலங்கை அணிகள் மோதுகின்றன.

    குரூப்-2 பிரிவில் இந்தியா 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே தலா 3 புள்ளியும், வங்காள தேசம் 2 புள்ளியும் பெற்றுள்ளன. பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகள் தாங்கள் மோதிய 2 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

    ×