என் மலர்
நீங்கள் தேடியது "நீட்தேர்வு பயிற்சி மையம்"
- காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
- அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் பழைய பஸ் நிலையம் காமராஜர் ரோட்டில் தனியார் நீட் மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையமானது அங்குள்ள கட்டிடத்தின் 3வது மாடியில் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இங்கு படிக்கும் 17 வயதான ஆனந்தி என்ற மாணவியின் தந்தை இன்று மாலை பயிற்சி மையத்துக்கு வந்தார். மாணவி ஆனந்தியுடன் பேசிக் கொண்டிருந்த போது, தந்தை மணிகண்டனை தள்ளிவிட்டு சென்ற மாணவி ஆனந்தி 3-வது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தார். இதில் அவருக்கு இடுப்பு மற்றும் தலையில் பலத்த காயங்கள்ஏற்பட்டது.ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடினார். உடனே அவரை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவி ஆனந்தி எதற்காக மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. காதல் விவகாரத்தில் தந்தை கண்டித்ததன் காரணமாக ஆனந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் நீட் தேர்வு பயிற்சியை சரியாக பயிலாததன் காரணமாக தந்தை திட்டியதால் தற்கொலைக்கு முயன்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.