என் மலர்
நீங்கள் தேடியது "ஆர்.எஸ்.கார்த்திக்"
- இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பரோல்.
- இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இயக்குனர் துவாரக் ராஜா இயக்கத்தில் ஆர்.எஸ்.கார்த்திக், லிங்கா, கல்பிகா, மோனிஷா முரளி, வினோதினி வைத்தியநாதன், ஜானகி சுரேஷ், மேக் மணி, சிவம், டென்னிஸ் இம்மானுவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் "பரோல்". இப்படத்தை டிஆர்ஐபிஆர் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் மதுசூதனன் தயாரித்துள்ளார். இப்படத்தி இசையை ராஜ்குமார் அமல் கவனிக்க ளிப்பதிவை மகேஷ் திருநாவுக்கரசு மேற்கொண்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழு மற்றும் திரைபிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.
இதில் பேசிய ஆர்.எஸ்.கார்த்திக் பேசியதாவது, இந்த படம் ஒரு தாய்க்கும், அவரது இரு மகன்களுக்கும் இடையிலான கதை. வட சென்னையை பற்றிய கதைகள் எப்பொழுதும் தீவிரமான மற்றும் அழுத்தமான படைப்பாக இருக்கும். அது போலவே இந்த படத்தின் உள்ளடக்கம் அனைவரையும் ஈர்க்க கூடிய ஒன்றாக இருக்கும். இந்த படம் தியேட்டரில் வெளியாகிறது, இந்த படத்திற்கு உங்களது ஆதரவு தேவை. இந்த படத்தின் வெற்றி இது போன்று உள்ள படங்கள் கொண்ட கதை வெற்றி பெற ஆரம்பபுள்ளியாக இருக்கும். அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.
- பீச்சாங்கை, என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக் தற்போது போக்குடி படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'வீச்சருவா வீசி வந்தோம்..' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
பீச்சாங்கை, என்னங்க சார் உங்க சட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த ஆர்.எஸ்.கார்த்திக், தற்போது கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'போர்குடி'. இவருக்கு ஜோடியாக நடிகை ஆராத்யா நடித்திருக்கிறார். மேலும் சங்கர் தாஸ், அருண்மொழி தேவன், மனோஜ் கண்ணன், செந்தில்குமரன், விஜயகுமார், ஜானகி அம்மாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 11 வில்லேஜர்ஸ் ஃபிலிம் புரொடக்ஷன் மற்றும் யாதவ் பிலிம் புரொடக்ஷன் எனும் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர்.தியாகு, ரோல்ஸ்டன் கருப்பசாமி, சரவணன் குப்புசாமி மற்றும் எஸ்.எஸ்.நந்தகுமார் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ரமேஷ் ஏழுமலை ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு செந்தமிழ் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் 'வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலுக்கான வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கும் வகையில் இந்த பாடல் உருவாக்கப்பட்டிருப்பதாக பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்பாடல் குறித்து நடிகர் ஆர்.எஸ்.கார்த்திக் பேசுகையில், ''ஒரு திரைப்படத்தின் முகவரியாக அந்தப் படத்தில் இடம்பெறும் பாடல்கள் அமைந்திருக்கும். முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களிலிருந்து பாடல்கள் வெளியாகும் போது, அவை லிரிக்கல் வீடியோவாக இணையத்தில் வெளியாகும். ஆனால் எங்கள் படக்குழு முதன் முறையாக 'வீச்சருவா வீசி வந்தோம்..' எனத் தொடங்கும் பாடலின் வீடியோவை வெளியிடுகிறோம். இந்தப் பாடலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களை போற்றிடும் வகையில் உருவாக்கி இருக்கிறோம். இதுவரை சுதந்திரப் போராட்ட தியாகிகளையும், தலைவர்களையும் போற்றி ஏராளமான திரைப்படப் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் போற்றும் வகையில் தமிழில் பாடல்கள் வெளியானதில்லை. இதன் காரணமாக 'வீச்சருவா வீசி வந்தோம்..' என்ற பாடலை அவருக்கு அர்ப்பணித்திருக்கிறோம்.'' என்றார்.